திங்கள், அக்டோபர் 15, 2012

விழித்தெழும் காலம் எப்போது.?


பாரத  நாடு 

பாரத மக்கள் எப்பொழுதுமே
தங்கள் தலைவர்களுக்காக ,
தங்கள் அரசர்களுக்காக,
உயிரைவிடுபவர்கள் .

தங்கள் அரசனுக்காக
முதுகில் அடிபடாமல்
நெஞ்சில் அடிபட்டு 
சாகும்  தன்  ஒரே மகனைப்பார்த்து 
 மகிழ்பவள் வீரத்தாய்.

அந்த மன்னன் எதற்காகப் போரிட்டான் 
,நாட்டின் நலனுக்கா 
தன்   அரண்மனை வளத்திற்கா
,அந்தப்புர அழகுக்கா 
  என்று கூட 
சிந்திக்காத மக்கள்
.அழகான அரசகுமாரி
மன்னன் ஆசைப்பட்டான் 
என்பதற்காக பல்லாயிரமான  வீரர்கள்
தன் உயிர்த்தியாகம் செய்த நாடு.
குடி ஆட்சியிலும் அதே பரம்பரை ரத்தம் ஓடுகிறது.

தான் விரும்பும் நடிகனின்
நிழற்படத்திற்கு பாலாபிஷேகம்.
தேங்காய் உடைப்பு.
தன்  வீட்டில் சாப்பாடு
 இல்லை என்றாலும் .
வீட்டில் உள்ளோர்
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை.
தண்டச்சோறுன்னு அப்பன் சொன்னா 
டேக்  இட் பாலிசி தான்.

சினிமா டிக்கட் நூறு இருநூறு  என்றாலும் 
திருட்டுத் தனமாக  ஒரு டிக்கட் 
ஆயிரம் இரண்டாயிரம் என்றாலும் 
வாங்கி திரைப்படம் பர்த்து மகிழும் கூட்டம்.
அந்த திரைப்பட அரங்கு வாயிலில் 
பசிக்கு அழுகும் குழந்தைக்கு 
உதவாத உயர்ந்த உள்ளம். 
அங்கு  கோடியில்  புரள்வது 
கருப்புப் பணம் சேர்வது 
தெரிந்தாலும் 
ஊழல் வளர்க்கும் கூட்டம்.

சேவகம் செய்தே வளர்ந்த   மக்கள்,
நம் மக்கள்.
தலைவர்களுக்கு  பிரதிபலன் 
பாராமல்    தொண்டு  செய்யும்  உள்ளம் படித்தவர்கள்.
விழித்தெழும் காலம் எப்போது.?
தங்கள் தெரு குண்டும் குழியுமாக 
இருக்க 
இடிக்க கட்ட ,கட்ட இடிக்க 
என்று 
தங்கள் வரிப்பணம் 
வீணாவதை  எதிர்த்துப்
  போராடும் 
காலம்  
எப்போது?


கருத்துகள் இல்லை: