திங்கள், அக்டோபர் 01, 2012

பாரத மக்கள் மேல் கருணை காட்டு.



இன்றைய  இளம் வாக்காளர்கள் 

18 வயது பூர்த்தி ஆனவர்கள் 

பாரத நாட்டின் முன்னேற்றத்திற்கான 

பார் புகழ் பெரும் போக்கைத் 
தடுக்கும்  அரசியல் கட்சிகளை 
  ஒழிக்க புதிய சக்தி யாக 
ஒலி  -ஒளி  கொடுக்கவேண்டும்.
காங்கிரசும் ஊழல்.
கலைஞரும் ஊழல்.
அம்மாவும் ஊழல்.
பாரதிய ஜனதாவும் ஊழல்.
இவர்களுடன் கூட்டுச்
சேருவோரும்  ஊழல்.
ஊழல் வழக்கு சந்திக்காதோர் யார்?
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் 

அனைவரும் ஊழல் என்றும் 
கூறி  கூட்டணி வைக்கும் சிறு கட்சிகள்.
காமராஜரைப் புகழும் 
கக்கனைப் புகழும் 
அவர்கள் 
ஊழலில்  ஒன்றுபட்டு
 மாறி மாறி
 ஆட்சி செய்தது 
போதும்.
பூஜை ,யாகம்,ஹோமம் என்று 
அவர்கள் செய்தாலும் 
நல்லாட்சி அமைய அனைவரும் 
தினமும் பத்து நிமிடம்  
ஏன்  ஐந்து நிமிடம் 
சிந்தியுங்கள்.
அதுவே பிரார்த்தனை.
ஆண்டவா!!
ஊழல்கள் வளர்ந்தால் 
அதற்கு நீ உறுதுணையா!
உன் மேல் பக்தி வருமா?
ஊழல் ஒழிக்கும்  சக்தி கொடு.
அறிவைக் கொடு.
மக்கள் நேர்மைக்கு தலை வணங்கட்டும் .
அநியாயத்தை வேரோடு ஒழி க்கட்டும்.
ஆண்டது போதும் பணப் பேய்கள்.
பாரத மக்கள் மேல் கருணை காட்டு.




கருத்துகள் இல்லை: