செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஊழல் அரசியல் வாதியாகிய நான் ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன் .


ஊழல் அரசியல் வாதியாகிய நான் 

ஆயிரம் கோயிலில் சத்தியம் செய்து 
சொல்கிறேன் .
ஊழல்   குற்றச்சாட்டு 
என் மீது சாற்றப்படுகிறது.

உண்மை நிலை இது தான்.
ஊழல் செய்தாலும் 
மீண்டும் நான் பாராளுமன்ற  உறுப்பினன்.
சட்டமன்ற உறுப்பினன்.
முதல் அமைச்சர் .
அமைச்சர்  நான்.
நானா! குற்றவாளி.!
நான் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறேன்.
கற்பழிப்பவர்களை 
காப்பாற்றுகிறேன்.
நேர்மையான அதிகாரிகளை 
தண்டிக்கிறேன்.
சதய்வான்களை ஒழித்துவிடுகிறேன்.
கோவில்நிலங்களை 
அபகரிக்கிறேன்.
நிலஊழல் செய்கிறேன்.
கிரைனட் ஊழல் செய்கிறேன்.
நிலக்கரி ஊழல் செய்கிறேன்.
போபார்ஸ் ஊழல்புரிந்தேன்.
தொலைபேசியில் ஊழல்.
கறுப்புப் பணம் வெளி நாட்டு வங்கிகளில் .
இதற்கெல்லாம் என் மேல் மட்டும் 
குற்றம் சாற்றும் 
மிகப்பெரிய குற்றவாளி 
யார்?யார்?
சற்றே 
மனச்சாட்சி !உள்ளோரே !!.!!
நினைத்துப்பாருங்கள் !!
எனக்கு மீண்டும் மீண்டும் வாக்களித்து 
எனக்கு  பதவி சுகம் அளித்து 
நாற்காலியில் அமரவைக்கும் 
வாக்காள  பொது மக்களே!!
நீங்கள் தான்.
இது சத்தியம்! சத்தியம்.
நாங்கள் அரசியல் வாதிகள் 
பாவிகள் அல்ல.
வாக்களிக்கும் நீங்கள்  பாவிகள்.
ஆகையால் தான் 
நாங்கள் சுகமாக இருக்கிறோம்.
நீங்கள்  அல்லல் படுகிறீர்கள்.
எங்களுக்கு மின் தடை இல்லை.
தொலைபேசித் துண்டிப்பு இலை.
விலைவாசியால் எங்களுக்கு 
எவ்வித பணத்தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவவத்திற்கு எங்களுக்காக 
பல கோடி ரூபாய்கள் சிலவு செய்கிறோம்.
சிகிச்சைக்கு விமானத்தில் செல்கிறோம்.
நாங்கள் செல்லும் சாலைகள் 
குண்டும் குழியுமாக இல்லை.
எங்களுக்கு  எவ்வித  குறை ஒன்றும் இல்லை கண்ணா.
நாங்கள் புண்ணியவான்கள்.
பாவிகள் நீங்கள் தான்.
நீங்கள் அளிக்கும் ஓட்டுக்கள் தான்.
எங்களை நோட்டுகளில் புரளச்செய்கின்றன.
வாழ்க ஜனநாயகம்.
எங்களுக்கு வாக்களித்தவர்கள் 
மீண்டும் வாக்களிப்பார்கள்.
ஆகவே 
பாவிகள் இன்னலுருவர்.
கலியுகம்.
கர்ம வினை கல்லறை வரை விடாது.
இது சத்தியம்.


கருத்துகள் இல்லை: