வியாழன், டிசம்பர் 01, 2011

changing thoughts old is gold old age homes

பழையன புதிய முறையில்
முதியோர் இல்லம்.


இன்றைய சமுதாயம் நல்ல வற்றை ஏற்கிறதா?ஏற்கும் சூழ்நிலை உள்ளதா/?வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ற நவீன கால தொழில்நுட்ப காலத்திற்கேற்ப நம் செயல்பாடுகள் பண்பட்டு உள்ளதா? இல்லை என்றால் ஏன்/?ஆம் .என்றால் எப்படி?

இன்று இளம் தலைமுறையினர்  அனைவரும் இளங்கலை முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்.பட்டம் பெரும்  முன்பே வேலை உத்திரவாதம்.பெற்றோர்கள் மிகவும் தங்களை தங்கள் தனிப்பட்ட ஆசைகளை ஒதுக்கி  அல்லது துறந்து தான் பெற்ற ஒன்று அல்லது இரண்டு வாரிசுகளை மேலை நாட்டிற்கோ அல்லது அண்டை மாநிலத்திற்கோ நல்ல வேலைக்கு அனுப்பி மகிழ்கின்றனர்.குழந்தைகளும் இறக்கை கட்டி பறந்து விடுகின்றனர்.
அவர்கள் பாசத்திற்கு குறைவில்லை/பெற்றோரின் கனவுகள் ஒன்றே தன் குழந்தை நல்ல பணியில் அமைதியான சூழலில் பணியாற்றவேண்டும் என்பதே.பாசமுள்ள குழந்தைகள் தன் பெற்றோர் பட்ட பொருளாதார மற்றும் தியாகங்களை உணர்ந்து அன்பைப்பொழிய தொலை பேசி கணினி என்ற தொலை தொடர்பு சாதன்களைப் பயன்படுத்துகின்றனர்.பணம் அனுப்புகின்றனர் .விமான டிக்கட்டுகள் வாங்கி அனுப்புகின்றனர். மகிழ்விக்கின்றனர்.அனால் இவை எல்லாம் நல்ல மனைவி அமையும் போது.
தான் படித்துள்ளோம்/ பட்டம் பெற்றுள்ளோம்.நாமும் பணியாற்றுகிறோம் என்ற எண்ணத்தில்  இளம் தலை முறையினர் எனக்கு அப்பா என்ன செய்தார்/அம்மா என்ன செய்தார்/அப்பா தண்டம்  நான் ஆசைப்பட்டதை அவர் வாங்கித்தரவில்லை.அவர் என்ன செய்தார்.என பெற்றோரை உதாசீனம் செய்யும் குழந்தைகளும் உண்டு.

வயதானால் மடிவது உறுதி. பிரிவது நிச்சயம் என்ற மன நிலையில் இன்றைய தலை முறையினர்  பண்பட்டு வாழத் தொடங்கி விட்டனர்.அன்றைய தலைமுறையினர் பாசம் என்ற வலையில் பிரியாமல் வறுமையில் வாடினர்.இன்றைய தலைமுறையினர் வசதி வாய்ப்புகளை இழக்காமல் பாச நேசத்தோடு பண்பட்டு மென்மையாக வாழ்கின்றனர்.
அன்றைய பிரம்மச்சர்யம் ,க்ருஹஷ்தம்  ,வானப்ப்ரஷ்தம்  ,சன்யாசம் என்ற வாழ்க்கை நிலை புதிய சூழலில் முதியோர் இல்லங்களாக மாறிவருகின்றன.
பழைய கோட்பாடுகள் என்றென்றும் புதிய பெயரோடு வாழ்கின்றன .





























கருத்துகள் இல்லை: