ஞாயிறு, நவம்பர் 13, 2011

saakhee=kabeer eeradi

கபீர் ஈரடி(கபீர் சாகி)


(௧)



நற்குரு சத்குரு  போன்று யாரொரு உறவும் இல்லை.
.நல்ல தத்துவம்  ,அறிவு போன்று  வேறொரு சிறந்த   தானம் இல்லை.
பகவானைப்போன்று யாரொரு நன்மை தருபவறும் இல்லை
 பக்தனைப்போன்று  எந்த ஒரு  வுயர்ந்த ஜாதியும் இல்லை..
सतगुरु सवां को सगा,सोधी सई  न दाती;  हरिजी सवां न को हितू,हरजन सई न जाति II 
(௨)

சத்குருவின் மகிமை அளவற்ற எல்லை யுடையது.
அவர் செய்த உபகாரம் அளவில் அடங்காதது.
அவர் என் அறிவுக்கண் திறந்தவர்.
அளவற்ற அருள்  அனந்தத்தை தர்சிக்கச் செய்தவர். 
(அறிவுக்கண்   தந்து    இறை அருள்  பெற மூல
காரண கர்த்தர்.) 

सतगुरु की महिमा अनंत ,अनंत किया उपगार I 
लोचन अनंत  उघाडिया ,अनंत दिखावंहार II


(௩)

இராம நாமம் என்ற அறிய பொக்கிஷத்தை சத்குரு வழங்கினார் .

அதற்கு ஈடான ஒரு குரு காணிக்கை என்னிடம் எதுவுமில்லை.

நான் எப்பொருளால் குருவின் மனதை திருப்தி செய்ய முடியும்.

குரு காணிக்கை செலுத்தும்  அளவில்லா ஆவல்
மனதிற்குள் அடக்கி வைத்துள்ளேன்.

राम नाम कै पतंत्रै ,देबे कौं कछ नांही,I  क्या ले गुर संतोषिये ,हौंस रही मन मांही .

கருத்துகள் இல்லை: