வெள்ளி, அக்டோபர் 19, 2012

உண்மையெது பொய்யது ஒன்னும் புரியலே, நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.

உண்மையெது பொய்யது  ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.


இளைஞர்  சமுதாயமே!

உண்மை எது?பொய்  எது?
இயற்கையின் சக்தியே!
முன்னேறின் நாட்டின் 
தொத்து  நோய் ஊழல்.
இதிலிருந்து  நாட்டைக் காப்பாற்று.!


மனம்  பலவற்றை  சிந்திக்கிறது.


ஆன்மீக  சிந்தனைகள் 
பற்றற்ற  வாழ்க்கை பேசி.
பகட்டாக  வாழும்  காட்சிகள்.

சனாதன தர்மத்தில் இல்லாத 
பழக்கங்கள்  ஏற்படுத்தி,
கோடிக்கணக்கான பணம் 
சமுத்திரத்தில்  கரையும் காட்சி.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரும் 
சிலஊழல் பேர்வழிகளை 
மறைக்கும்  காட்சி.

ஊழலுக்கு  உரத்த குரல் கொடுக்கும் கேஜரிவால், சிலரின் நில  ஊழல் மறைத்த செய்தி.

பதஞ்சலி சீடரின் கடவுச் சீட்டு ஊழல்.
கட்கரே வின் நில ஊழல்.
அதைவெளியிட்டவர் ,
பவாரின் நிலா ஊழல் மறைத்த செய்தி,
அரசியல் என்பது சாக்கடை.
அதை தூர்வாரினாலும் 
நாற்றம் தான் மிஞ்சும்.
 ஆகையால் தான் நல்லவர்கள்,
ஓட்டுப்போடுவதில்லை.
எழுபத்தைந்து சரசரியாரியாக 
அறுபது விழுக்காடு ஓட்டில் 
நாடுஊழல் மயம்.
 உண்மையெது பொய்யது 
ஒன்னும் புரியலே,
நம்ம கண்ணை நம்மால நம்ப முடியலே.
இந்திய காங்ரசும்  ஊழல்,
பாரதீய ஜனதாவும்  ஊழல்.
இரண்டும்புலி என்றால்,
இரண்டுடனும் மாறி மாறி 
கூட்டணி   வைக்கும் 
மாநிலகட்சிகள்  நரிகள்.

புலி அடித்துப்போடும் 
இரைக்காக பின் செல்லும்
 கூட்டங்கள்.
ஆகையால் தான் நாட்டின் நலத்தைவிட அதிகம் 
கட்சிகளும்,
தலைவர்களும் 
தொண்டர்களும் 
பிரிந்து  நாட்டின் ஊழலில் 
பங்கு போடுகிறார்கள்.
எதிர்கால  இளைஞர்களே!
எங்கள் அகவை கூடிவிட்டது.
கூட்டுவைக்கும்  மந்தணம்   அறிய.
நீங்கள் சிந்தித்து செயல் படுங்கள்.
நாட்டின் உயர்வு உங்கள் கையில்.





கருத்துகள் இல்லை: