வெள்ளி, டிசம்பர் 30, 2011

raheem ke dhohe---tamil

ரஹீமின் ஈரடி.


ஹிந்தியில் ரஹீமின் தோஹை புகழ் பெற்றது.
அவர் பேரரசர் அக்பரின் சேனாபதி.வடமொழி,அரபி,பாரசி போன்ற மொழிகளின் பண்டிதர்.அவரின் ஈரடி கருத்துரை.

௧.ஒருவர் கூறிய கடுஞ்  சொற்கள், 
முயன்றாலும் திருத்திக்கொள்ள முடியாது.
திரிந்த பால் கடைந்தாளும்
 வெண்ணெய் கிடைக்காது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

௨.மரங்கள் பழங்கள் சாப்பிடாது.
ஏரி நீர் பருகாது.
அவ்வாறே,
நல்லவர்கள் மற்றவர்களுக்காகவே,
சொத்து சேர்ப்பார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

௩.அனைத்து செயல்களுமே,மெதுவாகவே  நடக்கும்,.
தோட்டக்காரன் நூறு குடம் தண்ணீர் ஊற்றினாலும்,
பருவ காலத்தில் தான் பழுக்கும்.
௫.ஒரு செயலை செம்மையாகச் செய்தால்,
அனைத்து செயலும் செம்மையாக நடக்கும்.
அனைத்து செயலும் செய்தால்,ஒரு செயலும் நடக்காது.
வேருக்கு ஊற்றும் நீரால்,மரம் முழுவதும் பூத்துக் குலுங்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
௫.மற்றவர்களிடம் யாசிக்கச் சென்றால்,
பெரியவர்களும் சிறியவர் ஆவர்.
மகா பலி சக்கர வர்த்தியிடம் யாசிக்கச் சென்ற,
நாராயணன் குள்ளமாக,௫௨ அங்குலமாக ஆனாரே.
************************************************************
மகான்கள் தான் தான் பெரியவர் என்று ஒருபொழுதும் சொன்ன தில்லை.
வைரம் ஒருபொழுதும்  தன் விலை ஒரு லக்ஷம் என்று கூறுவது இல்லை.
மற்றவர்கள் தான் அதன் மதிப்புக் கூறுவார்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

.





a

கருத்துகள் இல்லை: