ஞாயிறு, ஜனவரி 08, 2012

இறைவன் அனைவருக்கும் ஒருவனே.


ஒரு ஊரில் இப்ராஹீம் என்ற கடவுள் பற்று உள்ளவன் இருந்தான் .  தன் மதத்தில் மிகவும் பற்றுகொண்டவன்.அவன்  வீடு ஊருக்கு  எல்லையில் இருந்தது.அந்த வழியில் வரும் வழிப்போக்கர்களுக்கு உணவளித்து உபசரிப்பதில் மிக மகிழ்ச்சி கொண்டு விளங்கினான்.அவன்  தன் கடவுளின் கிருபையால் தான் உணவளிக்க முடிகிறது
என நினைத்தான்.ஒரு  நாள் ஒரு வயதான முதியவர் அங்கு வந்தார்.அவர் மிகவும் பசியுடன் இருந்தார்.
இப்ராஹீம் உணவளிக்குமுன் தன் இறைவனைத் துதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.வந்த விருந்தினர்களும்  தொழுகையை  செய்யவேண்டும்.
ஆனால் அன்று வந்த முதியவர் தான் வணங்கும் இறைவனை வழிபடுவேன் என்று இப்ராஹீம்  தொழுகையை தான் செய்ய மறுத்துவிட்டார்.

இப்ராஹீம் அந்த பெரிவருக்கு உணவளிக்கவில்லை,பெரியவர் சென்றதும்   அங்கு    பெரியவருக்கு     இன்று     வரை   உணவளித்து காப்பாற்றினேன்   . இன்று  அவர்  வேறு  மதம்  என்று உணவு  அளிக்கவில்லை .
இறைவன் அனைவருக்கும் ஒருவரே  என்ற  தேவ  ஒலி கேட்டது .
இப்ராஹீம் உடனே   முதியவரை   தேடிச்  சென்று  பார்த்தான்  முதியவரும்   இறைவன் ஒருவரே
என்றார் ,இப்ராஹீம் மிக ஆச்சரியப்பட்டான் .
இறைவன் அனைவருக்கும் ஒருவராக இருந்துதான் காப்பாற்றுகிறார்  என்ற உண்மை  தெரிந்தது இப்ராஹிமுக்கு. நமக்கும் அது புரியவேண்டும்.


கருத்துகள் இல்லை: