வியாழன், மே 30, 2013

ஆனந்தம் என்றாலே பொருளுள்ள வாழ்க்கை

பொருள் என்றால் செல்வம்,

பொருளுள்ள என்பதில் செல்வமும் அடங்கும் .

அர்த்தமும் உள்ளது.

வடமொழியிலும் அர்த்த என்பதற்கு செல்வம் ,பொருள் என்ற

இரட்டை பொருள்.

பொருளா ?தாரமா.? என்றால்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

என்று இவ்வுலக வாழ்வில்

பொருளும் இணைந்தே புகழ் பெற்றுள்ளது.

பொருள் -பொருள்  இல்லாதவருக்கு

இவ்வுலக ஆனந்தம்  எங்கே?

இதுதான் வையகம். ஐயோ!பாவம் !நல்லவன் !

தரணி ஆள  ,
பொறுத்தார் பூமி ஆள்வார் 

பொறுமை  கடலினும் பெரிது.

இந்த பொறுமை வையகத்தில் சாத்தியமா?

குனியக் குனியக் கொட்டுவோரே அதிகம்.
ஐயோ !பாவம்! நல்ல மனிதர் !

என்பதை ஆராய்ந்து ஹிந்தியில் ஒரு கதை.

யார் ஏமாறுகிறார்களோ அவர்களையே சமுதாயம் 

ஐயோ பாவம் நல்ல மனிதர்கள் என்கிறது.

பல ஆண்டுகளாக வாடகை உயர்த்தாத 

வீட்டுச் சொந்தக்காரர்,

குறைந்த வாடகையில் வரும் ரிக்ஷா தொழிலாளி,

கதை,கட்டுரை எழுதி பணம் கேட்காத எழுத்தாளர் 

என ஒரு பெரிய பட்டியலுடன் நகைச்சுவை 
கலந்த கதை  ஐயோ !பாவம்! நல்லவர்கள்.

கடன் கொடுத்து திருப்பிக் கேட்காத நண்பர்கள்,
கைமாறு கருதாமல் கூலி அதிகம் கேட்காதவர்கள் 

ஐயோ!பாவம் !நல்லவர்கள்.
அனுபவத்தில் கதை ஆசிரியருக்கு 
தன்னை யாரும் புகழ்ந்தாலோ /
நல்லவர் என்று சொன்னாலோ  

அவர் மனதில் தோன்றுவது 

தான் ஏமாறுகிறோம் /அல்லது ஏமாற்றுகிறோம் என்பதே.

கெட்டிக்காரன்/சாமார்த்திய சாலி என்று 

பாரட்டப்படுவோர் கிரிக்கெட் விளையாட்டைப்போல் 

அரசியல்வாதிகள் போல் 

மற்றவர்கள் கருவைத்திருடி 
 கதை மாற்றி எழுதுபவர்கள் போல் 

எமாற்றுபவர்கலாகவே இருக்கின்றனர்.

பொறுத்ததுபோதும் பொங்கி எழு 

என்பது இந்நிலையில் பொருத்தமாகிறது.

அதே நிலையில் தான் நானும்.
உறவினர்களுக்கு பொருளுதவி செய்து 
அவசரத்திற்கு திருப்பிக்கேட்டால் 
அவர்களின் வாக்குச் சாதுர்யம் 
என்னை பகவனாக்குகிறது.
அதைத்தான் 

கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை என்கின்றனர்.



மற்றவர்கள் ஏமாற்றும் பொழுது 
.
ஏமாறிக்கொண்டே இருந்தால் 

ஐயோ!பாவம் !நல்லவன் !

விழித்துக்கொண்டால் .....

அனைவருக்கும் பகை.

இதுதான் வையகம்.



திங்கள், மே 27, 2013

ஒரு யுகப்புரட்சியின் போக்கா என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.



புதுச்சேரி  ,

பாரதியார்  புகலிடம் பெற்ற இடம்.

அரவிந்தரின் ஆன்மீகத்தால் புகழ் பெற்ற இடம்.

பிரஞ்சு ஆதிக்கத்தால் சதுரங்கக் கட்டம் போல் 

அழகாக அமைந்த இடம்.
இந்தியாவுடன் இணைந்ததும் 

அதன் இயற்கை அழகில் பெரும் மாற்றம்.

அழகான தெருக்கள்,
இன்று அதில் அழகு குறைந்தே தென்படுகிறது.

விரிவாக்கப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக 

௧௯௭௨ இல் எனது முதல் பணிநியமனம்  அங்கே.

மட்ராஸ் கபே  என்று ஒன்று உண்டு,

 மதிய மாதச் சாப்பாடு  ரூபாய் முப்பது
அளவு கிடையாது.
திருப்தியான சாப்பாடு.
அதற்கு எதிரில் ஒரு ஐயர் இட்லி வியாபாரம்.

ஒரு இட்லி ஒரணா.
இன்றைய இட்லிகளைவிட
 நான்கைந்து மடங்குக்குகுமேல் 
பெரிது.

மாதச்சம்பளம் ரூபாய்  நூற்று ஐம்பது.

 மன நிறைவான மன மகிழ்ச்சியான நாட்கள்.

இப்பொழுது நான் பாண்டியில் 

கிளப் மகேந்திராவில் தங்கியுள்ளேன்.
மூன்று நேர ஒருநாள்  சாப்பாடு 
ஆயிரத்து முப்பத்தைந்து கூடுதலாக வரி.

மனதில் ஒரு நெருடல்.

பாரதம் முன்னேறி உள்ளதா?

ஆம்.  அங்கும் கூட்டம்.
பணத்தை அலட்சியமாக சிலவு செய்யும் கூட்டம்.

ஏழ்மையான சூழலில் எத்தனையோ பேர்கள்.

எங்கும் ஒரு பெரும் கூட்டம்.

இங்கே உணவு அலட்சியம் செய்யப்படுகிறது.

லக்ஷிமிதேவியின் ஓட்டம்  அதிகம்.

அங்கு  கடல் கரையில்  தானே புயலின் தாக்கம்.

விலை போய் வீடுகளாகி காட்சி அளிக்கும் 

விளை நிலங்கள்.

பாரதம் பொருளாதரத்தில் முன்னேறினாலும் 

ஏக்கப் பெருமூச்சுவிடுவோர் எண்ணிக்கையில் அதிகம்.

நாடு முன்னேறியதா? என்பதில் ஐயம் அதிகம்.
மனித மனம் கல்மனமாக 
இரக்கமற்றதாக சுயநலமாக மாறிவருகிறது.
அரசியல் நாட்டு முன்னேற்ற சமத்துவப் 

பாதையில் செல்லாமல் ,
சிலைகளுக்கும் நினைவு மண்டபங்களுக்கும் 
கோடிக்கணக்கில்  சிலவு செய்வது 

முன்னேற்றமா ?எதிர்கால சந்ததியினர்களின் 
ஒரு யுகப்புரட்சியின் போக்கா 
என்ற மனக் குழப்பமே மிஞ்சியது.










.




வெள்ளி, மே 24, 2013

போராட்டமே. ஐம்பது சதவிகிதம்.



திருமணம்  என்பதில் மன ஒற்றுமைக்கும் ,

அன்பிற்குமே முதலிடம்  கொடுக்கவேண்டும்.

ஆனால் அதில் பெற்றோர்கள்  இளம் உள்ளங்களை 

பாதிக்கும் அளவிற்கு  பேசும்  பேச்சுக்கள்,

அதை மறந்து வாழ்ந்தாலும் அதை நினைக்கச் செய்யும் 

மீண்டும் மீண்டும்  சம்பவங்கள்.

இன்றைய கல்விப்புரட்சி யுகத்தில் 

பிரிந்தோ பிரிக்கப்பட்டோ வாழும்

 இளம் தலைமுறையினர்,

சின்ன சின்ன விஷயங்கள்,அதனால் வரும் 

மன அழுத்தங்கள் ,விளைவாக விவாகரத்துக்கள்.

பெண்கள் வீட்டிலும் சரி,ஆண்கள் வீட்டிலும் சரி 

இளம் உள்ளங்களை பிரித்துவிடும் ஆலோசனைகள் 

விவாக ரத்து வழக்குகள்.

கொலை ,தற்கொலை ,வெறுப்பும் எல்லை.

பொறுமை,சகிப்புத்தன்மை இல்லா நிலை.

கட்டுப்பாடற்ற வாழ்க்கை ,

குழந்தைகள் படும்  திருமணத்திற்குப் பின் ,

இல்வாழ்க்கை கசக்கும் நிகழ்ச்சிகள்.

அநாதை நிலையில் பெற்றோர்கள்,

கல்விப்புரட்சி  யுகத்தில் 

திருமண பந்தங்கள் போராட்டமே.
ஐம்பது சதவிகிதம்.










மனித மனம்.

  மனிதன்  மன எண்ணங்கள்,எண்ண அலைகள்,நடவடிக்கைகள்,நண்பர்களை

இணைத்தல்,நண்பர்களை ஒதுக்குதல்,நண்பர்களால் ஒதுக்கபடுதல்,

உறவினர்களால் போற்றப்படுதல், வெறுக்கப்படுதல் ,மற்றவர்களின் மனம் கவரப் பேசுதல்  இந்த ஆற்றல்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன.

மனிதர்கள்  போற்றப்படும் ,இகழப்படும் குணங்கள் இயற்கையாகவே வருகின்றன.

அதனால் ஒருவர் சிறந்த தலைவர்களாக முடிகிறது.சிலரால் சிறந்த நிர்வாகியாக முடிகிறது.

மனித மன எண்ணங்கள் மாறுவதும் ,எண்ணங்கள் மனதில் தோன்றுவதும்
ஒரு இயற்கையான ஒரு சக்தியால் ஏற்படுகின்றன.அதை மாற்றி உத்தமனாக
மாறும் அறிவையும் ஞானத்தையும் இறைவன் அளித்துள்ளான்.அந்த மெய் ஞானத்தைப் பெற முயற்சிக்கும் மனிதன்  தெய்வமாகிறான்.

இவ்வுலகில் உண்மை பேசுவதால் நண்பர்களை ,உற்றார்களைப் பிரிய நேரிடுகிறது. கசப்பான உண்மைகள் அதாவது நண்பர்கள் தவறு,உற்றார் உறவினர்கள் தவறு  ,தலைமைப்பீடங்கள் செய்யும் தவறுகள் மறைக்கப்பட வேண்டும்; அல்லது  போற்றப்படவேண்டும். இதுதான் உலகியல் எண்ணமாக,உளவியல் எண்ணமாக மாற்றப்படுகிறது.



வியாழன், மே 16, 2013

பால் மணக்குது பழம் மணக்குது தென்பழநியிலே


தமிழ் நாட்டில் சாகு படி  நிலம் குறைந்துவருகிறது.

சி .ஏ.ஜி   அறிக்கை.

பழனி   ஷண்முக  நதி செல்லும் வழி முப்போகம் என்று என் தத்தா கூறுவார்.

சுயலத்தால் இப்பொழுது  ஷண்முக நதி செல்லும் இருகரைகளிலும்

கட்டடங்கள். பள்ளிகள்.


வையாபுரிக்கண்மாய்  இன்று பாதி பேருந்து நிலையம்.சிவகிரிப்பட்டி அருகில் சித்த மருத்துவகே கல்லூரி அல்லது பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற திட்டம் ஏன் கைவிடப்பட்டது என்று தெரியவில்லை.

பேருந்து நிலையம்  வெளியில் புனித ஸ்தலத்தில்  வெட்டவெளி சிறுநீர் கழிப்பிடம். பன்னீரும் சந்தனமும் ஜவ்வாதும் மணக்கும் பழனி பேருந்து நிலையம் இறங்கினால் சிறுநீர் நாற்றம்.வையாபுரிக் குளம் சாக்கடை நாத்தம்.

கிரிவலம்  புனித கடம்பமரப் பூக்கள் மணம், சஞ்சீவி க் காற்று போய்

கடைவீதியில் வளம் வருவதுபோல்  உள்ளது.

அங்கும் விளைநிலங்கள்  முன்பு போல் இல்லை. வெறும் கட்டடங்கள்.

இயற்கையான புனிதம் போய் இப்பொழுது  வெறும் செயற்கை ஆடம்பரம் தான்.பெரிய வையாபுரிக்குளம் பாதியாக குறைந்தது,சுயநலத்தால்

புனித ஸ்தலம் வணிகஸ்தலமாக  மாறியது,

இருப்பினும் கூட்டம்.

அதுதான்  தண்டபாணி  அருள் என்றாலும்

பக்தர்கள் மனம் பக்தியை மட்டும் நினைக்கிறதா?

இந்த இயற்கையான புனிதம் செயற்கை யாக  மாறுவதும்

இறைவனின் லீலையா?

தண்ணீர் கஷ்டம் பழனியிலே.

பால் மணக்குது பழம்  மணக்குது
தென்பழநியிலே  என்பது மாறி,

சிறுநீர் ,சாக்கடை நாற்றம் தென் பழனியிலே

என்று பாடும் சூழல் சுயநலவாதிகளாலே !!


இந்நிலை மாற பழனி முருகனைப்

போற்றி பிரார்த்திப்போம்.






புதன், மே 15, 2013

பல்லுப் போனவயதில் பலம் கொடுக்கும் இடுகை.

இடுக்கண்  வாருங்கள் நகுக  என்பது போய் -இன்று

இடுக்கண் களைய  இடுகை இடுக என்று

ஓய்வுபெற்ற பின்   மனதில்  உள்ளதை


கொட்டித் தீர்க்க ,பொழுது போக்க

கூகுல்  வலைத் தளம்.

அரசியல் விருப்பு -வெறுப்பு

அன்றாட பிரச்சனைகள்


செய்தித்தாள் வாரமலர்கள்

வெளியிடவில்லை

நாமாக வெளியிட்டு  படிப்பவர்கள் இல்லை என்றாலும்

இடுகை இட்ட மகிழ்ச்சி முதுமையில்

அதைக் கூறும் போது   மனைவி முதல் மற்றவர்களின்

அலட்சியப்பார்வை, ஒதுக்கப்பட்ட

ஒய்வு பெற்றோர்  உளறல் ;உள்ளக்  குமுறல் ;

மற்றவர்கள் ஒதுக்கும் வயது என்று

இடுகை இடுவதில் இருந்து ஒதுங்கும்

  எண்ணம் வரும் போது

ஒரு பாராட்டும் கருத்துரை ;

ஓஹோ!! நம் இடுகையையும்  படிக்கிறார்கள் என்ற

எண்ணம்; எழுது; என்றாவது யாராவது  படித்துப்

பயன் பெறுவர்  என்ற எண்ணம்.ஒரு ஊக்கம்.

பல்லுப் போனவயதில்

பலம் கொடுக்கும்  இடுகை.

 I THANK THE BRAIN  WHO INVENTED GOOGLE AND BLOGSPOT.

WHICH GIVES HAPPINESS AND STRENGTH ,SELF-CONFIDENCE

FOR RETIRED PEOPLES. THE SOUL ALWAYS BLESS THEM ,







ஞாயிறு, மே 12, 2013

அன்புக்கு தியாகத்திற்கு இணை ஏதும் இல்லை.

 அன்னை  அன்புக்கு,

ஆதரவிற்கு,

இக்கட்டான சூழலில் ,


ஈடில்லா  அன்பு காட்ட;


என்றும் எச்சூழலிலும்


ஏற்றம் அடைய .

எத்துனை துயரம் இருப்பினும்

அத்துனையும் மறந்து

தன் பசி தேவைகள் மறந்து

தன்  சேய்  தேவை அறிந்து

சேவை செய்யும் ஒரே ஆத்மா அன்னை.

ஐக்யமாகி அன்புகாட்டும்


ஒப்பில்லா தெய்வ உருவில்

அன்னை  ஒரு ஆலயம்.

அன்புக்கு தியாகத்திற்கு

இணை ஏதும் இல்லை.



ஆண்டவன் ஒரு குற்றவாளி.

சென்னை  நகரில்  தண்ணீர் மாநகராட்சி  லாரிகளில் விநியோகம்,

தண்ணீருக்காக பதிவு செய்து ஒரு வாரமாகியும் தண்ணீர் இல்லை;

நாவறட்சி  விநியோகம் செய்வோருக்கு மனசாட்சி இல்லை.

மனிதாபிமானம்  வற்றிவிட்டது;

தொலை பேசியில் ஒருவர் மூன்று நாள் என்கிறார் ,
மூன்று நாளைக்குப்பின்  கேட்டால் ஒருவர் நாளை என்கிறார்
ஒரு பெண் குரல் வராது என்கிறது.

இப்படியே ஒருவாரமாகியும் தண்ணீர் வரவில்லை;

இரக்கமற்ற இதயங்களைப் படைத்த இறைவன் ஒரு குற்றவாளி;

எங்களைப்போல் நேர்மை பேசி கஷ்டப்படும் எங்களைப் படைத்த

ஆண்டவன் ஒரு  குற்றவாளி.

எங்கள் குறைகளை ஆண்டவனும் கேட்கவில்லை;

ஆள்வோரும் கேட்கவில்லை;

தண்ணீருக்காக  கண்ணீர் சிந்தும் எங்கள் அடுக்குமாடி குடி இருப்போர்
படும்  வேதனை  ஆண்டவன் இருந்தால் கேட்கட்டும்.
இல்லை எனில் நாங்கள் தண்ணீர்வரி கட்டியும்
எங்கள் அடுக்கத் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பாரில்லை.
நன்றி மாநகர பொறியாளர் மற்றும் உறுப்பினருக்கு.

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

அரசின் திட்டங்கள் அரிய -பெரிய
அருமையான  திட்டங்கள் -ஆனால்

அது சாமானிய மக்களை

 சென்றடைவதில் தான்

சிக்கல்கள்.

பட்டா  மாற்றம் ,

மனசாட்சி உள்ள அமைச்சர்கள்.அதிகாரிகள்
ஆண்டவன் மீது சீ-- சீ-- மன சாட்சி மீது கைவைத்துக்

கூறட்டும் கை ஊட்டு இல்லை என்று.

மாநகராட்சி தண்ணீர் இணைப்பு,

சொத்து வாங்கி பெயர் மாற்றம் ,

எல்லாமே கை ஊட்டு.

ஊழலுக்கு பொதுஜனம்  உடைந்தை  ஆகும் காலம் இது.


வாக்களிக்கும் பொது மக்கள்

 வாங்கும் கள்ளப் பணம்,

கறுப்புப் பணம் ,அமைச்சர் கள்

ஆடம்பர  வாழ்க்கை

போதுஜனத்திற்கோ

இருண்ட வாழ்க்கை.

பரிந்துரை இல்லாமல்
பகவான்  தரிசனம்  கூட
எளிதல்ல  நம் நாட்டில்

ஏழைகள் ,கையூட்டு தர முடியாதவர்கள்

நேர்மையாக இருப்போர்கள் ,

நான் கடவுள் முடிவு போல் வாழத் தகுதி அற்றவர்கள்;

கோயில் உண்டியலுக்கு கோடிக்கணக்கில்

தங்கக் கிரீடம் குடம் தரும்

அரசியல் வாதிகள்

மக்கள் வரிப்பணத்தில் இலவசம் அளிக்கும்

தந்திரம், அது ஒருவகையான  கை ஊட்டு

வாக்களிப்பவர்களுக்கு.

ஏழைகள்  இலவசங்களைப்பெற்று

குறைந்த விலைக்கு விற்கும் அவலம்;

கைத்தறி ஆடைகள்  கடனுக்கு அளிக்கும் திட்டம்,

எட்டு மாதத் தவணைகள்;

அந்த துணிகளை வாங்கி உடனடிக் கடன் தேவைக்கு

௨௦% தள்ளுபடியில் விற்கும்  அவலம்;

அதை வாங்கி லாபம் தேடும் ஒருகூட்டம்.

என்று தான் மக்கள் விழிப்புணர்வு பெறுவார்களோ?

அரசும் அமைச்சும் திருந்துமோ?

உண்மை ஜனநாயகம் மலருமோ?

ஆண்டவனுக்கே  வெளிச்சம்;

ஆண்டவன் இருந்தால் உடனடி திருத்தம் .

இல்லை !இல்லை! என்ற பெரியாரின் சொல்

உண்மை என்றால் ஊழல் பெருகட்டும்;

ஊழல் அரசியல் ஆளட்டும்.

ஆண்டவன் பெயரைச்சொல்லி ஆண்டவர்கள்

ஆளுபவர்கள் ஏமாற்றும் காலம் இது.





சனி, மே 11, 2013

உதவாத உறவுகள்,

உதவாத உறவுகள்,
உறவுக்கரம் நீட்டும்
உதவி வேண்டும்  போது.

வசதி இல்லா காலத்தில்
வசைபாடி ஏளனம் செய்யும் உறவுகள்,
வசதி பெற்றதும் எரியும் கண் பார்வை;
பொறாமை குணம் படைத்தோருக்கும் ,
ஏமாற்றும் உறவினர்களுக்கும்,

ஏமாறும் உறவுகளை இரு வேறாக்கி ,

ஒரு பக்கம் உதவி பெரும் தனித்திறமை.

அனைவரும் ஒன்று சேர்ந்து பழையதை

மறந்து உதவுங்கள்  என்றே

 கூறும் கூட்டம் சேர்க்கும் திறமை.

உதவினாலும் குறை;உதவாவிட்டாலும் குறை;

இருக்குதே கொடுக்கக் கூடாதா?

கடன் வாங்க சாட்சிக்  கை   எழுத்துப்  போடக்கூடாதா?

கடன் கட்டவில்லை என்றால் கடன் கட்டக்கூடாதா?

கஷ்டப்படும்  போது உதவாத உறவுகள் .

காயப்படுத்தும் உறவுகள்.



.










பெற்றோரைப் போற்றும்



வெள்ளி, மே 10, 2013

எங்கே நிம்மதி?ரத்தக்கண்ணீர் தான்.

    இன்றைய உலகம் எப்படி உள்ளது?

அமைதி அற்று;
 மகிழ்ச்சி அற்று;
திருப்தி அற்று;
நம்பிக்கை அற்று;
நிம்மதி அற்று;

திருமண  வாழ்வு--

விவாகரத்து வழக்குகள்;

இளம் தம்பதிகள்  இணைந்து வாழாமல் ,

பிரிந்து வாழும்நிலை;

காரணம்?

இன்றைய ஆங்கில மருத்துவம்;

கட்டிப்பிடி  மருத்துவம்;

மன மகிழ்ச்சி,

மனக்கட்டுப்பாடு,

பிரம்மச்சரியம்,

புலனடக்கம்

என்பதற்கு நமது சித்த ,ஆயுர்வேதம்  அளித்த

முக்கியத்துவம் ஆங்கில மருத்துவம் தரவில்லை;

வேலை இல்லா காலத்தில் ஆண்டுக்கு  ஒரு குழந்தை;

இந்த பலாத்காரம்,கற்பழிப்பு, என்பது

மிருக உணர்வுக்கு முதலிடம் அளித்து வாழ்தல்.

இன்று ஆண் -பெண் வேலை;

இங்கு மனக்கட்டுப்பாடு உள்ளது.

பிரம்மச்சரியம் கடை பிடிக்கப்படுகிறது.

பொருளாதாரத்திற்குக்  குறைவில்லை;
ஆனால் ,பொருளா?தாரமா?குழந்தையா?

என்ற வினாக்களில்  பொருளுக்கு முதலிடம்;
விளைவு   பொருள் இருந்தும் பொருளற்ற வாழ்க்கை.

 ஆஸ்திகள் சேருகின்றன;

ஒரு குழந்தைக்கு  ஏக்கம்?

எத்தனை பணக்காரத் தம்பதிகள்

சந்தான பாக்கியத்திற்கு பரிகாரம் தேடிச் செல்கின்றனர்?

குழந்தைச் செல்வம் --நம் முன்னோர் வாக்கு.

அதற்கு வழி இல்லா  வாழ்க்கை;

செல்வத்தின் பலன்?

மனிதனை நல்வழிப்படுத்திச் செல்லும்  ஆன்மீக

அறிவுரைகள்,இறை பக்தி  வெறும் பகட்டுக்கும்

வீண் படடோபத்திற்கும், என மாறி விட்டது.

பக்தி வியாபாரம் பெருகிவிட்டது;

பக்தி என்றால்  அங்கு தூய மனத்திற்கு  முதலிடம்;

ஆண்டவன் அளித்த பதவியை நேர்மையாக,சத்தியமாக ,அச்சமின்றி

பலருக்கும் பயம் படும் விதமாகச் செய்தல்;

ஆனால், இன்று ஆண்டவனால் கொடுக்கப்பட்ட பதவிகள்,

ஊழலுக்கும்,இலஞ்சத்திற்கும்,அநியாயத்திற்கும் துணை போகின்றன;

விளைவு? சொத்துத் தகராறு,
பலதாரம்  புத்திரர்கள் சண்டை;
கள்ளக் காதல் கொலைகள்;
குடி;

மிகக் கேவலம் வருமானத்திற்காக
மதுபானக் கடைகள்;விலைமாதர்களிடம் கையூட்டு பெற்றுவாழும்
வாழ்க்கை;

அது அரசாங்கம் ஏற்று நடத்தினால்?

அராஜகம் தான்;

இந்திரன் கெட்டதும் ,சந்திரன்,ராவணன்  கெட்டதும்  பெண் ஆசையாலே.

மது அரக்கன்; மாது சுகம் மயக்கம்;
இன்றைய உலகம் இதற்கு முதலிடம் அளிக்கிறது.

எங்கே நிம்மதி?ரத்தக்கண்ணீர்  தான்.




புதன், மே 08, 2013

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.

  மனித அறிவு  என்பதை  நம் முன்னோர்கள்

,ரிஷிகள் நன்கு ஆராய்ந்து

நமக்கு விளக்கி மெய்ஞானத்தைக் காட்டினர்

. ஆனால் நாம் இந்த உலகில் கிடைக்கும் சுகம் தான்

 பெரிது என்று நினைத்து பல துன்பங்களை  அனுபவித்து

துன்பங்களுக்கு இடையில் இன்பம் காண்கிறோம்.


எப்பொழுதும் இன்பம் அளிப்பதற்காகவே  ஆன்மீக அறிவு.

துன்பங்களை அனுபவித்துக்கொண்டே இன்பங்கள் தருவது


அறிவியல் அறிவு துன்பங்களுக்கு இடையில் இன்பங்கள் தருவதுபோல்

ஒரு மாயை. அது ஏன்? என்பதற்கு கபீர் தாசர் ஒரு விளக்கம் தருகிறார்.

அது என்ன?

 பெரிய பெரிய ஞானிகள் தரா  விளக்கம்

 என்று நமக்குத் தோன்றும்.

ஞானிகள் தரும் விளக்கத்தை படித்தோரும் படிக்கா தோரும் எளிதாக

புரிந்து தெளிவடையவே  எளிய விளக்கங்கள் தரும் சித்தர்கள்

பாடல்கள்;பாரதியார் போன்ற யுகக் கவிஞர்கள்.

சில திரைப்படப்பாடல்களும் மெய்ஞானத்தை விளக்குகின்றன.

  ஆனால் அனைத்துமதங்களிலும்  கூறும் ஒரு மாயை/,சைத்தான்,/சாத்தான்

உலகை ஆட்டிவைக்கிறது.

அந்த தீய சக்தியிலிருந்து வையத்தைக் காக்கவே ஆன்மிகம்;பக்தி மார்க்கம்.

எப்படிப்பட்ட அறிவியல் வாதிகளும்  இதை மறுப்பதில்லை.

மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் ,

அவர்களால்  மரணம் என்று நாள் குறித்தோர்களில் சிலர் நீண்ட நாள்

உயிர்வாழ்வதும்,அவர்கள் ஆரோக்யமான நோயாளிகள் என்பவர்கள் மரிப்பதும்

அவர்களை  ஒரு தெய்வீக சக்தி இருப்பதை ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன.

           அறிவியல் என்பது ஜட அறிவு. அதில் மாற்றங்கள் பெருகிக்கொண்டே

இருக்கின்றன, தேவைகள் அதிகரிக்கின்றன.

பணத்தசைகள் பெருகு கின்றன.மனத்தாசைகள் பெறுகின்றன;

அவைகளால் ஆணவம்,போட்டி ,பொறாமை ,ஏற்றத் தாழ்வுகள் ,சண்டை

சச்சரவுகள் பெருகி வருகின்றன; அமைதி கெடுகிறது; இவை எல்லாம் உலகின் அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன.

ஆனால், பர அறிவு ,மெய்ஞானம்  என்பது சத்தியம்,நேர்மை,தியாகம்,பிறருக்கென வாழ்தல்,ஆணவத்தை அளித்தல்,
மனிதர்களிடம்  பரஸ்பர அன்பை ,பரோபகாரத்தை ,கோபத்தை,காமத்தை,

அடக்க வழிகாட்டுகிறது.

   ஆனால் இன்றைய ஆன்மிகம்,ஆஷ்ரமம்  லக்ஷ்மி தேவிக்கே முதலிடம் என்று  ஜட அறிவை வளர்க்கிறது.ஆஷ்ரமங்கள்,ஆலயங்கள்
பொன்னுக்கும் பொருளுக்கும் பிரதானத்தை அளித்து  பக்தி மார்கத்தை

மாசு படுத்திவருகின்றன.
குரு  என்பவர் இன்று ஆசிரியர் என்று மாறி  வணிகர்களாகி வருகின்றனர்.

பள்ளிகள் என்பது வணிக ஸ்தலங்களாகவே  மாறிவிட்டன.

ஒரு மூன்று வயது குழந்தையை பள்ளியில் சேர்க்க பெற்றோர் படும் பாடு

கல்வி   என்பது எவ்வளவு உயர்வானது;நாட்டிற்கு எவ்வளவு இன்றி

அமையாதது   ஆனால்  இன்று  ஆசிரியர் பயிற்சி பட்டம் வாங்கிய

நான்கு லக்ஷம் பேரில் தகுதி உள்ளவர்கள்  ஆயிரத்திற்கும் குறைவு.


 இதைத்தான் கபீர் தாசர்

உண்மையைச் சொன்னால் நம்புவோர் இல்லை;

பொய்யை நம்புவோர் ஏற்போர் அதிகம் ;

பால் வியாபாரி தெரு தெருவாக சென்று விற்கிறான்

மது வியாபாரி ஒய்யாரமாக அமர்ந்து விற்கிறான்;

எவ்வளவு உயர்ந்த கருத்தை எவ்வளவு எளிமை படுத்தி உள்ளார்;

நல்லது என்பது  பிரச்சாரப்   பொருள்;

தீமைகள் பிரசாரமின்றியே பெருகுபவை;

  ஆலயங்களிலும் இன்றைய ஆலயங்கள் ஒரு வணிக ஸ்தலம்;

அங்கு மெய்ப்  பொருளுள்ள பக்தர் களுக்கு   முதலிடம் இல்லை;

கைப்போருளுள்ள பக்தர்களுக்கு முதல் மரியாதை.


இதனால் பக்தர்கள் மனதில் பக்தியை விட,

பர அறிவை விட ஜட அறிவே வளர்கிறது.

இது மக்களுக்கு இன்னல் ,அமைதி இன்மை ,ஆணவம்,பொறமை,,குரோதம்

விரோதம்  தரக்கூடிய பக்தி.

இதற்காகவே  வியாசர்  தன குரு கீதையில்:

शिलाया किम परम ज्ञानं  शिलासंघः प्रतारानः

स्वयं  तर्तुम  न  जानती परम निस्तारयेत  गतम ;

 கல்லால் இறைஞானம் பெறமுடியுமா/

கல் தன்னாலே இயங்க முடியுமா?

கல்லில் வைக்கும் அன்பு ஏமாற்றமே.

சிவவாக்கியர்:

நட்ட கல்லை தெய்வ மென்று நாலு புஷ்பம் சாற்றியே

சுற்றிவந்து  முணுமுணுத்து சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?

************
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை,
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கடந்த பின்

வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்,

கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே;


அகஸ்தியர்:

சொல் பிறந்த இடமெங்கே?முப்பாழ் எங்கே?

துவார பாலகரெங்கே முதற்பாழ்   எங்கே?

நல்ல சங்கு கத் எங்கே?வைகுண்டமேங்கே?

நாரணனும் ஆலிலைமேல் துயின்ற தெங்கே?

அல்லல் படும் ஐம்பூத  ஒடுக்கமேங்கே?

ஆறைந்து இதழிரெண்டு முளைத்த தெங்கே?

சொல்லவல்லார்

 உண்டானால்  அவரை நாமும்

தொழுது குரு எனப் பணிந்து  வணங்கலாமே?



திருக்குறள்;

பெறுமவற்றுள்  யாமறிவதில்லை  அறிவறிந்த
மக்கட் பேறல்ல  பிற.


 பர அறிவு என்பதை சிறந்த குருவால் தான் அளிக்க முடியும்.

இறைவனைக் கண்டதாகக் கூறுவோர்  உணர்ந்து அதன் மூலம் எளிய பக்தியைக்  காட்டுவர்.

சுவாமி விவேகானந்தர்  பக்திக்கு முதலிடம் அளித்தார் ;பணத்திர்கல்ல;

ஆரம்ப நிலையில் ஆன்மீக வாதிகள் ஆடம்பர நிலையில் இல்லை.

இன்றைய சூழலில் ஜட அறிவைப்பெருக்கும் ஆன்மிகம்.

இதிலிருந்து மெய்ஞானம் பெற வேண்டும்.

ஆடம்பர பக்தி என்பது முக்திக்கு வழி இல்லை.

















ஞாயிறு, மே 05, 2013

தேசப்பற்று மிக்கோர்கள் கண்ணீர் சிந்தும் காலமிது.

சுதந்திரம் கிடைத்தும் அரசியல்வாதிகள்

 இன்னும் ஆங்கில ஆட்சியின் போராட்டங்களையே.

பொது சொத்துக்களை  அழிப்பது ,எரிப்பது,

  தொடர்வது நாட்டுப்பற்று  உள்ளவர்களுக்கு வேதனை தருகிறது.

வன்முறையால்  பொதுமக்களுக்கு  இடையூறு

ஏற்படுத்துவதால்  கட்சி வளருமா?

மக்களுக்கு பயம் வருமே ?

எத்தனை பயணிகள்?

 எவ்வளவு இடையூறுகள்.

அவசரப்பயணம்-  அது

 சிகிச்சைக்காக  இருக்கலாம்.

சுப காரியங்களுக்குச் செல்ல ,

இதுவே அபசகுனம் என்று தடையாகலாம்.


வேலைக்கு நேர்காணல் செல்வோருக்கு

வேலைவாய்ப்பு  இழக்கும் சூழல்.

பேருந்து  ௨௦௦க்க்கு மேல் என்றால்

அது மக்களின் சொத்து அல்லவா?

மக்களின் வரிப்பணம் அல்லவா?

நடு இரவில் இறங்கி கண்ணீர் விடும் பயணிகள் .

பெண்கள் ,குழந்தைகள் படும் இன்னல்கள்,

இரக்கமில்லா அரசியல் போராட்டம்.

இவர்களின் அதரவு பெற்று தேர்தலில் வெற்றி பெற

வன்முறையில் ஈடுபடுவோருக்கு அதரவு  குரல் எழுப்பும்

பெருந்தலைகள். நெஞ்சு பொறுக்கவில்லை

வேதனை!!   ஏன் சுதந்திரம் பெற்றோம்!!! என்று.

ஊழல் ,சட்டங்களை மதிக்கா அரசியல் தலைவர்கள்.

அவர்களுக்கு சலாம் போட்டால் பதவி உயர்வு என

அராஜகத்திற்கும் ,கொடுமைகளுக்கும் உடன் செல்லும்

அதிகாரிகள்;  அவர்களைவிட  ஊழல் அரசியல் வாதிகளுக்கு

வாக்களிக்கும் கூட்டம்;  தேர்தல் சாவடி வன்முறைகள்;

கள்ள  ஓட்டுக்கள்;  ஓட்டுச் சாவடி சென்றால்

  வாக்களர் பட்டியலில்  பெயர் இல்லை;

அல்லது வாக்களிக்கப்பட்டது  என்ற நிலை;

பணம் தான் என்று மனசாட்சி  இல்லா

 வாக்காளர்கள்,

இலவசம் என்ற பெயரில் மக்கள்  வரிப்பணத்தில்

கொடுக்கும் பொருள்கள் ,
தங்கள் கட்சி அளிப்பதாகக் கூறி

ஏமாற்றும் அரசியலுக்குத்

தாளம் போடும் அறியாத மக்கள்.

மின்சாரம்  இல்லா ஊரில்

மின்விசிறி,மாவரைக்கும் இயந்திரம் இலவசம்.
வலைதள வசதியில்லாமல் மடிகணினி;

அடிப்படை வசதி செய்யா இலவசம்;
கோடிக்கணக்கில் பணம்; விரயம்;

குருடனை ராஜா பார்வை பார் என்பது போல்;

பயன்படுத்த முடியா இலவசங்கள்;

ஊழல் விரும்பிகள்,கைஊட்டளித்து  கையூட்டு பெற்று வாழும்

பொதுமக்கள் ; அதிகாரிகள்;கட்டைபஞ்சாயத்து;

இதைவிட  வரிப்பணம் கட்டிய ரசீதை காட்டவேண்டுமாம்

இல்லை எனில்  வரி கட்டவில்லை என்றே  கருத்தாம்.

அரசுப்பதிவேடுகள் என்ன ?

  இரக்கமற்ற இள நிலை உதவியாளர்கள்;

அவர்களுக்கு ஆதரவாக  இருக்கும் அதிகாரிகள்;

என்னே ஜனநாயகம்!!!

இது பண நாயகம்???!!!

அரசியல் வாதிகளின் அராஜகம்;

பணம் பெற்று வாக்களிக்கும்

நாட்டுப்பற்று,நியாயம்,நேர்மை விரும்பா

சுயநல  வாக்காளர்கள் நாயகம்!!!.

இப்பொழுது பாரதியின் பாடல் தான் நினைவுக்கு

வருகிறது----

நெஞ்சு பொறுக்க   வில்லையே இந்த

நிலைகெட்ட  மானிடரை  நினைத்து  விட்டால் ...

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்ணீர் சிந்தும் குடியாட்சி!!

ஊழல் ஒழிக்க வழியில்லை என்று

நீதிபதிகள்  கண்ணீர் சிந்தும் காட்சி!!!

தேர்தல் ஆணையர் தேர்தல்

 நேர கள்ளப்பணம் கண்டு

விடுக்கும்  அறிக்கைகள் ;

ஒழுங்குநிலை படுத்த முடியவில்லை என்ற ஒப்பாரி.

பொதுச்சொத்து நாசப்படுத்துவோர்களுக்கு

கடும் தண்டனை அளிக்கும் வரை

இத்தகைய அரசியலை    பொது ஜனம்  வெறுக்கும் வரை ,

ஒதுக்கும் வரை, நேர்மை காண முடியாது;

தேசப்பற்று மிக்கோர்கள்  கண்ணீர்  சிந்தும் காலமிது.
















புதன், மே 01, 2013

learn hindi tamil easy.

 ௧.१.    மத்திய அரசு  மானியம் அளிக்கிறது.= மத்ய சர்கார்( கேந்திர சர்கார் ) மான்யதா  தேதி  ஹை.

मत्तिय  अरसु मानियम अलिक्किरतु==मध्य सरकार  मान्यता देती है.
मध्य -मान्य तुलना कीजिये.

மத்ய =மான்ய  தமிழ் -ஹிந்தி ஒப்பிடுக.

  २.விவாதம் செய்யாதே,=விவாத்  மத் கரோ. विवादम सेय्याते -विवाद मत करो.

  ३.நகர  வாழ்க்கை நரக வாழ்க்கை.  நகர் கீ ஜிந்தகி நரக் ஹை.
नगर   वाल्क्कै  नरक  वाल्क्कै.==नगर की जिंदगी  नरक है.

நகரம் -நரகம் ==நகர் =நரக்  नगरं=नगर .नरकं =नरक.

பரிவாரத்தோடு  வந்தான் --பரிவார் கே சாத் ஆயா.

பரிவாரம் =பரிவார்= குடும்பம் -குடும்ப
  परिवारात्तोडू  वन्तान=परिवार के साथ आया.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுர் தர்ஷன் கோடி புண்ய ஹை.

गोपुर  दरिसनम कोटि   पुणनियम '==गोपुर  दर्शन कोटि पुण्य है.



வாழ்க தொழிலாளர்கள்.



உழைப்பாளர் தினம்.

ஊர்  சுத்தமாக இருக்க தேவை
 ஒரு  உழைப்பாளி.

காணி விளைய தேவை உழைப்பாளி .

தொழில் புரிவோர் எல்லோரும்
உழைப்பாளி வர்க்கம்.

அழகான ஆடை  தைக்க தையல்
தொழிலாளி.

ஆடம்பரமான கட்டடம் கட்ட
 கட்டிடத்  தொழிலாளி.

சிகை அலங்காரம் செய்ய
முடிவெட்டும் தொழிலாளி.

பேருந்து ஓட்ட ஓட்டுனர்
நடத்த நடத்துனர்,

மர  வேலை செய்ய ,
நகைகள் செய்ய

பாட்டாளி தொழிலாளி

இல்லை என்றால் ஏற்றம்

உண்டா வையகத்திற்கு,
ஆகையால் தேவை  தொழிலாளி.

கைத்தொழில்  ஒன்றைக் கற்றுக்கொள்,
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.

சமையல் தொழிலாளி

இந்த தொழிலாளர்கள் வாழ மகிழ

தொழிலாளர்  இல்லை எனில்
என்ன  ஆகும்.
நகரப்புரங்களில்  பழைய பொருட்கள் சரி செய்ய
ஒரு சிறந்த தொழிலாளர்  அமைப்பு  தேவை.
விலை  உயர்ந்த பர்னிச்சர்கள்,ஆடைகள்,மின் சாதனங்கள்
இன்னும் எத்தனையோ வேலைகளுக்கு
சிறந்த பனி புரியும் தொழிலாளர் அமைப்பு இருந்தால்.
நேர்மையும் திறனும் இருந்தால் வேலைவாய்ப்பு அதிகம்.

இத்தகைய தொழிலாளர்களை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும்.


வாழ்க தொழிலாளர்கள்.