ஞாயிறு, அக்டோபர் 21, 2012

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம், நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.

திருமணம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

அல்லது

பெற்றோர்களின் அவசரமா?

அல்லது  இயற்கையின்  உந்துதலா?

பெற்றோர்கள் தங்கள் கடமை முடிக்கவேண்டும்  என்ற கடமை உணர்வா?

காதலிப்பதாலா?

 அனைத்து  திருமணங்கள்  ஆனந்தத்தில் முடிகிறதா?

மண  முறிவு பெறப்படுவது   ஏன் ?

குழந்தைகள் பிறப்பு ,வளர்ப்பில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள்?
படித்த  மேதைக்கு  அறிவில்லா  குழந்தை.
படிக்காத  அறிவிலிக்கு  குழந்த அதி மேதாவி.

ஏழையின்  குழந்தை பணக்காரனாகிறான்.

பணக்காரனின் குழந்தை ஏழை ஆகிறான்.

மருத்துவரின்குழந்தைநோயாளி ஆகிறான்.
பணம் படைத்தோரும்  மன வேதனையில் உள்ளனர்.

இதனால் தான் ஜோதிடக்கலை வளர்கிறது.
சாமியார்கள் வளர்கிறார்கள்.
இதில்  உண்மையானவர்கள்  மரத்தடியிலேயே வாழ்கின்றனர்.

போலிகள்  கோடீஸ்வரனாகின்றனர்.

மக்களிடம்  இறைவன் மேல் உண்மையான  பக்தி,நேர்மை ,சத்தியம்
இருந்தால் தனக்கு  வரும்  சோதனைகளில் நிம்மதி அடையலாம்.

கலி யுகத்தில்   நாம ஜெபமே போதும்.
அங்கிங்கெனாதபடி  எங்கெங்கும்  ஆனந்த பூர்த்தியாய்  இருக்கும்
ஆண்டவனை  ,சத்குருவை  வீட்டில்வழிபட்டால்  போதும்.

கடன்வாங்கி,தானம் வாங்கி ஹோமங்கள் ,யாகங்கள் செய்ய முடியாது.
பணமுள்ளவர்களுக்கே  பாப விமோசனம்  என்பது தான் மூடநம்பிக்கை.

சற்றே மனதில் சிந்தியுங்கள்.நம்மிடம்   உண்மை,நேர்மை,சத்தியமிருக்கிறதா?
என்று. உலக  வாழ்க்கையில்  இது  சாத்தியமா? என்று வினவினால்  துன்பமே.

தூயமனத்தில் இறைவன் மட்டுமே இருப்பான். செய்த  பாபங்களை விட்டுவிடுங்கள்.

நீங்கள் எந்த மதத்தில்  தோன்றிநீர்களோ,
உங்கள்  பெற்றோர் எந்த இறைவனை 
வழி பட்டனரோ,
அந்த இறைவன்பெயரை  மட்டும் சொல்லுங்கள்.
கடமையாற்றுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் 
"நாம ஜபம்" செய்யுங்கள்.
குறுக்குவழியில்
 முன்னேறுபவர்களை ப் 
பார்க்காதீர்கள்.
உலகில் யாருமே மன நிறைவுடன் இல்லை.

இறைவன் பெயரை முடிந்த அளவுக்கு 
சொல்லுங்கள்.
மன நிம்மதி ,பொருளாதார முன்னேற்றம்,,நீங்கள் விரும்பும் சுகம்கிடைக்கும்.
கலியுகம்=சுய சிந்தனை 
உள்ளவர்களுக்கு.
நேர்மையாளர்களுக்கு.
தன்  இல்லத்திலேயே 
நாம ஜபம் செய்வோர்களுக்கு.
வெளியில் அனைத்துமே
வணிகமே.
கபீர் தாசர் :
பூவில்  மண மிருப்பதுபோல்,
கஸ்தூரி மான் வயிற்றில் 
மணமுள்ள  கஸ்தூரி இருப்பதுபோல்,
கடவுள்  உன் மனதிற்குள் இருக்கிறார்.
உனக்குள்  இருக்கும்  இறைவனை அறியாமல்  வெளியில் தேடுகிறாய்.
இதற்குப் பொருள்  இறைவன் மனிதனுக்கு மட்டுமே சிந்திக்கும் ஆற்றல் அளித்துள்ளான்.உன் இறைவனை உனக்குள் தேடு.
வெளியில் தேடினால் பொருளாதாரக் கேடு.
அதில் தானம் ,தர்மம் செய்.










கருத்துகள் இல்லை: