திங்கள், டிசம்பர் 05, 2011

why there is a group against divine power.

மனிதன் நாத்திக வாதத்திற்கு ஆதரவு தருவது ஏன்?

போலி பக்தர்கள்,சாமியார்கள்,சித்துவேலை செய்பவர்கள்,மடாலயங்கள்,ஆலயங்களில் நடக்கும் அட்டகாசங்கள்,
  1. முக்கிய பிரமுகர்களுக்கு ராஜோபசாரம்.
  2. பணம் படைத்தவர்களுக்கு துரித தர்சனம்.
  3. ஆச்சாரியர்கள் ,மடாதிபதிகளின் ஆடம்பர வாழ்க்கை.
  4. சிறப்பு தரிசனம்,விசேஷ பூஜை,அர்த்த ராத்திரி பௌர்ணமி பூஜை,அமாவாசை பூஜை, கட்டணம் பல்லாயிரம்.
  5. குவிந்து கிடக்கும் ஆபரணங்கள்,கோடிக்கணக்கில் வருமானவரி கட்டா கருப்புப்பணங்கள்,
  6. தெய்வ பாஷை  என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம்.
  7. கோயில்களில் தூய்மை இன்மை.
  8. கோயில் தெப்பக்குளங்கள் பராமரிப்பின்மை.\
  9. கோயில் நிலங்கள்,அசையாச்சொத்துக்கள்
      அதிலிருந்துவரும் வருமானம் சரிகட்டாமை.
  10.   சனாதன  தர்மமான இன்றைய ஹிந்து மதத்திற்கு எதிராக தூற்றுவோர் சிறுபான்மையினராக இருந்தாலும் அரசு போற்றுகிறது.
  11. தைப்பூசம்.கார்த்திகை தீபம்,பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு கூடும் கூட்டம், சேரும் உண்டியல் துகை,ஆழ் மன பக்தியின் வெளிப்பாடு.
  12. அத்தகைய இயற்கையான ஒருவித தெய்வீக பக்தி-பயம் இல்லாதகூட்டம்  நாத்திக வாதிகளுக்கு சேருமா.?
  13. மேற்கண்ட பல குறைபாடுகள் இருப்பினும் நமக்கு ஆண்டவன் வேண்டியதை வேண்டும்  சமயம் அருள்வார். நமக்கு நேரம்  சரில்லை
  14. ஏழரை நாட்டு   சனி. தெரிந்து செய்த பாவம்,தெரியாமல் செய்த பாவம்,
  15. புரிந்தும் புரியாமலும் செய்த பாவம்,பூர்வ ஜன்ம புண்ணிய பாவம்
  16. என்று ஆஸ்திக கூடம் பெருகி வருகிறது.
  17. ஹஜ் யாத்திரை ஒன்றே போதும் நாத்திக வாதம் எடுபடாது என்பதற்கு.
  18. கிறிஸ்தவர்கள் ஞாயிறு அன்று மாத கோவில்களிலும் சர்ச்களிலும் காட்டும் பக்தி.
  19. அறிவியல் கண்டுபிடிப்புகள் வசதி படித்தவர்களுக்கே ,பணம் இன்றி  அறிவியல்  வசதிகள்  ஏழைக்கு கிட்டாது .இன்றும் மின்விளக்கு வானொலிப்பெட்டி வாங்க ஏங்கும் ஏழைகள்/. 
இறைபக்தர்கள் உண்மையானவர்களாக
பக்தி மான்களாக இருந்தால்
 ஒரு கோவணமும் ஒரு குடிசையும் போதும்.
இன்றைய பக்தி ஆடம்பர மானது.
 அதுவே நாத்திகத்திற்கும்  பகுத்தறிவிற்கும்
அடிகோல்கிறது.

ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தர்,தாண்டியாயன் அலேசேண்டரை கடுங்குளிரில் ஆடையின்றி அவர் கொடுத்த ஆடைகளை ஏற்காமல்  பணிவுடன் வணங்க வைத்தது வரலாறு கண்ட நிகழ்ச்சி.
நேர்மை இல்லா பரிகாரம் பிராயச்சித்தம் சித்தத்தை தெளிவு படுத்தாது.










  1. '

கருத்துகள் இல்லை: