பாரத நாடு ,பழம் பெரும் நாடு;
இன்னினைவகற்றாதீர் --என்றார்
மஹா கவி பாரதி.
விடுதலைக்கு முன்பே முழக்க மிட்ட பாரதி
ஆடுவோமே பள்ளுபாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே என்றான்.
அவரின் தேசீய ஒருமைப்பாடு பாடல்
வெள்ளிப்பனி மலை மீது உலாவுவோம்,
தேசீய நதி இணைப்புச் செய்தி தருகின்றது.
ஆனால் இன்று காவிரி நதியின் நீருக்காக
பெரும் போராட்டம்.
தேசீய நதி நீர் திட்டம் வலியுறுத்தும் போராட்டம் இல்லை.
முதலில் ஊழலற்ற தேசீயக் கட்சிகள் இல்லை.
காங்கிரெஸ் ,பாரதீய ஜனதா இரண்டுமே ஆட்சி பீடத்தில்
இருந்தாலும் இரண்டுமே களங்கமற்ற கட்சி அல்ல.
ஒவ்வொரு மாநிலக்கட்சியும்
மம்தா வானாலும் ,மாயாவானாலும் ,ஜெயா வானாலும்
ஊழலற்றவர்கள் என்று பாராட்டுப் பெறவில்லை.
ஊழல் என்பது அரசியல் வாதிகள் ஊழல் என்றால் கோடிக்கணக்கில்
என்றால் தான் ஊழல். இலக்ஷக் கணக்கு என்பது ஊழலளல்ல என்று
ஒரு மத்திய அமைச்சர் விளக்கயுள்ளார்.
அரசியல் வாதிகளின் நிலா ஆக்கிரமிப்புகள்,
மலை மடுவான உண்மைக் கதைகள்
கற்பனைக்கதைகளாக மாறிவருகின்றன.
நாட்டின் முன்னேற்றம் என்பதில் இந்த
சுயநலம் ,தேர்தல் ஓட்டுப்போட பணம் வாங்கும் வாக்காளர்கள்,
கோடிக்கணக்கில் தேர்தலில் வெற்றிபெற சிலவு செய்யும்
அரசியல் வாதிகள்,
கல்வி வாணிகம் ,
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பொறியியல் கல்லூரி ,
மருத்துவக் கல்லூரி என்ற நிலைமாறி
மழலை பள்ளிமுதல் பெருமுதலீட்டளர்களுக்கே
என்ற நிலை மாற்றும் அரசின் ஆங்கில மோகக் கல்வி .
பெட்டிக்கடை கூடாது என்பதுபோல் சிறு பள்ளிக்கூடங்கள் கூடாது
என ஏழை ,நடுத்தர மக்கள் கல்வி நிறுவனங்கள்
நடத்தக் கூடாது என்று திட்டமிடும் அரசாங்கம்.
கல்வி அதிகாரிகள்.
பொதுமக்கள் விரும்பி ஏற்கும் பள்ளிகளை மூட உத்தரவு.
எத்தனையோ அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு
அடிப்படைவசதி இல்லை.
மக்களுக்கு கல்விபயில சுதந்திரம் வேண்டும்.
அதை பொருளாதரத்திற்கு முக்கியத்துவம் அளித்து
இடவசதி இல்லை என்று பலர் வயிற்றில் அடிப்பதில்
சற்று பொறுமை வேண்டும்.
மாணவர்கள் வரவில்லை என்றால் பள்ளி மூடப்படும்.
எத்தனை நகராட்சி,மாநகராட்சி பள்ளிகள் தானாகவே மூடப்பட்டுள்ளன.
தனியார் பள்ளிகளும் தரமில்லை என்றால்
அதுவாகவே மூடப்படும்.
இதை நினைவில் கொண்டு மூடப்படும் பள்ளிகளில்
மாணவர்கள் எண்ணிக்கை இருந்தால்
மூடக்கூடாது.
சிறு பள்ளிகளும் நடுத்தரவருவாய்
உள்ள ஏழை,எளிய மக்களுக்குத் தேவை.
பெட்டிக்கடைகள் கூடாது என்று சொல்ல முடியாது.
அவ்வாறே பலனளிக்கும் சிறு பள்ளிகள் இருக்கவேண்டும்.
அரசாங்கத்திற்கு தனியார் பள்ளிகளால்
கோடிக்கணக்கில் பணம் மிச்சம்.
இப்பள்ளிகள் டாஸ்மார்க் மதுக்கடைகள் போல்
சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்க வில்லை.
ஆழ்ந்து சிந்தித்தால் இப்பள்ளிகளின் தியாகமான ஆசிரியர்கள்,
நிர்வாகிகளின் உண்மைத் தொண்டு புரியம்.
அரசே!ஏழை எளிய நடுத்தர மக்களை வாழ வைக்கும்
பள்ளிகளை மூடவேண்டாம்.
பெற்றோர்கள் பொறுப்பில் கல்வி இருக்கட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக