பொங்கல் பண்டிகை போகி அன்று ,
டயர் ரப்பர் கொளுத்தும் பழக்கம்,
எப்படி வந்ததோ தெரியவில்லை.
ஒரு பெரியார் பத்தாது ,
மூடப்பழக்கம் போக்கி ,
பகுத்தறிவு வளர்க்க;
பொங்கல் தமிழரின் ,பழம் விழா,
டயர் இல்லா காலம் அது.
காற்று மாசுபடுவதால்,
பலருக்கு காற்று ஒவ்வாமை.
மாசுக் காற்று கரியுடன் கலந்து.
யோசித்து உண்மை நிலை புரிந்து,
எரிப்பதை போக மும்பை அன்று விட்டுவிட
கடும் முயற்சி எடுத்தாலும்,
இன்று காலை ஜன்னல் திறக்க முடியவில்லை.
பெருங்குடி,இந்திராநகர் மெட்ரோ ரயில் நிலையம் சென்றேன்.
வெற்றிலை ,பாக்கு எச்சில் காவிநிறம்
இதற்கு அரசு என்ன செய்யும் ,
காவல் துறை என்ன செய்யும்.
பொதுமக்கள் உணரும் காலம்
என்றுவரும்.
இதைவிட பூனா ,மும்பை ,அதிகம்.
மக்களாக திருந்தாவிட்டால்,
மாசு குறையாது.
சுத்தம் சுகம் தர,
தனி பிரசார தன்னார்வர்கள் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக