ஞாயிறு, நவம்பர் 13, 2011

prarththanai

இறைவா,


மனிதனுக்கு மட்டும்,


மனம் அளித்தாய்,--நன்றி.


அன்பு, அறம்,அரவணைப்பு,

தியாகம்,நேர்மை,தன்னலம்,

கருதாமை ,களங்க மற்ற,


மானம், மரியாதை,என்ற


உயர்ந்த பண்புகளைப் படைத்தாய் .


மிக அமைதியான மனித,
 இனம் இனிய வாழ்க்கை.--ஆனால்

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு,


இல்லா

கடமை தவறும்,
கையூட்டு ,
ஊழல்,
பொதுநலம்,
கருதாமை,
சுயநலத்திற்காக,
மானுட அறம் அகற்றல்,

நடுத்தர மக்களை
சுரண்டி,
மனம்போல் வாழும்,
அரசாங்க ஊழியர்கள்,
நிர்வாக அலுவலர்கள்,
ஆளும் அமைச்சர்கள்,
காவல் துறையினர்,-என
படைத்து
பதற வைக்கும்
குணங்களை
படைத்தது,
இறைவா,
உன்
அறத்திற்கே,
களங்க  மன்றோ?
உன்னை நம்பா,
ஒரு
வர்கத்தை,
மன எண்ணங்களை,
மனதில்,
உருவாக்கும்,
நீ அல்லவோ
குற்றவாளி.
முன்வினைப்பயன்,
என்று
சில

அநியாய
அதிகாரிகளை,
அமைச்சர்களை,
அரியணையில்,
அமரச்செய்து,
நேர்மை,
சத்தியம்,
விதிப்பயன்,
வினைப்பயன்
என்று
துன்பத்தில்
மூழ்குவது,
இறைவா,
உன் தர்மத்தில்,
சரி என்றால்,
!!!இறைவா!!!
நீதான்
குற்றவாளி.
  உலகில்,
இன்று
பிறந்தவர்கள்,
முற்பிறவி
அறியாதவர்கள்.
முன்
வினைப்பயன்
புரியாதவர்கள்.
அறிவியல்
உலகில்,
நேரில்
காண்பவை
உண்மை
 என
உணர்ந்து,
செல்பவர்கள்,
நீ
 அளிக்கும் ,
மறை
முக,
தண்டனை
உணராதவர்கள்.
நோய்
வந்தால்.
மருத்துவ
 மனை,
கட்டணம்
  நினைத்து,
கையூட்டு
பெறுபவர்கள்.
நேர்மை
தவறுபவர்கள்
மரணம் 
 என்பதை,
வரும்போது
உணர்ந்து,
வாழ்க்கை
நிரந்தரம்
என்று,
நிலையில்லா
செல்வம்
சேர்க்க,
நேர்மை
 தவறுபவர்கள்
எனவே,
வெளிப்படையாக,
இறைவா,
உன்
மீதே,
குற்றம்
சாட்டுகிறேன்,
மக்கள்
மனதில்
தீய
எண்ணங்கள்,
அசுர
குணங்கள்
எழுப்பும்
நீயே,
குற்றவாளி.
அறிவளித்ததாய்
நீ
நினைத்தால்
அதை
தீய வழியில்,
பயன் படுத்தும்
சிந்தனை
ஏன்
கொடுத்தாய்.??
நீயே
இறைவா
நீயே
குற்றவாளி.
குற்றச்சாட்டிற்கு
விடை கொடு.
முன்வினை,
முன் ஜன்மம்
பாவம்
போன்ற விடை,
நிகழ்கால
வாசிகளுக்கு
வாசிப்பால்
புரியாது.
புரிய வை.
என்
குற்றச்சாட்டுகளுக்கு,
புரியாத
புதிருக்கு,
இறைவா,
விடை அளிக்க
புறப்பட்டு.
விழித்தெழு.
விழித்தெழ வை.
நானே கடவுள்
அஹம் பிரம்மாஸ்மி.
என்று
ஒவ்வொரு
மனிதனையும்
நீதி
தேவனாக்கு.




,






v









கருத்துகள் இல்லை: