ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒன்றே வழி;பெண்ணினம் காக்க





விவேகானந்தர்  ஞானக்  குழந்தை,
அவர் இளைஞர்களுக்கு அறிவுரை அளித்தார்.

பாரதியார் பாப்பாவிற்கு.

ஆனால் அரசின் வாரிசுகளுக்கு ;
ஆணவம் பிடித்தோருக்கு 
அதர்ம  வெறி பிடித்தொருக்கு,
அதிரடி தண்டனை,
உடனடி  தண்டனை தேவை.

பெண்களைபோற்றும்  நாட்டில் ,
பெண்ணடிமை தான் என்றுமே;


ராவணன் சீதையை சிறை வைத்தான்;

அனைத்தும் தெரிந்த ராமன் 

அவளை கானகம்  அனுப்பினான்.

தேவேந்திரன்  செய்த தவறு,
அகலியை   கல்லானாள் .

துகில் உரித்தான் துச்சாதனன்;

அறம்  தக்க தருணத்திற்காக 

அமைதி காத்தது;

அப்பரம்பரை  இன்றும் 
தருணிகளை தரக்குறைவாக பார்க்கிறது.



அமைதி காக்க  இது என்ன வேடிக்கையா?
சல்லிக்கட்டா?  சர்க்கசா?
ராமன் உத்தமபுருஷன்.
சீதையை  கானகம் அனுப்பி 
பெண்ணினத்திற்கு ஒரு தரக்குறைவை 
ஏற்படுத்தினான்.


அன்று கண்ணன் உடனடி காயடித்திருந்தால்,
பெண்ணினம் உயர்ந்திருக்கும்.
தர்மன் பணயப் பொருளாக்கியது.

அதர்மம் போகப் பொருளாக்கு கிறது.
அதிகார வர்க்கம் துணைபோகிறது.
பெண்கள்  ஆடை அரைகுறை;
புத்தி பேதலிக்கும் இளைஞர்கள்.
இதில் தவறு யாரது;
பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி;

வீடு திறந்துள்ளது என்றால் கொள்ளையர் 
புகுவது குற்றம் என்றால்,
ஆடை குறைந்த பெண்களைக் கெடுப்பது 
குற்றமில்லையா?
மனிதன்!புலன் அடக்கம் தேவை?
நாயா?நடுத்தெருவில்......ச்சே!
நாயைவிட கேவலம்;
மிருக ஜன்மம் நான் என்றான் வாலி;
அடுத்தவன் மனைவியை  தனதாக்கி;
அவன் குரங்கினம்;
மனிதனை மனிதனாக்குவதே,
மனதை அடக்குவதும்,காமத்தை அடக்குவதுமே.


புரட்சி எண்ணங்கள் தேவை;புதிய பார்வை தேவை;
புரட்டு எண்ணங்களும் ஊழலும் குறைய,
புவியினில் ஒரு பிரளயம் தேவை,.

உடனடி தண்டனை கடும் தண்டனை 
ஒன்றே  வழி;பெண்ணினம் காக்க.

கருத்துகள் இல்லை: