வெள்ளி, நவம்பர் 11, 2011

spirituality and peace

அமைதி தரும் ஆன்மிகம்.

அனுதினமும் ஆண்டவனைத் தொழுதால்,
அஷ்டலக்ஷ்மிகளும் ,அஷ்டமா சித்திகளும்,
ஆன்ம திருப்தியும் ,ஆன்ம ஐக்கியமும்,
ஆன்ம அமைதியும் ,ஆனந்தமும் பெறலாம்.

இவ் உலகு   அழியும் உலகு.
இன்னல்களும் பல ,இடையூர்களும் பல.
உள்ளத்தில்  உணர்வுடன், உரிமை மனதுடன்,
உலக நாதனைத் தொழுதால்,
உணரலாம் பேரானந்தம் தனை.
ஊனமுற்றோர் பலர் ,ஊமையானோர் பலர்,
ஊர்ந்து செல்வோர் பலர்
,ஊனக்கண்  உடையோர் பலர்.
ஊரார் பேச்சுக்கு ,ஊர் மக்கள் ஏச்சுக்கு ,
ஆளானோர் பலர்,
எள்ளி நகையாடுவோர் பலர்.
ஏளனப் பேச்சு பேசுவோர் பலர்.
எண்ணி ஏற்றம் தரும் ,
என்றும் இறைவனை நிலைத்து
வழிபடுவோர் சிலரே.
ஏக்கமுடன் பிறர் நலமுடன்,
இருப்பதைப் பார்த்து,
ஏங்கும் தன்மை உடையோர் பலர்.
எக்கணமும் இறைவனைப் பணிந்து ,
எவ்விதச் சலனமுமின்றி ,
வாழ்வோர் சிலர்.
ஐக்கிய மனதுடன் ,
ஐயமின்றி வாழ்ந்து ,
ஐம்புலன் அடக்கி,
ஜகத் ரக்ஷ்சகனை
ஒப்பில் உலகில் ,
ஓங்கு புகழ் பெற்று,
ஒப்பில் இறைவனின்,
அருள் பெறுவோர் சிலரே.
அவுடதமாக   விளங்கும் ,
ஆன்மீக வழியில்,
அமைதி பெற்று வாழ்வோர் ,
வையகத்தில் உலகை வென்று
வாழ்வாங்கு வாழலாம்.





,

கருத்துகள் இல்லை: