வியாழன், டிசம்பர் 08, 2011

for readers thought.padipporin sinthanaikku.

 நாடு விடுதலை   பெற்று  அறுபத்தைந்து  ஆண்டுகள் ஆனாலும்
 இன்னும் நதிநீர் பங்கீட்டில் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை.
திரைப்படங்களால் ஒற்றுமை ஏற்பட்டாலும் 
  நதிநீர் பிரச்சனையால் சுயநல வாதிகள்
தமிழர் தெலுங்கர் மலையாளி என்று
 ஒரு பிரிவினை வாதம் ஏற்படுத்த முயல்கின்றனர்.
கொலைவெறி பாடல் விமர்சனத்தில் தனுஷ் தெலுங்கன். என்கின்றனர்
.ரஜினியை கன்னடன் என்கின்றனர்,
மம்முட்டி மலையாளி.
திரைப்படம் கலை என்ற கண்ணோட்டத்தில் ஒற்றுமை ஏற்படுத்துகின்றது.
ஆனால் சில குறுகிய நோக்கம் கொண்ட  நாட்டை மதிக்காத
 நோட்டையும் ஊழலையும் மதிக்கின்ற மதவாதிகள்
 அரசியல்வாதிகள் கலக்கம் உண்டாகி
 மொழி வெறியால் சுயநலம் அதிகம்.
சிந்திப்பீர் இளைஞர்களே.!!
பகுத்தறிவு  தலைவர்  தீண்டாமை  ஒழித்த வீரர் .
இன்றைய திராவிட முன்னேற்றக்   கழகங்களின்   அடிக்கல் தந்தை பெரியார்,
வை. கோ.அவர்கள்,விஜயகாந்த்.சத்யராஜ்,வீரபாண்டிய கட்டபொம்மன்  என்ற தமிழர்களிடம் தமிழுணர்வு ஊட்டிய தலைவர்கள்
தாய் மொழி தெரிந்து கொள்வீர்.

நாடுதான் முக்கியம்.தெய்வம் இல்லை என்று கூறியவர்கள்
தேர்தல் நேரத்தில் யக்ஞங்கள்   செய்கின்றனர்..
தமிழகம்  புதுவை  தவிர  மற்ற தென்  மாநிலங்கள்
 அகில இந்திய தொடர்பு மொழியாக இந்தி பயில்கின்றனர்
.புரட்சித்தலைவி இன்றைய மாண்புமிகு முதல்வர்
 ஹிந்தியில் பேச்சாற்றல் மிக்கவர்.
தன் தலைவிக்கு  ஆங்கிலம் தெரியும்.
தன் தலைவிக்கு ஹிந்தி தெரியும்  என
பெருமிதம் கொள்ளும் தொண்டன்,
அடிமட்டத்தொண்டன் தமிழ் மட்டும்  படிக்கவேண்டும்.
தமிழகத்தைத் தாண்டக்கூடாது.

 திராவிட  முன்னேற்றக்கழகம்
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதும்
ஹிந்தியின் அவசியத்தை மனசாட்சிப்படி அறிந்திருப்பர்.
ஆனால் பொதுமக்களை மட்டும்
ஹிந்திமொழி படிப்பதைத் தடுத்து
சுயநலத்தால் இரட்டைக்குழல்  துப்பாக்கி என்பர்.
பணம்படைத்த அரசியல் வாதிகள் யாரும்
அரசுப்பள்ளி தமிழ் மீடிய வகுப்பில்
தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.
அவர்கள் சி.பி.எஸ் .சி  பள்ளி நடத்துகின்றனர்.
தன் குழந்தை அம்மா என்ற தமிழ் சொல்மட்டும்
சொன்னால் போதும் என்று பெருமைப்படுகின்றனர்.

உண்மைநிலை பாரதம் முழுவதும்
 தாய்மொழிக்கல்வியை விரும்பாத நிலைதான்.
ஆசிரியர்களும் தமிழ் வழி பயிலும்
 மாணவர்களை இரண்டாம் தரமாகத்தான் கருதுகின்றனர்.
 காரணம் அவர்கள் ஏழைகள்.
அவர்களால் டியூஷன் கட்டணம் தர முடியாது.
அவர்கள் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இச்சூழலில் பரந்த நோக்கம் வேண்டும்.
நமது நாட்டின் விடுதலைப்போராட்ட தலைவர்கள்
அனைவருமே ஆங்கில  மேதைகள்
.மகாத்மா,நேஹ்ருமாமா திலகர் என.
தமிழகத்தில் மட்டும் பெருந்தலைவர் தவிர
அனைவரும் ஆங்கில அறிவு பெற்றவர்கள்.
விடுதலைப்போரட்டத்தில் தேச ஒற்றுமை ஆங்கிலத்தால் தான். நீதிக்கட்சியினர் ஆங்கிலத்தை ஆட்சியை விரும்பியவர்கள்.
பொருளாதாரம் இல்லை என்றால் நாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொருளாதாரம் தரும் ஆங்கிலம் மதம் இந்திய மொழிகள் அனைத்தையும்
மறக்கடிக்கச்செய்யும். பசி வந்திட பத்தும் பறந்துபோம்.
பலமொழி அறிவுதான் தாய்மொழிப்பற்று உண்டாக்கும். இல்லையேல் தனுசின் கொலைவெறி தங்க்லீஷ் தான் .

சிந்திப்பீர்.தவறுகள் எங்கே என்று.நாடுதான் நமக்கு .
சுயநல  சூட்கேஸ்   அரசியலிலிருந்து  நாட்டைக்காப்பீர்.
ஒரு மொழியின் வளர்ச்சி உணர்வு   மூலம்.
வெறும்  வாழ்த்தால்  சுயநலத்தால்  அல்ல.
தமிழ்மட்டும் அறிந்தவர்களுக்கு  தமிழக அரசு
கொடுக்கும் வேலை ஓதுவார்  வேலை.
அதற்கு ஊதியம் அளிக்குமா.
ஆண்டவன் துதி மட்டும் பாடினால் வசதியான
 வாய்ப்பு  வசதிகள்  கிட்டும்மா/

தமிழ் மட்டும் ஒருமொழி என்று பாடத்திட்டமும்
 அவ்வாறு படித்தல் வேலைவாய்ப்பு என்று
 சட்டம் வருமா.?

சிந்திப்பீரே. மஹா கவி கூறியது போல் தமிழ் வளம் பெற
பல மொழிகள் கற்பது அவசியம்.
சம்ஸ்க்ருதம்  அறிவு இல்லையேல்
 கம்ப ராமாயணம் இல்லை.
ஐம்பெருங்காப்பியங்கள்  பெயர்களே வடமொழி தான்.  சீவக சிந்தாமணி குண்டலகேசி  மணிமேகலை.வளையாபதி.
அப்பொழுது வளர்ந்த தமிழ் இப்பொழுது கொலைவெறி தங்க்லீஷ் ஆக மாறி
தமிழை வளர்க்கிறது.
என்னே நம் தமிழ் பற்று.
அனைவருமே டாடி மாமி தான் விரும்புகிறோம்.
டாடி மம்மி யாருமில்லை  ஒ!மை டாடி தான்.
தூய தமிழ் எங்கே?
சிந்திப்பீர்.எனது சிந்தனை தவறா/


.

கருத்துகள் இல்லை: