சனி, ஆகஸ்ட் 24, 2013

ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.

தூக்கம் வரவில்லை.
 எதையாவது எழுதலாமே என்றால்  எதை எழுதுவது.
அரசியல் ?
ஆன்மிகம்?திரைப்படம்?
இலக்கியம்.
அறிவியல்
வரலாறு
புதினம்
சிரிப்பு
கவிதை

புத்திவேண்டுமே   எழுத?
படிக்கவேண்டுமே ?
எழுத்தில் கவர்ச்சிவேண்டுமே ?
கரு புதுமை படிக்கவேண்டுமே?

அரசியல் சாக்கடை என்றால்

ஆன்மிகம்?உடனே செய்திபடித்த நினைவு.

ஆசாராம்  ஸ்வாமிகள்

ஆபாசமான எண்ணம்.

சமுதாயம் என்றால் விபத்து,கொலை கொள்ளை கற்பழிப்பு

மதம் மனிதர்களை வேறுபடுத்துகின்றன.தீவீரவாதி குற்றவாளி.

அதிலும் மதம் இந்து தீவீரவாதி;முஸ்லிம் தீவீரவாதி

அதிலும் முஸ்லிம் தீவீரவாதிகள் வழக்கு விரைவில் தீர்க்கவேண்டும்.

மத்திய அரசு ஆர்வம்.
உடனே மற்ற தீவீரவாதிகள்  ஏன்  அக்கறை இல்லை.
தேர்தலுக்காகவா?
மீண்டும் ராமர் கோவில் கட்டப்படும் .
அழகான இறைவன் யானைமுகத்தோனை
அழகு படவே செய்து ,கலைஞனின்  உழைப்பினையும் 
ஆண்டவனின் அழகையும் அலட்சியம் 
பளுதூக்கி  மூலம் எரியும் பரிதாபம் 
கழுத்தைப் பிடித்து கணேஷா ஒழிந்து  போ 
ராவண எரிப்புக்கும் .கஜமுகாசூரன்  கழுத்தருப்புக்கும்
கஜமுகனை கடலில் எறிவதற்கும் 
 என்ன வேறுபாடு என்பதை ஆன்மீகவாதிகள் 
விளக்கம் அளிப்பார்களா?
திலகருக்குமுன் இப்பழக்கம் உண்டா?
எந்த வேதம்  முழுமுதற்கடவுளை அழகுபடச் செய்து கடலில் வீசச் சொன்ன ஆதாரம் உள்ளது?
அர்த்தமற்ற மூட பக்தி  ஏன்?
இந்துக்கள் எழுச்சி என்று காட்ட 
இறைவனை அலைபாய வைத்து துண்டுகலாக்குவதா?
துங்கக் கரி முகத்து தூமணியை 
தூக்கிஎரியும்  துயரக் காட்சி  உணரா 

ஹிந்து ,
நானும் ஹிந்து தான் எனக்கும் பற்றுண்டு .

ஆனால் இச்செயல் எனக்கு ஹிந்துமதப்பற்று என்று கூற ஒப்பாது.
ஆயிரம் கோயிலில் அடித்துச் சொல்வேன்.






திங்கள், ஆகஸ்ட் 19, 2013

மரிக்கும் மனிதத் திமிர். -2

மரிக்கும் மனிதத் திமிர்.


மனிதன் என்றுமே  மற்றவர்கள் முன் தன்னை கெட்டவனாக அறிமுகப்படுத்த விரும்ப மாட்டான்.
அவன் செயலில் மற்றவர்களுக்கு நன்மை இருப்பதானால் 
மார் தட்டிக் கொள்வான்.நான் செய்த செயல் நன் மை அளிக்கிறது என்று.

ஆனால்  ,ஒரு ஆட்சியாளன் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்படுகின்றன.
அவன் தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கமுடியாது.
அந்தக்காலத்து மன்னர்கள் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகள் கூட்டமே இருந்தது என்றெல்லாம் படிக்கிறோம். அதை விமர்சனம் செய்யக் கூட பயந்த ராஜ விசுவாசம் மக்களிடம் இருந்தது.
மக்களுடைய நம்பிக்கை பெற்ற மன்னனுக்காக ,தன்  நாட்டிற்காக உயிர் விட தயாராக இருந்தனர்.
அதே சமயம் கொடுங்கோல் மன்னன் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாமல் இருந்தான்.

கரிகாலன் கட்டிவைத்த கல்லணையை இன்றும் புகழ்கிறோம்.மன்னர்கள் கட்டிய ஆலயங்கள்,குளங்கள்,நட்ட மரங்கள் என்று பெருமையாகக் கூறுகிறோம்.
அவ்வாறு அவர்களில் சிலர் செய்த  அநியாயங்களை பழித்துப் பேசுகிறோம்.

இன்று மக்களாட்சி நடைபெறுகிறது.இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் 
தனிப்பட்ட  வாழ்க்கை,பொதுவாழ்க்கை அனைத்தும் கவனிக்கப்படுகிறது.
அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்ப தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.
ஆனால் ,அவர்கள் மனமே போதும்.அவர்களுக்கு ஒரு தயக்கத்தையும் 
தோல்வி பயத்தையும் ஏற்படுத்தும். இவர்கள் தேர்தலில் தோற்றால் மதிப்பு கிட்டாது.
அவர்கள் வீட்டில் துன்பகாரியங்கள் நடந்தால் செய்த பாவங்களுக்கு ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்துள்ளான் என்றே கூறுவார்;நினைப்பார்.

எத்தனை நாள் தான் மக்கள் தங்கள் தலைவர்களின் கொள்கைகள் செயல்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கை இழந்தால் படுதோல்விதான்.
தோற்ற ஒருவர் 13 ஆண்டுகள் காத்திருந்து,வந்தவர் சரியில்லாததால் மீண்டும் தோல்வி.
தோற்றவர் மீண்டும் வெற்றி. காரணம் இருவருக்கு சரியான தலைவர்கள் நிலையாக இவர்களை எதிர்க்கவில்லை.
வைகோ அவர்களும் சரி,விஜயகாந்தும் சரி,காங்கிரஸ் காரர்களும் சரி,
ராமதாஸ் அவர்களும் சரி,இரு கம்யூனிஸ்ட்களும் சரி 
இவர்களை இகழ்வதும் பிறகு கூட்டணிவைப்பதும் சரியாகச் செய்கின்றனர்.

கூட்டணி என்பது எதிரிகளின் பலத்தைக் குறைத்து அவர்களை அடையாளம் இல்லாமல் ஆக்குவது.

அதை தமிழகத்தின் இரு பெரும் தூண்களும் சரியாகச் செய்கின்றன.
உறுதியில்லா மற்ற தலைவர்களை விட உறுதியுள்ள தலைவர்களாக நம்முன் இருப்பது 
திரு. மு.கருணாநிதியவர்களும் ,திரு ஜெயலலிதா அவர்களும் தான்.
ஆகையால் தமிழகம் இருவரையும் மாறி -மாறி அமரவைக்கும்.
மற்ற தலைவர்களும் மாறி-மாறி இருவரையும் தூற்றியும் போற்றியும் தங்களுக்கான பாதுகாப்பைப் பெற வேண்டியதுதான்.

ம்பாவம் மத்திய தரமக்களும் ஏழைகளும்.
குண்டும் குழியுமான சாலைகள்,குடிநீர் வசதியற்ற பகுதிகள் அப்படியே பழகிவிட்டனர்.

வாழ்க ஜனநாயகம்!வாழ்க தலைவர்கள்! 
போயஸ்கார்டன்,கோபாலபுரம் ,பெசன்ட் நகர்,ஆளுநர் மாளிகை முன் உள்ள சாலைகள் போல் இல்லை என்றாலும் சுமாரான சாலைகளை மடிப்பாக்க பிரம்மசக்தி ஆலாயம்,சதாசிவநகர் ,குபேர்நகர்  வாசிகள் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அந்த பிரம்மாவின் சக்தி தான் ஒரு எழுச்சியைத் தரவேண்டும்.

நரேந்திர மோதி.

  மோதி  அவர்களுக்கு  ஒரே ஒரு காராணமே போதும் பிரதமர் பதவிக்கு. குஜராத் மாநிலம் கடன் இல்லா மாநிலம்;
இதை எந்தமாநில அரசும் மறுக்கவில்லை.

எந்த மாநில அரசும் தங்கள் மாநிலம் கடன் இல்லா  மாநிலம் என்று சொல்லவில்லை.

ஊழலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் உத்தமர்  நரேந்திர மோதி. மற்றவர்கள் பயந்தே குரல் ஓட்டுக்காக கொடுக்கின்றனர்.

நாடென்பது நாட வளத்தன. அவ்வாறு ஒரு மாநிலம் வளம் பெற்றதென்றால், அவர் பாரதப் பிரதமர் ஆனால்  நாடே கடன் இன்றி இருக்கும்.

கடன் பட்டு கலங்கி நிற்க வேண்டாம்.

சிந்தியுங்கள். வாக்களியுங்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

மரிக்கும் மனிதத் திமிர்.

 இன்று  ஒரு செய்தி முகநூலில்

வீரப்பனை முடித்து விட்டோம்.

வீரப்பனை வீரப்பன் ஆக்கியவர்களை என்ன செய்தோம்.?

அவனிடம் சந்தனக் கட்டைகள்,யானைத்தந்தங்கள்

வாங்கிய அரசியல் வாதிகள்,அவன் குற்றப் பின்னணியில் இருந்த

சட்டமன்ற,பாராளுமன்ற,அதிகார்கள் ,அமைச்சர்கள் பட்டியல்

அவைகள் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நியாயமான கேள்வி?

ஊழல் ,குற்றவாளிகள் தேர்தலில் நிற்கத் தடை என்றால்.

அனைதுக்கட்சியும் ஒன்றாகி   உச்ச நீதிமன்றத்தில்

மேல் முறை ஈடு.

அநியாய அரசியல்; குற்றம் புரிந்த ௧௫௦  நூற்றி ஐம்பது பாராளுமன்ற

உறுப்பினர்கள்.

அவர்களுக்கு தங்கள் கட்சியில்  வேட்பாளர் ஆக்கிய கட்சித் தலைவர்கள்

அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள்

அனைவருமே  குற்ற வாளிகளா? இல்லையா?

வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

அன்பு

அன்பு . (ஹிந்தியில் படித்த கதை .)


     மாலா  பூஜை முடித்து வெளியே வந்தாள். ஆச்சரியம். வாயிலில் மூன்று சாதுக்கள். முகத்தில் ஒரு தெய்வீகக்  கலை. வணங்கினாள்.


வீட்டிற்குள் விருந்து சாப்பிட அழைத்தாள் .

அவர்கள் கேட்டனர் , உன் கணவர் இருக்கிறாரா? இல்லை என்றதும்

நாங்கள் உள்ளே வரமாட்டோம். என்று சென்றுவிட்டனர்.


சற்று நேரத்தில் கணவர் வந்தார். மாலா அவரிடம் நடந்ததைக் கூறினாள்.


உடனே கணவர்  நீ போய் அவர்களைக் கூப்பிடு. நான் வந்துவிட்டேன் என்று கூறி அழைத்துவா என்றான்.

மாலா  அவர்களை அழைக்கச் சென்றாள். அப்பொழுது அம்மூவரும் கூறினர்.

நாங்கள் ஒன்றாக வரமாட்டோம்.தனித்தனியே வருவோம். எங்கள் பெயர்கள்

செல்வம்,வெற்றி,அன்பு. எங்களில் யார் முதலில் வரவேண்டும்  என்று கேட்டுவா  என்றனர்.

மாலா தன கணவனிடம் விவரம் கூறி முதலில் யாரை அழைத்து வருவது

என வினவ,கணவன் செல்வத்தை அழைத்துவா. வெற்றியும் அன்பும் தானாக கிடைக்கும். என்றான். மாலை ,வெற்றி யை அழைத்தால் நன்றாக இருக்குமே என்றாள்.

கணவனோ வெற்றி என்பது உழைப்பில் வருவது. செல்வம் தான் முக்கியம் என்றான்.

மாலா ,செல்வத்தை அழைத்தாள்.
அப்பொழுது அந்த சாதுக்கள் வரமாட்டோம் என்றனர்.

மாலா காரணம் கேட்க, எல்லோரும் அழைப்பது,வெற்றியையும் ,செல்வத்தையும் தான். அன்பு இல்லை என்றால் இந்த இரண்டும் வராது.

உங்களிடம் அன்பில்லை. என்றனர்.

ஆம். அன்பு இல்லை என்றால் வெற்றியும் இல்லை;செல்வமும் இல்லை

என்று மாலாவும் அவள் கணவனும் உணர்ந்தனர்.

எனக்கு வள்ளுவர் குறள் நினைவுக்கு வந்தது.

என்பில் அதனை வெய்யில் போல் காயுமே அன்பில் அதனை  அறம்.

அன்பே கடவுள்.





   


   

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

முட்டையா ?கேரட்டா ?

 
முட்டையா ?கேரட்டா ?

நீ எப்படி இருக்க  விரும்புகிறாய் ?


ஒரு நாள் அலுவலகத்தில்  இருந்து வந்த மகள் ,உற்சாகமின்றி ,அகத்தின் அழகு  முகத்தில் தெரியும் என்பதுபோல்  சோகமே உருவாக விட்டுக்குள் வந்தாள் .


மகள் எப்பொழுதும் துள்ளிக் குதித்து  மகிழ்ச்சியாகத்  தோன்றுவாள்.

அம்மா அவளிடம் காரணம் கேட்க,

மகள்: என்னம்மா ,அலுவலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் இருக்கின்றனர்.

முறைப்பவர்கள். குறை சொல்பவர்கள். மேலாளர் சிடுமூஞ்சி .எரிந்து எரிந்து விழுகிறார். அப்ப-அப்ப  மின் தடை. எனக்கு அலுவலகம் செல்லவே பிடிக்கவில்லை.

அம்மா சரி ,என்னுடன் சமையல்கட்டிற்கு வா என்று அழைத்துச் சென்றாள் .


அங்கே மூன்று பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ,ஒன்றில் கேரட் ,ஒன்றில் முட்டை ,ஒன்றில் காப்பிக் கொட்டைகள்  போட்டு தனித்தனியாக கொதிக்கவைத்தாள் .

மகளுக்கு எதுவும் புரியவில்லை.

நன்றாக கொதித்ததும்,  மகளிடம் ,முதலில் கேரட் தொட்டுப்பார்க்க கொடுத்தாள் .  பின் எப்படி ?என்று கேட்டாள் . அது மிருதுவாக இருந்தது.

பின்னர் ,முட்டை.அதன் ஓட்டை பிரித்து இது எப்படி என்றாள் .

மகள் கெட்டியாக உள்ளது என்றாள் .

காப்பிக்கொட்டை கொதித்த நீர் கருப்பாக இருந்தது.

அம்மாவின்  செயல் அவளுக்குப் புரியவில்லை.

அம்மா விளக்கினாள் --கெட்டியாக இருந்த கேரட் மென்மையாகிவிட்டது.

முட்டை திரவமாக இருந்து திடமாகிவிட்டது.

காபிக்கொட்டை தண்ணீரின்  நிறத்தை மாற்றிவிட்டது.

நீ எப்படி இருக்கப்போகிறாய் ?மூன்றுமே தண்ணீரில் கொதிததுதான்.

கெட்டி-மேன்மை,திரவம்-கெட்டி ,காப்பி தண்ணீர் நிறமாற்றம் .


மகள் அம்மாவின் விளக்கத்தை புரிந்து கொண்டாள் .

அம்மா,இனி நான் வருத்தப்பட மாட்டேன். சூழ்நிலைக்குத் தக்கபடி,

மென்மையாக,கடினமாக,மற்றவர்களின் குணத்தை மாற்றுபவளாக மாறுவேன்.

அம்மாவை இருக்ககட்டி முத்தமிட்டாள்.

புதன், ஆகஸ்ட் 14, 2013

Knowledge Sharing: சிந்தியுங்கள் !செயல் படுத்துங்கள்.!

Knowledge Sharing: சிந்தியுங்கள் !செயல் படுத்துங்கள்.!: இன்று ஆகஸ்ட் 15. விடுதலை நாள். 67 ஆண்டுகள் நாம் சுதந்திர இந்தியாவில் உள்ளோம். நாடு முன்னேறி உள்ளது. வளர்ந்த நாடுகள் நம் நாட்...

சிந்தியுங்கள் !செயல் படுத்துங்கள்.!

இன்று ஆகஸ்ட் 15.

விடுதலை நாள்.

67 ஆண்டுகள் நாம் சுதந்திர இந்தியாவில் உள்ளோம்.

நாடு முன்னேறி உள்ளது.

வளர்ந்த நாடுகள் நம் நாட்டின் இளைஞர்கள்  படையின் ஆற்றல் கண்டு  போற்றுகின்றனர்.அச்சமும் பொறாமையும் படுகின்றனர்.
வளர்ச்சி விரைவில் உலகின் முதல் நாடாகும் நிலை.

இந்த விடுதலை கிடைக்க 

உயிர்த்  தியாகம் செய்த உத்தமர்களுக்கு  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் 
ஹிம்சாவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
அஹிம்சாவாதிகள் தடி அடி பட்டனர்.
சிறையில் பல இன்னல்கள் அனுபவித்தனர்.
செக்கிழுத்தார்கள்.
பல நோய்களுக்கு ஆனார்கள்.
மனைவி,மக்கள் ,சொந்தஊர்,
தன்னலம் துறந்து  சிலர் பதுங்கி வாழ்ந்தனர்.
இப்படிப்பட்ட  தேசப்பற்றாளர்களைக் 
காட்டிக் கொடுத்த துரோகிகள் 
அப்பொழுதும் வாழ்ந்தனர்.
இப்பொழுதும் வாழ்கின்றனர்.
தியாகிகள் இன்றும் போற்றப் படுகிறார்கள்.
போகிகள் ,துரோகிகள் தூற்றப் படுகிறார்கள்.
இன்றும் நாட்டில் போற்றப்படும் தலைவர்கள் உள்ளனர்.
தூற்றப்படும் தலைவர்களும் உள்ளனர்.
ஊழல் வளர்க்கும் அமைச்சர்கள்,
சட்டசபை ,பாராளுமன்ற உறுப்பினர்கள்,
கள்ளச் சந்தை ,போதைப் பொருள் கடத்தும் கும்பல்கள்,
பணத்திற்கு அடிமையாகும் அதிகாரிகள்,
நியாயம் ,நேர்மையாக உள்ள அதிகாரிகள்  இடமாற்றம் ,
கூலிப்படைவைத்துக் கொலைகள்,
மாற்றான் மாணவி,மாற்றாள்  கணவன் மேல்  மோகத்தால் கொலைகள்,
கற்பழிப்புகள்,அதைச் செய்வோருக்கு 
கடும் தண்டனை இல்லாமை  என 

பார்புகழும் பாரதம் பார் இகழ்  பாரதமாக  மாறிவருகிறது.

இந்த விடுதலை நாளில் 
தேசபக்தி உள்ளோரும்.
இளைஞர்களும்
விழித்துக்கொள்ளவேண்டும்.
ஜாதிச் சண்டைகள்,மதச் சண்டைகள் 
இனச் சண்டைகள்,
மாநிலத்தை துண்டாக்கும் போராட்டங்கள் 
அனைத்துமே தனிப்பட்ட ஆதாயத்திற்காக என்பதை 
உணரவேண்டும்.
சிலர் தங்கள் பதவியைக்காகவும்,
சிலர் தங்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்கவும்,
சிலர் தங்கள் சுயநலத்திற்காகவும் 
சிலர் தங்கள் மற்றும் தங்கள் 
வாரிசுகளின் சுகத்திற்காகவும் 
பல தேச ஒற்றுமை,நலத்திற்கு 
விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

15.8.13 விடுதலை  நாளில் 
நாம் நாட்டின் நலனே பெரிதென 
விழித்துக் கொள்ள வேண்டும்.
நாட்டைக்காக குற்றவாளிகள் 
தண்டனை பெற 
காமராஜர்,கக்கன்ஜி ,குல்ஜாரிலால் நந்தா ,லால் பகதூர் சாஸ்திரி போன்ற 
நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து 
ஆட்சிகட்டிலில் அமரவைக்கவேண்டும்.

இதுவே நம்நாட்டுக்கு விடுதலை வாங்கித்தந்த  உத்தமத் தலைவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
வாழ்க பாரதம் !வாழ்க மணித்திரு நாடு.!
நீர் அதன் புதல்வர் !
இந்நினைவகற்றாதீர்.
நாடு  நேர்மையாளர்களால் 
ஆளப்பட 
சிந்தியுங்கள் !செயல் படுத்துங்கள்.!
ஜய்  ஹிந்த் ! 

விடுதலைக்குப்பின் நடந்த 
சைனா,பாக்.போரில் 
உயிரை இழந்து வீரமரணம் அடைந்த 
நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு 
வீரவணக்கம்.சிரந்தாஞ்சலி.
ஜய்  ஜவான் !ஜய்  கிசான்.
வாழ்க வீரர்கள் ! வாழ்க விவசாயிகள் !

லாலா லஜபதிராய் ,பால கங்காதர திலகர்,
செக்கிழுத்த செம்மல் வ.வு,சிதம்பரனார் ,

வீர பகத் சிங் ,கொடிகாத்த குமரன் ,
வாஞ்சிநாதன்  ,சந்திரசேகர ஆசாத்,
போன்ற தன்னலம் கருதா வீர ஆத்மாக்கள் 
நாட்டைக்காக  ஒரு எழுச்சியைத் தரட்டும்.
ஜய்  ஹிந்த்.



விடுதலை
நாம் 
 பெற்று  66 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நாடு  முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதில் ஐயமா ? இல்லை.

கல்வியில் முன்னேற்றம்.

அரசுப்பள்ளி ,நகரட்சிப்பள்ளிகள்  இல்லை என்றால் 

பலர்  படித்திருக்கவே முடியாது.

ஆனால் இன்று நிலை அப்படியே மாறிவிட்டது.

10967 வரை ஆங்கிலப்பள்ளிகள்  என்பது பணக்காரர்கள் மட்டும் ஊட்டி ,
கொடைக்கானல் மற்றும் பெரிய நகரங்களில்  தான்.

இந்நிலை மாறி சிறிய சிற்றூர் களிலும் ஆங்கிலப்பள்ளிகள் 
ஆரம்பிக்கப்பட்டன.

இதன் அசுர வளர்ச்சிக்கு அரசு காரணமா ?

கல்வித்துறை காரணமா ?

ஆசிரியர்களா ? பெற்றோர்களா ?

இவர்களையும் மீறிய ஒரு தேவை.

கல்லூரிபடிப்பு.
அது ஆங்கிலவழியில் தான்.

வேலைவாய்ப்பு ஆங்கிலம் தெரிந்தால் தான்.

படிப்பதன் முதல் பயனே சம்பாதிக்க.

இன்று தொழில் நுட்பக் கல்வி,
கணினிக் கல்வி  இல்லை என்றால் 

வேலைவாய்ப்பு  அரசு அளிக்க முடியுமா ?

எத்தனை ஏழை ,நடுத்தரமக்களை 

இந்த ஆங்கில வழி  வேலை வாய்ப்பைத் 

தந்திருக்கிறது என்பது உண்மை.

தொழில் வளம்  வளர்ந்தாலும் 

ஐ.டி .துறை அளவிற்கு  வேலைவாய்ப்பு அளிக்கும்

,ஊதியம் வழங்கும் துறை  வேறு கிடையாது.

வீடுகட்டும் தொழிலாளி ,ஆட்டோ ஓட்டுனர் ,

சலவைத்தொழிலாளி,துப்புரவுத் தொழிலாளி 

என அனைவருக்கும் ஆங்கில அறிவு தேவைப்படுகிறது.
சில ஆங்கில வார்த்தைகள் அனைத்துத் தொழிலுக்கும் தேவை.

இந்த தனியார் ஆங்கிலப் பள்ளிகள்  வளர்ச்சி கண்டு 

புலம்பும் கூட்டம்  ஒன்றை மறந்து விடுகிறது.

பொதுமக்கள் பேராதரவின்றி  இப்பள்ளிகள் நடக்காது.

ஏன்  அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகள் 
.நகராட்சிப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு வந்தன.

இப்பள்ளிகளின்  ஆசிரியர்கள் குறைவதால்

 அரசுக்கு கல்விக்காக ஆகும் சிலவு குறையும்.

பெற்றோர்களுக்கு ஏன்  அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கே 
தங்கள் பிள்ளைகளைப்  படிக்க  தனியார் பள்ளிகளுக்கே அனுப்பப் பிடிக்கும்.

இந்நிலையில் கல்வி தனியார் பள்ளிக்கும் ,பொதுமக்களின் விருப்பத்திற்கும் 
விட்டுவிட்டால்  

சமுதாயத்திற்கு நன்மையே.

கல்வி அதிகாரிகள் தகுந்த ஆய்வு செய்தால் ஆசிரியர் சங்கம் .

ஆசிரியர்கள்  எப்படி என்பதை பொதுமக்கள்,
அதிகாரிகள் அறிவர் .











செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

Steve Jobs

Steve Jobs Quotes in Hindi

 

Steve Jobs Quotes in Hindi
Steve Jobs
NameSteve Jobs / स्टीव जाब्स
BornSteven Paul Jobs
February 24, 1955
San Francisco, California, U.S.
DiedOctober 5, 2011 (aged 56)
Palo Alto, California, U.S.
NationalityAmerican
FieldTechnology, Business,Innovator
AchievementCo-founder of Apple, Man behind iPad,iPhone and many more innovative Apple products.

STEVE JOBS QUOTES IN HINDI

 स्टीव जाब्स के अनमोल विचार

Quote 1: Innovation distinguishes between a leader and a follower.
In Hindi: नयी खोज एक लीडर और एक अनुयायी के बीच अंतर करती है.
புதிய ஆராய்ச்சி  ஒரு தலைவருக்கும் அவரை பின்பற்றுபவருக்கும் இடையில் 
வேறு  படுத்துகிறது.
Steve Jobs  स्टीव जाब्स
Quote 2: Your time is limited, so don’t waste it living someone else’s life. Don’t be trapped by dogma – which is living with the results of other people’s thinking. Don’t let the noise of other’s opinions drown out your own inner voice. And most important, have the courage to follow your heart and intuition. They somehow already know what you truly want to become. Everything else is secondary.
In Hindi :आपका समय सीमित है, इसलिए इसे किसी और की जिंदगी जी कर व्यर्थ मत कीजिये. बेकार की सोच में मत फंसिए,अपनी जिंदगी को दूसरों के हिसाब से मत चलाइए. औरों के विचारों के शोर में अपनी अंदर की आवाज़ को, अपने इन्ट्यूशन को मत डूबने दीजिए. वे पहले से ही जानते हैं की तुम सच में क्या बनना चाहते हो. बाकि सब गौड़ है.
நீங்கள் வாழும் காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.ஆகையால் இதை மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்ந்து வீணாக்காதீர்கள்.வீண் சிந்தனையில் சிக்காதீர்கள்.உங்கள்  வாழ்க்கையை மற்றவர்களின் கணக்கில் நடத்தாதீர்கள்.மற்றவர்களின் எண்ணங்களின் இரைச்சலில் உங்களுள் இருக்கும் ஓசையை ,உங்கள் உள்ளுணர்வை மூழ்கடித்துவிடாதீர்கள்.நீ என்ன ஆக விரும்புகிறாய் என்பதை முதலிலேயே அவர்கள் அறிவார்கள். 

Steve Jobs  स्टीव जाब्स

Quote 3: Design is not just what it looks like and feels like. Design is how it works.
In Hindi : डीजाइन सिर्फ यह नहीं है कि चीज कैसी दिखती या मह्सूस  होती है . डिजाइन यह है कि चीज काम कैसे करती है.
வடிவமைப்பு என்பது அதன் தோற்றத்திலோ,உணர்வதிலோ இல்லை.வடிவமைப்பு  என்பது  எப்படி அது செயலாற்றுகிறது என்பதுதான்.

 Steve Jobs  स्टीव जाब्स

Quote 4: Why join the navy if you can be a pirate?
In Hindi : जब आप समुद्री डांकू बन सकते है तो फिर नौसेना में जाने कि क्या ज़रुरत है?
நீங்கள் கடற்கொள்ளையனாக ஆகமுடியும் என்றால் கடற்படையில் சேர வேண்டிய அவசியம் என்ன?

Steve Jo-bs  स्टीव जाब्स

Quote 5 :Remembering that I’ll be dead soon is the most important tool I’ve ever encountered to help me make the big choices in life. Because almost everything — all external expectations, all pride, all fear of embarrassment or failure – these things just fall away in the face of death, leaving only what is truly important. Remembering that you are going to die is the best way I know to avoid the trap of thinking you have something to lose. You are already naked. There is no reason not to follow your heart.
 In Hindi : इस बात को याद रखना कि मैं बहुत जल्दी  मर जाऊँगा.  मुझे अपनी ज़िन्दगी  के बड़े निर्णय लेने में सबसे ज्यादा मददगार होता है, क्योंकि जब एक बार मौत के बारे में सोचता हूँ, तब सारी उम्मीद , सारा गर्व असफल  होने का डर सब कुछ गायब हो जाता है और सिर्फ वही बचता है जो वाकई ज़रूरी है.इस बात को याद करना की एक दिन मरना है…किसी चीज को खोने के डर को दूर करने का सबसे अच्छा  तरीका है.आप पहले से ही नंगे हैं.ऐसा कोई कारण नहीं है की आप अपने दिल की ना सुने.

நான் விரைவில் இறந்துவிடுவேன் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.
இது என்னக்கு  என்  வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் எல்லாவற்றைவிட உதவியாக உள்ளது. ஒரு முறை மரணத்தைப் பற்றி நினைத்தால் முழு நம்பிக்கையும் ,எல்லா ஆணவமும் தோல்வி பயந்தால் காணாமல் போய் விடுகிறது. மேலும் உண்மையில் எது தேவையோ அது மிஞ்சுகிறது.
ஒரு நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில் வைக்கவும்.நீங்கள் முதலிலேயே நிர்வாணமாக இருக்கிறீர்கள்.உங்கள் மனது சொல்வதைக் கேட்காததற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

Steve Jobs  स्टीव जाब्स

Quote 6 :Be a yardstick of quality. Some people aren’t used to an environment where excellence is expected.”
In Hindi :गुणवत्ता  का मापदंड बनिए.कुछ लोग ऐसे वातावरण के आदि नहीं होते जहाँ उत्कृष्टता की उम्मीद की जाती है.

தரத்தின் அளவுகோலாக ஆக்கிக்கொள்ளுங்கள். எதிர் பார்க்கும் மேன்மை எங்கு நம்பிக்கை வைக்கப்படுகிறதோ ,அதற்கு சிலர் தங்களை பழக்கப் படுத்திக்கொள்ள வில்லை.

 Steve Jobs  स्टीव जाब्स

Quote 7 :A lot of companies have chosen to downsize, and maybe that was the right thing for them. We chose a different path. Our belief was that if we kept putting great products in front of customers, they would continue to open their wallets.
In Hindi :कई कम्पनियों ने छंटनी करने का फैसला किया है,शायद उनके लिए ये सही होगा.हमने अलग रास्ता चुना है.हमारा विश्वास है कि अगर हम कस्टमर के सामने अच्छे प्रोडक्ट्स रखते रहेंगे तो वो अपना पर्स खोलते रहेंगे.
அநேக  கம்பனிகள்  குறைத்துக்கொள்ள முடிவெடுத்திருக்கின்றன.ஒருவேளை அவர்களுக்கு இது சரி எனப்படலாம். நாங்கள் தனி வழியை தேர்ந்தெடுத்திருக்கிறோம். நாம் வாடிக்கையாளர்களிடம் நல்ல  பொருள்களை வைத்தால் அவர்கள் அவர்கள் தங்கள்  பணப்பையை  திறந்துகொண்டே இருப்பார்கள்.

Steve Jobs  स्टीव जाब्स

Quote 8 : To turn really interesting ideas and fledgling technologies into a company that can continue to innovate for years, it requires a lot of disciplines.”
In Hindi :दिलचस्प विचारों और नयी प्रौद्योगिकी को कम्पनी में परिवर्तित करना जो सालों तक नयी खोज करती रहे , ये सब करने के लिए बहुत अनुशाशन की आवश्यकता होती है.
ஆண்டு தோறும் புதிய ஆராய்ச்சி செய்கின்ற புதிய உண்மையான ஆர்வமும் தொழில் நுட்ப மும் மேற்கொண்டு கம்பனியில்  மாற்றம் செய்யவும்.இவைகளைச் செய்ய அதிக பட்ச   ஒழுக்கம்  தேவைப்படுகிறது.

      Steve Jobs  स्टीव जाब्स

Quote 9: You can’t just ask customers what they want and then try to give that to them. By the time you get it built, they’ll want something new.”
In Hindi : आप कस्टमर से यह नहीं पूछ सकते कि वो क्या चाहते हैं और फिर उन्हें वो बना के दें.आप जब तक उसे बनायेंगे तब तक वो कुछ नया चाहने लगेंगे.
நீங்கள் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் என்ன விரும்புகிறார்கள்  என்பதை கேட்க முடியாது.நீங்கள் அவர்கள் விரும்புவதை செய்வதற்குள் அவர்கள் சில புதியவற்றை விரும்ப ஆரம்பித்துவிடுவர்.

Steve Jobs  स्टीव जाब्स

Quote 10: …because Death is very likely the single best invention of Life.
In Hindi: …क्योंकि शायद मौत ही इस जिंदगी का सबसे बड़ा आविष्कार है.

ஏனென்றால்  மரணம் தான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட பெரிய கண்டுபிடிப்பு.

Steve Jobs  स्टीव जाब्स/ஸ்டீவ் ஜாப்ஸ்.


AchhiKhabar.Com :(reference