ஞாயிறு, ஜனவரி 08, 2012

ORU THULI HINDI KAVITHAI TAMILAAKKAM

ஒரு மழைத்துளி

காரில் இருந்து,
பிரிந்த ஓர்
மழைத்துளி,
மனதில்கலக்கமுற்று,
பல எண்ணங்கள்
தோன்ற
நிலம் நோக்கி
வந்தது

நான் சாக்கடையில்,
விழுந்து,
வீணாவேனோ?
தீச்சட்டியில்
விழுந்து,
தீய்ந்து போவேனோ?
என் வாழ்க்கை
எப்படிபோகுமோ?
ஏதாகுமோ?
நினைத்து நினைத்து,
எண்ண அலைகளால்,
மன பீதியுடன்,
மண்ணின் அருகில்
வரும் போது,
ஒரு அனுகூலக்காற்று.
அதை கடல் மேல்
கொண்டு சென்று,
ஒரு சிப்பியில் ,
சேர்த்தது.
அது விலை மதிப்பற்ற,
முத்தானது.

அவ்வாறே,

அவனியில் பிறந்து
பரந்த உலகில்
கவலைகள் கொண்டு,
இல்லம் துறந்து,
அலையும்மனிதனும்,
அனூகூலவாய்ப்புப்பெற்று,
அவனியில்,
அரும் புகழ் பெற்று,ஆஸ்திகள் ,
அனுபவ அறிவு பெற்று,
அவனியில் வாழ்கிறானே.
 

கருத்துகள் இல்லை: