ஊழல் அற்ற பாரதம் உருவாகுமா?
மக்களே!சிந்திப்பீர்!
ஊழலுடன் இணைந்து இருக்கும்
கருணை மமதா மற்றும் கட்சிகள் பற்றியும்
சிந்திப்பீர்.
நாடு காக்க ஊழல் ஒழிக்க
உறுதிமொழி எடுப்பீர்.
ஊழல் என்பதுஒரு ரூபாய்
லஞ்சம் பெற்றாலும் ஊழல் தான்.
உருக்குத் துறை அமைச்சர் பெநிப்ரசாத் வர்மாவின்
ஊழல் பற்றிய கருத்தும்
இந்திய ஜனநாயகமும்.
நம் நாட்டில் ஊழல் ஒழிய உண்ணாவிரதம் போராட்டம் என்று தினமும் செய்திகள்.
இந்நிலையில்
ஊழல் என்பது லக்ஷங்கள் இல்லை/
கோடிகளும் அல்ல.
பல லக்ஷம் கோடிகள்
செய்தால் தான் ஊழல்
நாட்டை ஆளும் அமைச்சர் உரை.
அரும் பாடுபட்டு,
அல்லல்பட்டு,
செக்கிழுத்து
சிறையில் சித்தரவதைப்பட்டு,
பிரம்படி பட்டு ,
சொத்து இழந்து .
சுகம் இழந்து
பெற்ற சுதந்திரம்.
இன்று
சுதந்திர நாட்டில்
ஊழல்புரிவதே லட்சியம் .
லக்ஷரூபாய்கள் ஊழல் என்பது
ஊழல் அல்ல என்றவர்களின்
கையில் ஆட்சி.
ஆளும் கட்சியினர் இளைஞர்களுக்கு
காட்டும்பாதை.
இந்த ஆளும் கட்சிக்கு இன்னும்
கைகொடுத்து ஊக்குவிக்கும்
சில்லறைக் கட்சிகள்.
ஒருதுளி ஆனாலும் விஷம் .
ஆயிரம் லஞ்சம் வாங்கினால்
அரசு அதிகாரிகள் பணி நீக்கம் .
அமைச்சர்கள் எழுபது லக்ஷம்
வாங்கினால் ஊழல்அல்ல.
மக்கள் மடையர்கள்
மீண்டும் வாக்களிப்பார்கள்
என்ற நம்பிக்கை.
வாழ்க பாரத ஜனநாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக