ஆணவம் அழிந்தது
ஹிந்தி கவிதை.
நான் ஒரு கவிஞன் ,
புவி புகழும் புலவன் ,
என்ற மமதை யோடு,
மாடியின் சாளரத்தில்,
நின்று,
ஆணவத்தோடு,
அகிலம் என் கையில் ,
என்றே இருந்த நேரம்,
காற்று ஒன்று வீச,
தூசி சிறு துரும்பு,
கண்ணில் விழ
துடித்தேன் ,
பல மணித்துளிகள்.
துரும்பின் எச்சரிக்கை,
என்னைத் திகைக்க
வைத்தது.
ஆணவக் கவிஞரே,
அவனியில்
ஆணவம் ஒழிய
போதுமே ஒரு துரும்பு.
செயல் மறந்து ,
செயல் இழந்து ,
திகைத்து நின்ற
மணித்துளிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக