புத்தாண்டு வாழ்த்து
இரண்டாயிரத்து  பன்னிரண்டு 
புத்தாண்டு,
 இயற்கையின் 
 சீற்றங்களின்றி
இன்னல்கள்  இல்லா,
இன்பந்தரும் 
ஆண்டாகட்டும்
ஆண்டவன் தரும் 
அல்ப ஆயுள் ,மூப்பு ,
நோய் ,மரணம்,
உள்ளத்தின் உளைச்சல் 
தப்ப முடியாத 
துன்பங்கள் ,
வேதனைகள்
என்பதை 
உணர்ந்து தெளிந்து 
கள்ள வழி,
கறுப்புப்  பணம் 
ஊழல்
கையூட்டு,
பாவங்களின் 
சேமிப்பு ,
தப்ப முடியா,
பதிப்பு,
என உணர்ந்து,
இறைவனளித்த 
பணியில்,
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
நேர்மை 
,சத்தியம்,
காலம் தாழ்த்தாமை,
போன்றவை தான்,
பாப விமோசனம் 
எனத் தெளிந்து,
உயரிய 
எண்ணங்கள்,
உள்ளத்தில் 
மிளிர,
ஊக்கம் பெற்று,
ஞானம் பெற்று,
ஆன்மீக ஆண்டாக ,
ஆன்ம சுகம் தரும்
ஆண்டாக,
பார் காக்கும் /
பார் படைக்கும்,
பகவானின் அருள் பொழிய 
அனந்த 
சுகமளிக்கும்,
ஆனந்தம் பொங்கும் 
ஆண்டாக 
அமைய
புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிரார்த்தனைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக