வியாழன், டிசம்பர் 08, 2011

selifish leaders -. suyanalath thalaivarkal munnetrath thadaikal.

மனிதன் அகங்காரத்தால்  தான் தான் பெரியவன்  என்பதற்காக
   மதவாதத் தலைவர்கள் மனிதர்களைப் பிரித்து
 இனப்படுகொலை செய்து சுகபோக
 வாழ்க்கை  வாழ்கிறார்கள்
.பக்தர்கள் அடிபடுகிறார்கள் .
மதத் தலைவர்கள் சுகமாக மடாலயங்களில்   தூங்கி
 மற்றவர்களை மடையர்களாக்குகின்றனர்.

அரசியல் வாதிகளும் இதைசாதகமாகப் பயன் படுத்தி மதச்சண்டை,ஜாதிச்சண்டை,இனக்கலவரம்  போன்றவைகள ஏற்படுத்தி
 தன்பதவிகளுக்காக்க  மக்களை பகடைக்காய்களாக உருட்டி விடுகின்றனர்.
உருளுவது மக்கள் தலைகள்.
தலைவர்கள் வாழ்க்கை கோடியில்.
தொண்டர்கள் வாழ்க்கை கோவணத்தில்.

பாரதியார்  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார்.

மனிதநேயம் அன்பு, வாய்மை, நேர்மை ,என்ற பொதுவான கொள்கைகள் கூறிய உண்மை யான மதத் தலைவர்கள்
 முக்தி அடைந்த பின் அவரின் சீடர்கள்
அதை இரண்டாகவும் பல சம்ப்ரதாயங்களாகவும்
 பிரித்து   கூறு போடுகின்றனர்.

அரசியல் வாதிகள்   தங்கள்  தலைவர்கள் மடிந்தபின்
 கட்சிகளை பலதுண்டுகளாக பிரித்து
பல தலைவர்கள்.கொள்கை ஒன்றே.
  தலைவன் ஒன்றே.ஆனால் உண்மையான தொண்டன் நானே.நானே தலைவன் என்று பல தலைவர்கள்.
ஒருகட்சி வோட்டுக்கள் இரண்டு மூன்று கூறுகளாக.
எடுத்துக்காட்டாக தி.மு.க.+அ.தி.மு.க.+ம.+தி +மு.+க =35 +39 +10 =84  %.நாடு மக்கள் திராவிட கழகங்களை விரும்புகிறார்கள்.நாட்டின் நலனுக்காக என்ற எண்ணம் இருந்தால் ஒன்றாக இருக்கலாம்.

எதிர்கால பாரதத்தின் மிளிரும் இளைஞர்களே  சிந்திப்பீர்களாக.
தன்னலம் தவிர்த்து நாட்டு நலம்  சிந்திக்கும்  நேரம் இது.
பல நாட்டு முன்னேற்றங்கள் சுயநலங்களால் தடை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள்.

கருத்துகள் இல்லை: