வெள்ளி, டிசம்பர் 02, 2011

ABROGATION-ATONEMENT

 துன்பங்களுக்கு பரிகாரம்.


மனிதர்கள்  மடிவது திண்ணம் என்பதை மறக்கக்கூடாது என்பதற்காகவே  காடுடைய சுடலை பொடிபூசி என்ற  சிவத்துவம்.மனிதன் தன் வாழ்நாளில் பிறந்தது முதல் இருபது ஆண்டுகள் பெற்றோரையோ மற்றொரையோ சார்ந்து இருக்கிறபடியான படைப்பில் உள்ளான்.இதில் அனாதைகள் வேறு.செல்வந்தர் ஏழை என்ற பாகுபாடு. வசதிகள் வாய்ப்புகள் வேறு. அழகு அழகற்ற நிலைவேறு. அறிவு அறிவற்ற நிலை.மனநிலை பாதிக்கப்பட்டோர்.சித்தபிரம்மை. விபத்துக்களால் ஊனமானவர்கள். பிறவியில் ஊனமானவர்கள்.ஏழ்மை நிலையில் இருந்து வசதிகளும் உன்னத நிலையும் அடைந்தவர்கள்.  மிகப்பெரிய  உயர் நிலையில் இருந்து மற்றவர்கள் எள்ளிநகையாடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என மனித ரகங்கள்.

இந்நிலையில் மனிதனுக்கு மரணம் என்பது பாவத்தின் சம்பளம் என்பதும் பாவமன்னிப்பு உண்டென்றும் மதங்கள் கூறுகின்றன,தன் தவறுகளை உணர்ந்து பிரார்த்தித்து இறைவனிடம் முற்றிலும் சரணாகதி அடைந்து மீண்டும் எவ்வித பாவச்செயல்களும்செய்யாமல் இருப்பதே பரிகாரம்.ஏழைகளுக்கு உதவலாம் .ஆனால் ஏழையென்ற போர்வையில் ஏமாற்றுக்காரர்களும் .பிச்சைக்காரர்கள்  என்ற போர்வையில் பல சமுதாயக்கேடுகள் நடப்பதால்   தான் "பாத்திரம் அறிந்து பிச்சைபோடு கோத்திரம் அறிந்து பெண்ணைக்கொடு" என்ற முதுமொழி.

நம் துன்பங்களுக்கும் நோய்முதலியவற்றிற்கும் பரிகாரம்

இறைவனை பிரார்த்திப்பதும் சத்தியம் நேர்மை பரோபகாரம் போன்றவற்றை பின்பற்றுவது தான். ஆணவம், பொறாமை,பேராசை,கோபம் போன்றவற்றை விட்டு விடுவதுதான்.அறத்துடன் வாழ்வது தான் பரிகாரம்.தகடு தாயத்து என்பது மிகவும் நுண்ணிய அறிவியல்.அதை அறிந்தவர்கள் வணிகநோக்கத்துடன் கடை விரிக்க மாட்டார்கள்.பல்லாயிரக்கனகில் செலவழித்து விளம்பரம் செய்பவர்களிடம் ஏமாறாதீர்கள்.நம் உள் மனம் அவ்வாறான இடத்திற்குச் சென்றாலே தடுக்கும். அதை உணர்ந்து செயல் படுங்கள்.
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் இவை நான்கும்
இழுக்கால் இயன்றது அறம் .  --- என்றார் வள்ளுவர்.
பரிகாரம் இறைவழி நடத்தல்.மனித்தத் தன்மையோடு வாழல்.

சிந்தியுங்கள் --செயல்படுங்கள்.

கருத்துகள் இல்லை: