திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

படித்ததில் பிடித்தது..
அருமை.. பிரமாதம்.. சிறப்பு.. மிக சிறப்பு..
வாழ்த்துக்கள்.

Padmini Priya Subramanian சொன்னது…

ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள் அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.

Miga arumai!

பெயரில்லா சொன்னது…

மிக அருமை.