செவ்வாய், டிசம்பர் 13, 2011

soordhass prayer

சூர்தாஸ் ஹிந்தி பக்தி கால இலக்கியத்தின் சூரியன் என்று போற்றப்படுபவர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான இவர்  மனம் வேறு எந்த இறைவனையும்

விரும்பவில்லை.

 அவர் பகவான் ஹரியை வணங்கு வதற்கான காரணங்களாக

ஒரு பஜனைப்பாடல் இயற்றி உள்ளார்.

1.
நான் ஹரியின் தாமரைப் பாதங்களை  வணங்குகிறேன்.

அவரின் கிருபையால், கால் ஊனமுற்றவனால் ,

மலைமேல் ஏறி இறங்க முடியும்.

கண்தெரியாதவனால்

 எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

காது கேட்காதவனால்

 கேட்க முடியும்.

ஊமையால்

 பேசமுடியும்.

ஏழையால்

  மன்னனாக முடியும்.

உலகில்  ஹரியின்  அருளால்

இயலாது  என்பதெல்லாம்

இயல்பாக  இயங்கும்.



                                    2.

சூர்தாஸ்  நந்தனின் புத்திரனிடம் வேண்டுகிறார் :-

பிறந்தது   முதல் ,நான் ஆடாத ஆட்டமில்லை.

காமம் ,குரோதம் என்ற ஆடை அணிந்து ஆடினேன்.

 இவ்வுலக இன்பங்களின் மாலையாக

கழுத்தில்  அணிந்து  ஆடினேன்.

காலில் மோகம் என்ற சலங்கை அணிந்து ஆடினேன்.

இவ்வுலகை  உண்மை என்றும்  ,

நிலையானது  என்றும்  நினைத்து,

  மாயையில்  மனம் என்ற மிருதங்கம்

வாசித்துக்கொண்டே இருந்ததது.

கெட்டவர்களின் சகவாசம் என்னை

  மாற்றி-மாற்றி ஆடவைத்தது.

மாயை என்ற ஆடை  இடையில்  கண்களை  மறைக்க


பேராசையை என்ற திலகத்தை நெற்றியில்  இட்டு

ஆடாத ஆட்டங்கள் ஆடினேன்.-என்

ஆட்டங்கள் அறியாமையால் தான்.

அறியாமல் முட்டாள்தனமான என் ஆட்டங்களுக்கு

வடிகாலாக   உன்னைக்  கருதி  உன்னை

சரணடைகிறேன்.

.நந்தகோபால!சூர்தாஸின்

 வேண்டுகோள்  இதுதான்--

எனக்கு  முக்தி கொடு.

கருத்துகள் இல்லை: