திங்கள், டிசம்பர் 05, 2011

God is every where.Faith in God is ever green.


இறைவன்  இவ்வுலகில் இன்னல்களை  படைத் தானா?மனிதன்  இன்னல்களை

வரவேற்கிரானா? என்பதில் இயற்கையான இன்னல்கள் வேறு.மனிதனாக வரவேற்கும் இன்னல்   வேறு.
எந்த ஒரு அறிவியல் சக்தியோ ,மனித சக்தியோ இயற்கை இன்னல்களை மாற்றும் தன்மை பெறவில்லை.அப்படியே பெற்றாலும் அந்த இன்னல்களின் பக்க விளைவுகள் இருந்துகொண்டே இருக்கின்றன.
சிலர் இயற்கையின் இனிய காட்சிகளை மட்டுமே ரசிக்கின்றனர்.சிலர் இயற்கையின் இன்னல்களை மட்டுமே எண்ணுகின்றனர்.சிலர் எதிர்  நீச்சல் .போடுகின்றனர். எப்படி இருந்தாலும் இயற்கை மாற்றங்களை அறிவியலால் தடுக்க முடியவில்லை. நானே கடவுள் என்று கூறும் மனிதன்
  1. கடல் அலைகளை நிறுத்த முடியுமா?
  2. இலை உதிர்காலந்தை வசந்தகாலமாக மாற்றமுடியுமா?
  3. கடும் வெயில் காலத்தில் மயிலை தோகை விரித்து ஆடவைக்க முடியுமா?குயிலின் இனிய குரலைக்கேட்க மழைகாலத்தில் தவளையின் கடூரமான சத்தத்தை நிறுத்த முடியுமா?
  4. பனிப்பொழிவை நிறுத்தமுடியுமா /?
  5. குழந்தைப்பருவம் முதல் முதுமை வரை உள்ள மாற்றத்தை இளமையாகவே நிறுத்த முடியுமா?
  6. நோய்களுக்கு மருந்துகள் சிகிச்சை முறைகள் நோய் அறியும் சோதனைகள் சாதனங்கள் அனைத்தும் கண்டு பிடித்தாலும் புதிய புதிய நோய்கள் உருவாவதைத் தடுக்க முடியுமா?
  7. கருப்பு முடி வெள்ளை முடியாக மாற்றமுடியுமா?
  8. paalai வனத்தை விளை நிலமாக  மாற்றமுடியுமா?
  9. வைரச்சுரங்கம்,தங்கச்சுரங்கம்,பெட்ரோல் போன்றவைகளை தான் இருக்கும் இடத்தில் பூமியைத்  தோண்டி பெறமுடியுமா/?
  10. கருப்பர்கள்.வெள்ளையர்கள்,குள்ளம் உயரம் என்ற மனித இன வேறுபாட்டை மாற்றமுடியுமா?
  11. நெருப்பில் சூடாக்கும் பொருளை நெருப்பாலே குளிர வைக்க முடியுமா?
  12. குளிர்சாதனப்பெட்டியில் சூடாக்க முடியுமா//
  13. மலைப்ப்ரதேச தாவரங்களை பூமியில் விளைவிக்க முடியுமா?
இதை எல்லாம் நாத்திகர்கள் செய்யும் வரை கடவுள் அதாவது  மனித சக்திக்கும் அப்பாற்பட்ட சக்தியை நம்பாதே என்பது தான் மூடநம்பிக்கை.
இறை  நம்பிக்கைகள் தான் மனித நேயத்தை, சத்தியத்தை,நியாயத்தை,பரோபகாரத்தை,தியாகத்தை நிலைநாட்டும்.
போகத்தை வளர்ப்பது நாத்தீகம். பற்றற்ற வாழ்க்கை உண்டாக்குவது மன நிறைவு மன அமைதி தருவது சத்யமாக ஆஸ்திகம்.

ஆஸ்திகள் குறுக்குவழியில் சேர்த்து நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணங்கள் வகுப்பது நாத்திகம்.

ஆசையற்ற தியாகமான சேவை மனப்பான்மையும் வாழ்க்கை பிறருக்காக என்பதே ஆஸ்திகம்.





கருத்துகள் இல்லை: