திங்கள், அக்டோபர் 01, 2012

திருந்துமா மக்கள் மனம்.?


மக்களின்  சிந்தனைக்கு 

இன்று  சுதந்திரம் அடைந்து  65 ஆண்டுகளுக்குப்பின்  அன்னா ஹஜாரே 

அலறுகிறார்.இத்தனை ஆண்டுகள் அவருக்கு எவ்வித எழுச்சியும் 
வரவில்லை.காரணம்,ஊழல்  தன்  இறுதி எல்லைக்கு சென்று விட்டது.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று  பாரதியார் பாடினார்.
இன்று  எங்கும் எதிலும் ஊழலே பேச்சு என்றாகிவிட்டது.
நானும் சிந்தித்தேன்.
விளைவு?

விவசாயிகள் 80% இருக்கும்  நாட்டில் 
 விவசாயத்திற்கு முதலிடம் தர வேண்டும்.
ஆனால் 
வெளிநாட்டு  கமிசன் தலைவர்களுக்கு கிடைக்காது.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் சேராது.
நாட்டின் ராணுவத்திலிருந்து,தொலைத்தொடர்பு வரை 
பகல் கொள்ளை அடிக்கமுடியாது.
ராமாயணத்தில் மந்தரை,
மகாபாரதத்தில் சகுனி,
விடுதலை இந்தியாவில் 
உலகில் நான்காவது பணக்காரி.
கருப்புப் பண பட்டியல் வெளியிடத் தடுக்கும் 
தலையாட்டி பொம்மை,
பொம்மலாட்ட  பொம்மை 
பிரதமர்.
ஊழல் என்று போராடுவோரும்  ஊழல் 
ஊழல் ஒழிக்க என்னிடம் ஒரு மந்திரக்கோல் இல்லை 
என மௌனமாகும் பிரதமர்.
தமிழக ரஹசிய(சிதம்பரம்) அமைச்சர் நில ஊழல்.
மமாதாவும்  கருப்பு பணப்பட்டியல்  பற்றிய பேச்சு இல்லை.
விலை நிலங்கள் விற்று  தொழில் மய  மாயை .
ஏன் ?
விவசாயிகள் வறுமை.
அவர்கள் அறியாமை,
தலைவர்கள் சுயநலம்.
நாடு தொழில் துறையில் முன்னேற்றம் என 
நாட்டுத்தொழில்  ஒழிப்பு.
காரணம் 
விவசாயிகளுக்கு நன்மை செய்தால் கமிசன் கிட்டாது.
விளைநிலம்   தொழில் மயமானால் கோடிகள் 
தன்  இல்லம் சேரும்.
மாயையில் மக்கள்.
மகிழ்ச்சியில்  மந்திரிகள்.
விழித்துக் கொள்ளுமா ஜனநாயகம்?
தப்புமா விளை  நிலம்.
கோடிகள்  சேர்த்தாலும் சுடுகாடுதான் மிச்சம் என 
நினைக்கும அரசியல் தலைகள்.
கங்கையே சாக்கடை ஆக்கும் 
தொழில் மாயம் 
அதன் சாபத்தால் அழியுமோ பாரதம்.
எங்கும் ஊழல் என் பதே பேச்சு.
அது ஒழியாது  ஊழலாலே 
ஊழல் பணம் தேர்தலில்  நடமாடும் வரை.
திருந்துமா  மக்கள் மனம்.


கருத்துகள் இல்லை: