செவ்வாய், செப்டம்பர் 03, 2013

அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு இந்த நிலை.?

இந்துக்கள்  ஒற்றுமை ,ஒரே குரல்  என்றெல்லாம் முயற்சி எடுக்கும் இந்தக் காலத்தில்  ஸ்ரீ கணேஷ் உற்சவத்தில்  ஒற்றுமை இன்மை ,பதற்றம் காணப்படுவதாக செய்திகள் வெளியாவது வேதனையாக உள்ளது.

எல்லா இந்துக்களுக்கும் விநாயகர் முழுமுதற் கடவுள். எந்த ஒரு தேவதை பூஜைக்கும் பிள்ளையார் பூஜை தான் ஆரம்பம்.பிள்ளையார் சுழி என்பது போடாமல் எந்த ஒரு விஷேசத்திற்கும் பொருள் வாங்கும் பட்டியல் தயாரிப்பது இல்லை.

ஒரு சிறு மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபாட்டு செய்துதான் ஹோமம் ,திருமணம் போன்றவை நடத்தப்படும்.


இப்பொழுது  விநாயகர் சதுர்த்தி விழாவில்  முழுமுதற்கடவுள்  விநாயகர் 

சிலை பிரதிர்ஷ்டையில் இந்துக்களிடம் ஒற்றுமைக்குப் பதிலாக பதற்றம் காணப்படுகிறது என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

ஹிந்து முன்னணி,விஷ்வ ஹிந்து பரிஷத்,ஹனுமான் சேனா,ஹிந்து மக்கள் கட்சி மற்றும் பல ஹிந்து அமைப்புகள் பொள்ளாச்சி நகரில் மட்டும் ௬௪௦ சிலைகள் .ஒரே பதற்றம் .

தெய்வ வழிபாடு என்பது மன சாந்திக்கும் .மக்களின் ஒற்றுமைக்கும் ,நல்லிணக்கத்திற்கும் .

அந்த வழிபாடு, ஒரு அமைதியற்ற பீதியையும் ,பதற்றத்தையும் உருவாக்குமானால்   மிகவும் சிந்திக்கவேண்டிய கவலைப்பட வேண்டிய நிலை.

சிந்தியுங்கள்  இந்து சகோதரர்களே!
பொருள் விரயம்.கால விரயம்.
பதற்றமான சூழல்.காவல்துறையினர் மற்ற குற்றங்களைத்தடுக்கவோ,ஆய்வு செய்யவோ முடியாத நிலை.

அழகு  சிலைகள் அவமானப்படுத்தி எரியும் காட்சி.

ஒவ்வொரு சிலை இருக்கும் தெருவிலும்  ஒரு பயமான பாதுகாப்பு.

எப்பொழுது என்ன நடக்குமோ என்ற அச்சம்.


இந்த கோடிக்கணக்கான பணம் பாழடைந்த பழம் ஆலயங்களை புனருந்தாரணம் செய்யவோ.மற்ற பயனுள்ள பணிகளுக்கோ பயன்படுத்தலாம்.

ஞானபூர்வமாக சிந்திக்கவும்.

ஓம் கணேசாய நமஹ;
 விநாயகா!வினைகளைத் தீர்ப்பவனே!

மக்கள் உன் அழகு உருவங்களை அலட்சியமாக எரிந்து  நீ சின்னா பின்னமாக கடல் அலைகளால் கால்,கை ,முண்டமாக அவமானப்படுவது எந்த வேதங்களில் உள்ளது?ஏன் உனக்கு
 இந்த நிலை.?

கருத்துகள் இல்லை: