வெள்ளி, நவம்பர் 11, 2011

maarumo intha avalam? maatruvom.

மாற்றுவோம் இந்த அவலம்

மண்ணில் பிறந்தவர்கள்
மடிவது உறுதி
என்றறிந்தும்
தரணியில்
வாழப்பிறந்தவர்கள்,
தரம் கெட்டு,
மதி கெட்டு,
தற்கொலை ,
கொலை ,
என்ற
தருணர்கள் 
  செல்லும் பாதை,
தாயகம்
வருந்தும்
பாதை.
தாய்-தந்தையர்களை,
தவிக்க வைக்கும்
பாதை;
கள்ளக் காதலுக்காக,
கணவனைக் கொல்லும்,
காரிகை!!!
கண்ணகி,
கற்புக்கரசி
பிறந்த
நாட்டில்.
களங்கம்!!
ஐயா!!
களங்கம்!!
ஒருவரது,
தற்கொலை,
கொலை,
பலரது
வேதனைகள்.
அனைவரையும்,
அலற வைத்து

ஆறாத் துயரத்தில்
மூழ்கடிக்கும்
 குணம்,
படரும் போக்கு,
ஒரு தோற்று நோயாகும்.

அன்றாடப்  பத்திரிகைகளில்,
அதற்கென்றே ஒரு பக்கம்.
கடவுளுக்கும்,
காவல் துறைக்கும்,
ஒரு சவால்.
ஐயோ!!!
இந்த களங்கங்கள்.
எதற்கு?

கல்வி முறைக்கா/
சீர்திருத்த எண்ணங்களுக்கா.?
சமுதாய மாற்றங்களுக்கா?
பகுத்தறிவு   வாதிகளுக்கா?
திரைப்படங்களுக்கா?
சின்ன திரைகளுக்கா.?
ஆங்கில  போதனா
  முறைக்கா/?
எனக்குள் ஒரு எண்ணம்,
அறம் செய விரும்பு ,
ஆறுவது சினம் ---என்ற,
ஆரம்பக்கல்வி,
இன்று காணாமல்,
போனதாலோ/?
சினம் ஆறாமல் போனதோ/??
எதிர்காலம்
எரிமலையாகும்
அபாயங்கள்.
இளைஞர்,
விழித்தெழ
தேவை ஒரு
புரட்சி.
விவேகம் தேவை.
விழிப்புணர்வுகள்.
அறிவியல் முன்னேற்றம்.
தொழில் நுட்ப பூங்காக்கள்.
மன அழுத்தம்.
மண்  ரத்துகள்.
பொருளா/?
தாரமா/?
பொருளாதாரமா?
நெஞ்சம்
பொறுக்கவில்லை .
மாறுமோ/?
இந்த அவலம்.
தேவை ஒரு அறப்புரட்சி.






                                                  (இளைஞர்கள்)

கருத்துகள் இல்லை: