வியாழன், அக்டோபர் 06, 2022

நானே வருவேன்

 சே.அனந்தகிருஷ்ணன்.

கதை --நானே வருவேன்.

------------+++++----+-+++++++++

 கந்தனின் தந்தை நாத்தீகர். ஆனால் நந்தனோ  தெய்வபக்தன்.

 குழந்தையாக பிறந்ததே உள்ளூர் காளியம்மன் கோவிலில். தெய்வீக நாட்டம். அம்மனே அவனுள் குடியமர்ந்ததாக நினைப்பு.  பலருக்கு அவன் தன்னை அறியாமலேயே அருள்வாக்கு சொல்லி பரவசப் படுத்துவான்.

அடிக்கடி அம்மன் கனவில் வந்து செல்வாள். சில சமயம் அவ்வூரில் நடக்கப் போகும் நல்லது கெட்டது எல்லாம் இவனுக்குத் தெரியவரும்.

இவனும் கிராமமக்களுக்கு தெரிவிப்பார். சிலர் நம்புவர். சிலர் நடந்த பிறகு நம்புவர்.

 ஒரு நாள் அந்த கிராமத்தில் அனைவருக்கும் ஒரு வித காய்ச்சல்.  அனைவருமே வைத்தியரிடமும் டாக்டரிடமும் சிகிச்சைங்குச் சென்றனர்.

சிலர் மரணமடைந்தனர்.

 

 நந்தன் ஆலயமே கதி என்று இருந்தான்.

ஆலயத்தை விட ஆஸ்பத்திரியில் தான் அனைவருக்கும் நம்பிக்கை.

 நந்தன் மனமுருகி தேவியை வேண்டினான்.

அவன் கனவில் தேவி தோன்றி சில மூலிகைகள் பெயரைச் சொல்லி சேகரித்து வை. நானே வருவேன். ஊர்மக்களிடம் சொல் என்றாள்.

  நந்தன் ஊரில் செய்தியைப் பரப்பினான்.

நம்பிக்கை உள்ளவர்கள் ஆலயத்தில் ஒன்று கூடினர்.  அப்பொழுது ஒரு அம்மா தெய்வீகக் கலையுடன் வந்தாள். அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். 

 அந்த அம்மாள் நந்தனிடம் நானே வருவேன் என்றேன். வந்து விட்டேன்.என்று ஆலயத்திற்குள் சென்றாள். நந்தன் சேகரித்து வைத்த மூலிகைகளை அரைத்து அனைவருக்கும் கொடுத்தாள். அனைவரும் நலம் அடைந்து அந்த அம்மனை வழிபட்டனர்.

 அந்த ஆலயம் "தானே வரும் அம்மன் ஆலயம்*என்று புகழ்பெற்று  பெரிய ஆலயமாக மாறியது.

 அக்கம் பக்கத்தில் உள்ள அனைவரும் சொல்லி பிரபலம் அடைந்த ஆலயமானது. சில வெளிநாட்டினரும் வந்து வழிபடும் ஸ்தலமானதுதானே வரும் அம்மன் ஆலயம்.





 

கருத்துகள் இல்லை: