வியாழன், டிசம்பர் 01, 2011

clean the temple tank and temple environment pakuththarivaalar sinthanaikku

பகுத்தறிவாளர்கள் சிந்தனைக்கு

சுத்தம் சோறு போடும் என்பது பழமொழி.அதாவது உடல் தூய்மை,உள்ளத்தூய்மெய்மனிதனுக்கு உடல் ஆரோக்கியம்,உள்ள ஆரோக்கியம் அளிக்கும்.

பாத ரக்ஷை என்பது இராமாயண காலத்திலேயே உண்டு.பல மகான்கள் கோவணத்துடன் தான் வாழ்ந்துள்ளனர்.உலகில் எங்குமே செல்லாமல் உலகில் உள்ள   அனைவருக்கும் ஆன்மீக ஞானம் அளித்தவர் ரமண மகரிஷி.அவர் இறுதிவரை அணிந்தது கோவணம்தான்.

இந்த இரண்டையும் கேலிசெய்வது ஆரம்ப கால இந்து தர்ம சாதுக்களை மட்டம் தட்டுவது.
பரதன் பாதுகை வைத்து ஆட்சி செய்தான் என்று மகிழும் நாம், ,கிரிவலப்பாதையில் செருப்புப்போட்டு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடும்பாவி எரிக்கிறோம்.நான் திருவண்ணாமலை கிரிவலம் சென்றேன். கார்த்திகை தீபம் அன்று சென்றேன்.கோயில் மதில் சுவரைச்சுற்றி மல ஜலம் கழித்து நாற்றம்.எத்தனையோ கோயில் குளங்களை குப்பை மேடாக்கும் காட்சிகள்.கடவுள் இல்லவே இல்லை.என்ற வசகத்தைக்கண்டு படித்து கொதிப்படையாத இந்து நெஞ்சங்கள்,செருப்பு போட்டதற்கு செய்த ஆர்பாட்டம் வெட்ககேடானது.மேலும் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோயில் வீட்டில் குடியிருப்போர் கோயில் நிலம் குத்தகை எடுப்போர் என பல ஊழல்கள்.இவர்களுக்கு பணபலம் அதிகாரபலம்.சிவில் வழக்குகள்.பாத ரக்ஷை அதாவது செருப்பு. அழகான தமிழ்சொல் பாத அணி.அணிகலன்.அதை கல்லும் முள்ளும்,மலமும் மூத்திரமும் நாய்  கழிவும் மாட்டின் சாணியும் உள்ள கிரிவலப்பாதை. தூய்மை எங்கே/எச்சில் வேறு.சிந்திப்பீர்.பகுத்தறிவாளர்களே.

கோயில்கள் காலத்திற்கேற்ற மாற்றம் அடைகின்றன,பக்தர்கள் வசதிக்காக குளிர் சாதனங்கள்,மலையேற வசதியாக பேருந்துகள்,இழுவை ரயில்கள்,கரிபிடிக்காமல் இருக்க கர்ப்பூரம்  ஏற்றாமை என எவ்வளவோ புதுமைகள் ஏற்கிறோம். கோவணம்  பஞ்சகச்சத்தைவிட ஆணுறுப்பு ஆடுவது தெரியா பிரம்முதாஸ் என்ற அரைக்கால் சட்டைக்குத்தடை. புடவையை விட சூடிதார் பெண்கள் அங்கம் மறைக்கும் சாதனம்.மரப்பட்டை அணிந்த மனிதன் நாகரீக வளர்ச்சிக்கேற்ற ஆடைகள் மாறுகின்றன.நமது சம்பிரதாயங்களும் மாறுகின்றன, கோயில்களில் குடுமி வைத்த அர்ச்சகர்கள் குறைவு. இதை எல்லாம் சிந்தித்து ஆக்கபூர்வ செயலில் ஈடுபடாமல் சினேகா செருப்புபோட்டு நடந்தாள்.இன்னொருவன் புகைபிடித்தான் என்று போராடுவது பைத்திக்காரத்தனம். இளைஞர்களே சிந்தித்து களம் இறங்குவீர் கட் அவுட்டுக்கு அபிஷேகம் செய்யும் பாலை அநாதை ஏழை குழந்தைகளுக்கு கொடுங்கள்.சுவாமிக்கு பால் அபிசேகத்தை கிண்டல் செய்த பெரியார் கட் அவுட்டுக்கு அபிசேகம் செய்யும் பகுத்தறிவாளர்களை  என்ன செய்வார்.
என்மேல் ஆத்திரப்படாமல் சிந்திப்பீர். ஆத்திரக்கரனுக்கு புத்திமட்டு.

கருத்துகள் இல்லை: