தேவை ஒரு புரட்சி
ஆகஸ்ட் பதினைந்து,1947,
ஆகஸ்ட் பதினைந்து,2012.
அறுபத்தாறு ஆண்டுகள்.
இந்திய நாட்டில் ,
ஈடில்லா முன்னேற்றம்.
தொழில் நுட்பப் பூங்காக்கள்,
விண்வெளிப்பயணம்
அணு ஆயுத சோதனைகள்,
அனைத்துத் துறையிலும்,
அன்னியர் புகழும்
அதிசய முன்னேற்றம்.
ஆனால்,
பாரதியார் பாடிய,
பாப்பா பாட்டு,,
ஜாதிகள் இல்லையடி
எங்கே சென்றது?
இறைவன் பெயரால்,
இனக்கலவரம்.
மதக்கலவரம் .
தீவீர வாதிகளின்
குண்டு வெடிப்புகள்.
ஈவு இரக்கமற்ற
அரக்கச் செயல்கள் .
ஜாதி அரசியல்,
ஜாதி சங்கங்கள்,
சமவாய்ப்புகள்,
சம்பந்த மில்லா,
அமைப்புகள்.
பொருளாதார,
ஏற்ற தாழ்வுகள்.
படித்தவர்கள்
பட்டதாரிகள்.
மகிழ்ச்சியற்ற,
போக்குகள்.
காதல்!காதல்!
காதல் போயின்
சாதல் /?சாதல்?
ஆண்கள் மட்டு மின்றி
பெண்களும் மனதில்,
ஒரு சூனியத்தை
சுமக்கும்,
சுதந்திர போக்கு.
குடிமகன்
போதைக்கு அடிமை.
பேதைக்கு அடிமை,
இதுவே மடமை.
தன து உயிர்
போக்கும் ,தரம் இல்லா
போக்கு.
சுதந்திரத்திற்கே /
ஒரு களங்கம்.
கலப்புமணம் ,
பெருகட்டும்.
காதல் மணம்
பெருகட்டும்.
ஜாதீய சீர் திருத்தங்கள்,
மலரட்டும். ஆனால்,
பட்டதாரிகளிடையே,
பொறியியல்
வல்லுனரிடையே,
அமைதியில்லா சூழல்
சாபக்கேடு.
இதற்கு
மன அமைதிக்கு,
தேவை ஒரு
புரட்சி.!!
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக