வியாழன், டிசம்பர் 22, 2011

swaamy vivekaanandarum kadavulum panappeykalum

விவேகானந்தர் ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர்.அவர் கூறுகிறார்:-

உலகத்தில் நீங்கள் கடவுளுக்கும்
பணப்பேயுக்கும்
ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது.
எல்லாவற்றையும் -உன் சொந்த விமோசனத்தையும் கூட --
உதறி எறிந்துவிட்டு   பிறருக்கு உதவி செய்
.நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது.
லட்சோப லக்ஷம் மக்களின் சாபம் நம் தலை மீது அழுத்திக்கொண்டிருக்கிறது.
அம்மக்கள் தாகத்தால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வற்றாத ஆற்று நீர் பாய்ந்து கொண்டிருப்பினும்
ஏழைகள் கழிவுநீரைக் குடிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லா வளங்களும் கண்முன் நிறைந்திருக்கும் போதும்
 நாம் அவர்களைப்பட்டினியால் சாகவிட்டோம்.
அவர்களை நாம் அத்வைதத் தத்துவத்தை சொல்லிக்கொண்டே
 நம் முழு பலத்தோடு அவர்களை வெறுத்து வந்துள்ளோம் .
இந்த களங்கத்தை துடைத்தெரியுங்கள்.
எழுமின்,விழுமின்.


விவேகானந்தரின்  இந்த கூற்றுநேரில் காண
மடிப்பாக்கம் குபேர் நகரில் மசூதி பக்கத்தெருவில் செல்லுங்கள்.
சாக்கடைஓட  குழந்தைகள் விளையாடி நோய்வாய் படுகின்றனர். நடுத்தர மக்கள்  வாழும்  சாலைகள் மோசமாக உள்ளது.குண்டும் குழியுமாக உள்ளது. மனசாட்சி  உள்ள அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை.
இறைவா! அனைத்து உலகமும் நீ உள்ளாய் என்பதை ஏற்கிறது. உன்பெயரால் ஆட்சி பீடம் ஏற்றவர்கள் மனத்தில் கருணை உண்டாக்கு. அரசு நினைத்தால் உடன் செய்யலாம். அதற்கு நீ அவர்கள் மனத்தில் மனிதாபிமானத்தை உண்டாக்கு.

நான் உன்னை  ஜெபிக்கிறேன். அல்லாவின் பேரால்,ஏசுவின் பேரால்,சிவா விஷ்ணு, முருகன் விநாயக கருணைக்காட்டி அரசு இயந்திரத்தை இயங்கும்படி செய்.

கருத்துகள் இல்லை: