செவ்வாய், டிசம்பர் 27, 2011

thiru.vi.kaa vin dhiyanam patriya karuththu

தியானம்
தியானம்  மனிதனை தெய்வமாக்குகிறது.
மனிதன் விலங்கினின்று தோன்றியவன்
.அவன் பால் விளங்கியல்புகள் மலிகின்றன.
அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும்.
இதற்கு வழி தியானம்.
 என்று திரு வி.கல்யாணசுந்தரம் வழிகாட்டுகிறார்.


தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது.
புற மனத்தை ஒடுக்கி ,   நடு மனத்தை எழுப்பி ,அடிமனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது.
தியானம் மனிதனை அமைதித் தெய்வமாக்கும்.
தியானத்திற்கு ஒரு கொழுகொம்பு தேவை.
அக்கொழு கொம்பு விலங்கியல்பைப்  பெருக்குவதே.
கருவி காரணங்களை  எரிப்பததாய் ,
மூர்க்கத்தை வளர்ப்பதே இருக்கக்கூடாது.
அக்கொழு ,மனத்தைப் பண்படுத்துவதாய்,
அன்பை விளை விப்பதாய்
அமைதியை ஊட்டுவதாய்,
இருத்தல் வேண்டும்.
அதுவே பரம்பொருள்.
வாழ்க்கை வழி.
திரு வி.கல்யாணசுந்தரனார்.



கருத்துகள் இல்லை: