ஞாயிறு, ஜூன் 09, 2013



மனிதனின் ஆற்றல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகளிடையே 

விருப்பங்கள்,வெறுப்புகள்,எண்ணங்கள்,அறிவாற்றல்,

வேறு படுகின்றன.

உணவு விஷயத்திலும் அப்படியே.

ஒரு குழந்தைக்கு தோசை என்றால் ஒருகுழந்தைக்கு ஆடை.

ஆடை விஷயத்திலும் அப்படியே.

வாகனம் ,திரைப்பட நாயகன் ,நாயகி,விளையாட்டு வீரர்கள் 

என அனைத்திலுமே கருத்து வேறுபாடுகள்.

இதற்கும் மேலே சுயநல எண்ணங்கள்.

போட்டி பொறாமைகள்..

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்.

இதானால் அண்ணன் தம்பிகளிடையே பெரும் விரிசல்.

இருபது முப்பது வருடங்களுக்கு முன் மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் 

ஒருவர் வருமானம் அதிகமாக இருக்கும்.

பலருக்கு வருமானமே இருக்காது.

ஒருவரின் வருமானத்தில் அனைவரும் உண்டு ,உடுத்தி 

வறுமையிலும் தியாகத்துடன் வாழ்ந்த காலம்..

பாசத்துடன் குடும்பத்தில் பெரியவர்கள் சொல்லை கண் மூடித்தனமாக 
மதித்த காலம்.
வீட்டில் உள்ள பெண்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டு 

வறுமையிலும் ,பொருளாதார ஏற்றத்  தாழ்விலும் 

ஒற்றுமையாக இருந்தகாலம்.

ஆனால் இன்று தனிக் குடித்தனங்கள்,

தனி வாழ்க்கை,
முதியோர் இல்லங்கள்,

இருப்பினும் 
தம்பதியர்களிடம் பிணக்கு.
தாய் தந்தையர்கள் நமக்கு எதுவும் பெரிதாக செய்யவில்லை 
என்ற குற்றச்சாட்டு.முயற்சி எடுக்கவில்லை .
வீடில்லை வாசலில்லை  ,
என்னை சரியாக படிக்கவைக்கவில்லை ,
சொத்து இல்லை .
கல்லூரிக்கு செல்லும்போது கைச் செலவிற்கு பணம் தரவில்லை.
அம்மாவிற்கு அது செய்யவில்லை.
எங்கும் அழைத்துச் செல்லவில்லை.
இதை எல்லாம் ஒய்வு பெற்ற முதியவர்கள் 
சந்திக்கும் போது பேசிக் கொள்ளும் விஷயங்கள்.

இதில் அதிகம் வருத்தம் தரும் விஷயம்,

தனிக்குடித்தனம் செல்லும் தம்பதிகளும்

நிம்மதியாக இல்லை என்பதுதான்.




கருத்துகள் இல்லை: