கண்ணதாசன் பார்வையில் இன்றைய அரசியல்..?
'கறுப்புப் பணம்’ படத்தில் கண்ணதாசன் எழுதினார்...
கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி!
கைதட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி!
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவனடி!
தேர்தல் வெற்றி-தோல்வி
'கறுப்புப் பணம்’ படத்தில் கண்ணதாசன் எழுதினார்...
கையிலே பணமிருந்தால்
கழுதைகூட அரசனடி!
கைதட்ட ஆளிருந்தால்
காக்கைகூட அழகனடி!
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவனடி!
தேர்தல் வெற்றி-தோல்வி
அரசர்கள் காலத்தில் போரிட்டனர்.
பல்லாயிரம் வீரர்கள் மடிந்து
பலரை அனாதைகள் ஆக்கி ,
விதவைகள் ஆக்கி ,
அரண்மனையில் அந்தப்புரத்தில்
ஆனந்தமாக வாழ்ந்து ,
அரசனை இறைவனின் பிரதி நிதி
அவர்கள் ஆண்டவனின் மறுபிறவி
என்றே புகழ்ந்து
கல்வி என்பதை அனைவருக்கும் வழங்காமல்
ஆண்ட காலங்கள் .
மக்களை மடையர் களாக்கி,
புலவர்களை வஞ்சப்புகழ்ச்சி அணியில் பாட வைத்து,
பொற்காசு அளித்து
படித்தோரை வறுமையில் வாழ வைத்த காலம் .
அதன் பயனாய் வந்த முகலாயர்காலம்.
ஆங்கிலேயர் காலம்.
யார் வந்தாலும் அவர்கள் மொழி கற்று
ராவ் பஹாதூர்,சர்,பட்டம் பெற்று
வாழ்ந்ததோர் கூட்டம்.
அதன் பயன் அவர்களை விரட்டினாலும்
அவர்கள் மொழியின்றி வாழ முடியா பாரதம்.
அந்த ஆங்கில ஆட்சியில்
ஏற்பட்ட பெரும் நன்மை
தேச ஒற்றுமை.
தலித்துகள் ,தாழ்த்தப்பட்டோர்
கல்வி பயில ஓர் வாய்ப்பு.
சீர் திருத்தவாதிகள்
விதவைகள் மறுமணம்,
ஹரிஜன முன்னேற்றம்
அனைவருக்கும் சமவாய்ப்பு.
பெண்கள் முன்னேற்றம் .
ஆனால்
விடுதலைக்குப் பிறகு
தியாகிகள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கவில்லை
.
ஆட்சியில் அமர்ந்தவர்கள்
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்திற்கும்
பெரும்பாலான கிராம மக்கள்
கிராமங்களிலேயே வசிப்பதற்கும்
முக்கியத்துவம் அளிக்கவில்லை.
வெளிநாட்டினரோடு கலப்பு காதல் மணம் .
அலெக்ஸாண்டர் காலத்தே தொடங்கினாலும்,
வெளிநாட்டு முதலீடு ,தொழில்வளம் என்று
நாட்டுத் தொழில்களை
அழித்து நகரமயமாக்கி
பெட்டிகள் பெற்று கோடிகள் சேர்த்து,
வெளிநட்டு வங்கிகளிலும் ,வீடுகளிலும்
பதுக்கிவைக்கும் அரசியல்வாதிகள்.
அவர்களை அண்டிப் பிழைக்கும் அதிகாரிகள்.
நேர்மை அதிகாரிகள் நடவடிக்கை
எடுத்தாலோ மாறுதல்.
இன்றைய பாரத ஜனநாயகம்
ஜனநாயகம் என்ற பெயரால்
ஒரு சர்வாதிகாரம்.
ஆளும் கட்சியினர்
தவறைக்கேட்டால் வழக்கு .
விமர்சித்தால் வழக்கு.
மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை
ஆளும் கட்சிக்கு ஆசை காட்டி
இழுக்கும் இழிவு வழக்கு.
ஊழலுக்கு கை கொடுக்கும் கைகள்.
நீதி கேட்டால் வாழ முடியா நிலை.
மக்கள் பயந்து பயந்து வாழும் நிலை.
லஞ்சம் ஊழலுக்கென்றே சில துறைகள்.
இப்பொழுது கல்வி அனைவருக்கும் என்றாலும்
தனியாருக்கு மறைமுக ஆதரவு;
அதற்கு அரசியல்வாதிகள் துவங்கும் கல்வி நிலையங்கள்.
தாய் மொழி வழிக் கல்விகூடங்களில்
இன்று ஆங்கில வழி வகுப்புகள்.
தாய் மொழி வழியில்
படிப்போருக்கு தாழ்வு மனப்பான்மை.
அந்த வகுப்புகளை ஏளனமாக ,
முட்டாள் மடையர்களாக பார்க்கும் சமுதாயம்.
இனி ஒரு வழியும் இல்லை
தாய் மொழி படிப்போருக்கு.
வேலையில்லை;சோறில்லை;
தேர்தல் நேரத்தில் மட்டும்
தமிழுக்கு உயிர் கொடுப்போம்.
தமிழ் என் தாய்.
தமிழ் என் காதலி.
எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று
ஆட்சிக்கட்டில் அமர்ந்தோர் ஆட்சியில்
எங்கே தமிழ் என்றும் தேடும் நிலை.
அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி,
அது ஊழலுக்கும்,
பரிந்துரைக்கும் ,
கைஊட்டுக்கும்
ஏற்படுத்தும் தனிவழி.
வாழ்க தேர்தல்!வாழ்க ஜனநாயகம்!
வாழ்க தமிழ்;
வளர்க ஆங்கிலம்.
காந்தி கணக்குபோல்,
இனி தமிழ் வழக்கு ஆகும்.