திங்கள், டிசம்பர் 26, 2011

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.

கருத்துகள் இல்லை: