திங்கள், ஆகஸ்ட் 19, 2013

மரிக்கும் மனிதத் திமிர். -2

மரிக்கும் மனிதத் திமிர்.


மனிதன் என்றுமே  மற்றவர்கள் முன் தன்னை கெட்டவனாக அறிமுகப்படுத்த விரும்ப மாட்டான்.
அவன் செயலில் மற்றவர்களுக்கு நன்மை இருப்பதானால் 
மார் தட்டிக் கொள்வான்.நான் செய்த செயல் நன் மை அளிக்கிறது என்று.

ஆனால்  ,ஒரு ஆட்சியாளன் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்படுகின்றன.
அவன் தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கமுடியாது.
அந்தக்காலத்து மன்னர்கள் அந்தப்புரத்தில் ஆசைநாயகிகள் கூட்டமே இருந்தது என்றெல்லாம் படிக்கிறோம். அதை விமர்சனம் செய்யக் கூட பயந்த ராஜ விசுவாசம் மக்களிடம் இருந்தது.
மக்களுடைய நம்பிக்கை பெற்ற மன்னனுக்காக ,தன்  நாட்டிற்காக உயிர் விட தயாராக இருந்தனர்.
அதே சமயம் கொடுங்கோல் மன்னன் நிம்மதியாக ஆட்சி செய்ய முடியாமல் இருந்தான்.

கரிகாலன் கட்டிவைத்த கல்லணையை இன்றும் புகழ்கிறோம்.மன்னர்கள் கட்டிய ஆலயங்கள்,குளங்கள்,நட்ட மரங்கள் என்று பெருமையாகக் கூறுகிறோம்.
அவ்வாறு அவர்களில் சிலர் செய்த  அநியாயங்களை பழித்துப் பேசுகிறோம்.

இன்று மக்களாட்சி நடைபெறுகிறது.இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் 
தனிப்பட்ட  வாழ்க்கை,பொதுவாழ்க்கை அனைத்தும் கவனிக்கப்படுகிறது.
அவர்கள் செய்த குற்றங்களிலிருந்து தப்ப தங்கள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தலாம்.
ஆனால் ,அவர்கள் மனமே போதும்.அவர்களுக்கு ஒரு தயக்கத்தையும் 
தோல்வி பயத்தையும் ஏற்படுத்தும். இவர்கள் தேர்தலில் தோற்றால் மதிப்பு கிட்டாது.
அவர்கள் வீட்டில் துன்பகாரியங்கள் நடந்தால் செய்த பாவங்களுக்கு ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்துள்ளான் என்றே கூறுவார்;நினைப்பார்.

எத்தனை நாள் தான் மக்கள் தங்கள் தலைவர்களின் கொள்கைகள் செயல்களை கண்மூடித்தனமாக நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கை இழந்தால் படுதோல்விதான்.
தோற்ற ஒருவர் 13 ஆண்டுகள் காத்திருந்து,வந்தவர் சரியில்லாததால் மீண்டும் தோல்வி.
தோற்றவர் மீண்டும் வெற்றி. காரணம் இருவருக்கு சரியான தலைவர்கள் நிலையாக இவர்களை எதிர்க்கவில்லை.
வைகோ அவர்களும் சரி,விஜயகாந்தும் சரி,காங்கிரஸ் காரர்களும் சரி,
ராமதாஸ் அவர்களும் சரி,இரு கம்யூனிஸ்ட்களும் சரி 
இவர்களை இகழ்வதும் பிறகு கூட்டணிவைப்பதும் சரியாகச் செய்கின்றனர்.

கூட்டணி என்பது எதிரிகளின் பலத்தைக் குறைத்து அவர்களை அடையாளம் இல்லாமல் ஆக்குவது.

அதை தமிழகத்தின் இரு பெரும் தூண்களும் சரியாகச் செய்கின்றன.
உறுதியில்லா மற்ற தலைவர்களை விட உறுதியுள்ள தலைவர்களாக நம்முன் இருப்பது 
திரு. மு.கருணாநிதியவர்களும் ,திரு ஜெயலலிதா அவர்களும் தான்.
ஆகையால் தமிழகம் இருவரையும் மாறி -மாறி அமரவைக்கும்.
மற்ற தலைவர்களும் மாறி-மாறி இருவரையும் தூற்றியும் போற்றியும் தங்களுக்கான பாதுகாப்பைப் பெற வேண்டியதுதான்.

ம்பாவம் மத்திய தரமக்களும் ஏழைகளும்.
குண்டும் குழியுமான சாலைகள்,குடிநீர் வசதியற்ற பகுதிகள் அப்படியே பழகிவிட்டனர்.

வாழ்க ஜனநாயகம்!வாழ்க தலைவர்கள்! 
போயஸ்கார்டன்,கோபாலபுரம் ,பெசன்ட் நகர்,ஆளுநர் மாளிகை முன் உள்ள சாலைகள் போல் இல்லை என்றாலும் சுமாரான சாலைகளை மடிப்பாக்க பிரம்மசக்தி ஆலாயம்,சதாசிவநகர் ,குபேர்நகர்  வாசிகள் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அந்த பிரம்மாவின் சக்தி தான் ஒரு எழுச்சியைத் தரவேண்டும்.

கருத்துகள் இல்லை: