மதுக்கடையும் கோவிலும்
அமிதாப் பச்சன் தந்தை ஹரிவம்சராய் பச்சன்.
அவர் ஹிந்தியில் புகழ் பெற்ற கவிஞர்.
மகன் பெயரால் இன்று ஹிந்தி படிக்காத
தமிழர்களுக்கு அறிமுகம்.
அவரின் கவிதை மது சாலா
அதன் மையப்பொருள் கொண்டு தமிழில் அறிமுகம்.
ஹிந்து தனித்திருந்தான் ஆலயத்தில்.
முஸ்லிம் தனித்திருந்தான் மசூதியில்.
கிறிஸ்தவன் தனித்திருந்தான் சர்ச்சில்.
மூவரும் சந்தித்து ஒற்றுமையாய் ஒரே கோப்பையில்.
மகிழ்ச்சியாக ஆனந்தமாய் மன நிறைவாய்
சகோதரப்பாசத்துடன் இணைத்த இடம்
ஆலயங்கள் அல்ல.
அவை அவர்களைப் பிரித்தன,
மனிதர்களை இணைத்த இடம்
மதுசாலை.
புரோஹிதர்கள்,பண்டிதர்கள்,
மௌலவிகள்,பாதரியார்கள்,
பிரித்த உறவுகளை
மீண்டும் இணைக்க
அழைக்கிறது எனது மதுக்கடை
அதாவது என் கவிதைகள்.
சண்டைகள் உருவாக்கும் தேவாலயங்கள்,
எனது கவிதை என்ற மதுக்கடை
மதங்களை
இணைக்கும்
.மனங்களை
இணைக்கும்,
மனிதநேயம் வளர்க்கும்,
எனது மதுசாலை கவிதைகள்.
அமிதாப் பச்சன் தந்தை ஹரிவம்சராய் பச்சன்.
அவர் ஹிந்தியில் புகழ் பெற்ற கவிஞர்.
மகன் பெயரால் இன்று ஹிந்தி படிக்காத
தமிழர்களுக்கு அறிமுகம்.
அவரின் கவிதை மது சாலா
அதன் மையப்பொருள் கொண்டு தமிழில் அறிமுகம்.
ஹிந்து தனித்திருந்தான் ஆலயத்தில்.
முஸ்லிம் தனித்திருந்தான் மசூதியில்.
கிறிஸ்தவன் தனித்திருந்தான் சர்ச்சில்.
மூவரும் சந்தித்து ஒற்றுமையாய் ஒரே கோப்பையில்.
மகிழ்ச்சியாக ஆனந்தமாய் மன நிறைவாய்
சகோதரப்பாசத்துடன் இணைத்த இடம்
ஆலயங்கள் அல்ல.
அவை அவர்களைப் பிரித்தன,
மனிதர்களை இணைத்த இடம்
மதுசாலை.
புரோஹிதர்கள்,பண்டிதர்கள்,
மௌலவிகள்,பாதரியார்கள்,
பிரித்த உறவுகளை
மீண்டும் இணைக்க
அழைக்கிறது எனது மதுக்கடை
அதாவது என் கவிதைகள்.
சண்டைகள் உருவாக்கும் தேவாலயங்கள்,
எனது கவிதை என்ற மதுக்கடை
மதங்களை
இணைக்கும்
.மனங்களை
இணைக்கும்,
மனிதநேயம் வளர்க்கும்,
எனது மதுசாலை கவிதைகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக