வையக அமைதிக்கு, சனாதன தர்மம் கூறிய கூற்று,
மெய்யாகும் காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.
அகவை கூடக் கூட ,
மெய்யாகும் காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.
அகவை கூடக் கூட ,
அறுபதுக்குப்பின் ,
அறிவுடன் வாழ்ந்தோமா?
அறிவிழந்து வாழ்ந்தோமா?
ஆஸ்தி சேர்த்தோமா?
அன்புச் செல்வங்களுக்கு
ஆதரவளித்து,
அறிவு புகட்டி,
அவர்கள் அகம் மகிழ வளர்த்தோமா?
ஒய்வு பெற்று ,
ஓய்வூதியம் பெற்றாலும்.
நன்மக்கள் பெற்று
செல்வச் செழிப்புடன்
வாழ்ந்தாலும் .
எதோ ஒரு மனக்குறை மனதில்
எதோ ஒரு ஓரத்தில்
தோன்றுகிறது.
காரணம் அறிவியல் வளர்ச்சியா?
இளம் தலைமுறையின் ,
அறிவுமுதிர்ச்சியா?
கணினி இல்லா
காலத்தில் வளர்ந்து,
இன்று கணினி மூலம்,
பெறு ம் அறிவு,தொடர்பு,
அவ்வையின்
கற்றது கைமண் அளவு,
கல்லாதது உலக அளவு
என்ற மொழி காலத்தால் அழியாதது.
மடிகணினி தட்டினால்,
அறிவில் நாம் எவ்வளவு
ஞான சூனியமாக வாழ்ந்தோம்
என்ற ஞானம் பெற்றேன்.
நமது குழந்தைகள்.
தங்கள் சட்டைப்பையில் ,
அகிலத்தை அடக்கி வைத்துள்ளனர்.
கைபேசியில்.
வணிகத்தொடர்பு
அரை நொடியில்,
வேலைவாய்ப்பு நேர்காணல்,
விண்ணப்பம் அனுப்புதல்,
தங்கள் பள்ளி நண்பர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
பல காத தூரம்,
சீனாவில் இருந்தாலும்.
சிங்கப்பூரில் இருந்தாலும்,
ரஷ்யாவில் இருந்தாலும்.
அமெரிக்காவில்
இருந்தாலும்,
இந்தியாவின் ஒரு
குக்கிராமத்தில்
இருந்தாலும்
முகம் பார்த்துப் பேசும்
உன்னத வளர்ச்சி.
நாம் வாழ்ந்த பழைய காலம்,
ஒரு குறுகிய வட்டம்.
எத்தனை எத்தனை குறுகிய
எண்ணங்கள்.
மதங்களின் பெயரால்,
ஜாதியின் பெயரால்.
இன்று பரந்த உலகம் காணும் போது ,
வையகம் வாழ்க.
வையகம் ஒரு குடும்பம்.
மனித இனம் ஒன்று
சூரியன் ஒன்று.
சந்திரன் ஒன்று.
வையக அமைதிக்கு,
சனாதன தர்மம் கூறிய
கூற்று,
மெய்யாகும்
காலம் வரும்.
ஓம் சாந்தி.ஓம் சாந்தி.ஓம் சாந்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக