தாஜ்மஹால் 
ஜனாப்   சாஹர் லுதியாநபி 
தாஜ்மஹலை ஷஹ்ஜஹான் 
கட்டுவித்து,
தன் காதலை  அமரக் காதலாக்கினான்.
ஆனால் 
தாஜ் மகாலை கட்டி 
அவன் ஏழையின் காதலை 
கேலிச்சித்திரம் ஆக்கிவிட்டான்.
என்னருமைக்காதலியே!!
  தாஜ்மஹால் காதலின்
அன்புச்சின்னமாகத் தோன்றலாம். 
இந்த இறந்த பேரரசரின் 
 கல்லறை கண்டு மகிழும் காதலியே!
நீ  உன் இருள் சூழ்ந்த உன் வீட்டினைப்பார்.
உலகில் எண்ண முடியாக் காதலர்கள்,
அவர்களின் காதலும் உண்மையானதுதான்.
ஆனால் வறுமையின்  காரணமாக
அவர்களின் காதல் ஒளிரவில்லை.
தஜ்மஹாலைப்பார்!
இந்த கல்லறைகள் ,
இந்த கோட்டை ,மதில் சுவர்கள்,
அழகுமிளிரும் தூண்கள்.
பூவேலைப்பாடு நிறைந்த ,
சுவர்கள் ,எழில் பூங்காக்கள்,
 வியர்வையும் 
மிளிரும் விளக்குகள்,
உதிரமும் 
உழைப்பும் 
முன்னோருடையது.
இந்த தொழிலாளர்கள் 
காதலிக்கவில்லையா? 
ஆனால் அவர்களின் நினைவாக 
எந்த அடையாளமும் இல்லை.
சிறிய மண் விளக்குகூட இல்லை.
பணம் படைத்தவர்கள்,
பாட்டாளியின் ரத்தம் 
உறிஞ்சி 
ஏழைகளின் காதலை
ஏளனத்திற்கு 
உள்ளாக்கியுள்ளனர்.
என் அருமைக்காதல்,
கண்மணியே,
நாம் இந்த அவமானத்தின் 
சின்னம் 
தாஜ்மஹாலில்,
சந்திக்க வேண்டாம்.
வேறு எங்காவது 
சந்திப்போம்.
.
 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக