செவ்வாய், டிசம்பர் 27, 2011

direct witness--neradi saatchikal

ஆண்டவன் அருள்வேண்டி
 பரமானந்தம் அடைந்து,
ஆண்டியாக ஞானம்
பெற்றோரும் உண்டு.
ஆண்டவன் இல்லை
 என்று ஆனந்தமாக
ஆட்சி செய்வோரும் உண்டு.
ஆசார அனுஷ்டானத்துடன்
ஆண்டவனைத் தொழுவோரும்,
ஆஸ்திகளுடன் ஆடம்பரமாக,
வழி  படுவோரும் உண்டு.
உண்ண உணவின்றி ,
உடுக்க உடையின்றி,
படுக்க படுக்கையின்றி,
இருக்க இல்லமின்றி,
இறைவனை வழிபடுவோரும் உண்டு.
பிரஹலாதணும்உண்டு/
ஹிரண்ய  கஷ்யபும் உண்டு.
எதற்கு இல்லை எடுத்துக்காட்டு.
நாத்திக வாதம் பேசியும்,
ஆலயங்களில்  அலைமோதும்
பக்தர்கள்,
குவியும் உண்டியல் காணிக்கை.
தங்கம்,வெள்ளி கிலோ கணக்கில்.
ஆலயத்தின் மூலம்
அர்ச்சகர்கள் குடும்பம்,
பண்டாராங்கள்,ஊழியர்கள்,
ஆலயங்கள் சுற்றி கடைகள்,
உணவகங்கள், விடுதிகள்,
மலர் வியாபாரிகள்,புத்தகக்கடைகள்,
தானம் அளிப்பவர்கள்,
பிச்சை  எடுப்பவர்கள்,
சாதுக்கள்,சந்நியாசிகள்,
மடாலயங்கள்,ஜோதிடர்கள்,
பாடகர்கள்,உபன்யாசம் செய்வோர்,
இசைகருவிக் கலைஞர்கள் ,
வேடதாரிகள்,கள்ளர்கள்,
ஜேப்படிகள்,பொட்டுவைத்து
 சம்பாதிப்பவர்கள்,
எத்தர்கள்,ஏமாற்றுபவர்கள் ,
வழிப்பரிசெய்வோர்,
காவலாளிகள்,
காவல் துறை ,
அறநிலையத்துறை ,
ஆன்மீகவாதிகள்,
சித்தர்கள்,சிந்தித்தேன்
ஆண்டவன் அனைவருக்கும் படி அளப்பார்,
என நேரடி சாட்சிகள்.









இன்னல் உற்று இறைவனைத் தொழுவோரும்,

கருத்துகள் இல்லை: