வியாழன், டிசம்பர் 22, 2011

God and wealth

செல்வர்கள் ஆணவம்  கொண்டவர்கள். தங்களின் செல்வம் தங்களுக்கு அதிகாரமும் அழிவற்ற வாழ்வும்  தர முடியும் என்று நினைக்கிறார்கள்.செல்வங்களை குவிக்கும் ஆசையில் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.செல்வத்தை  எண்ணிப்பார்கின்றவர்கள் அது நிலையான பாதுகாப்பைத் தரும் என்ற தவறான கருத்து கொண்டுள்ளனர்.குர்ஆனில் இந்த தவறான எண்ணம் கொண்டவர்களை கடுமையாக எச்சரிக்கைக்கான  வசனம் அத்தியாயம் 104 இல் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேருக்கு நேர் இழித்துரைத்துக்கொண்டும் , பின்னால் நின்று   குறை கூறிக்கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.அவன் பொருளைச் சேர்க்கிறான்.மேலும் அதை எண்ணி எண்ணி வைக்கிறான்.அவன் தன்னுடைய  செல்வம் தன்னை என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று  கருதுகிறான்.அவ்வாறன கருத்துத் தவறானது.சிதைத்து சின்னா பின்னமாக்கும் அந்த இடம் எதுவென்று உமக்குத் தெரியுமா?
அது ஆண்டவனின்  நெருப்பு.
அது  உக்கிரமாக  மூட்டப்பட்டுள்ளது .இதயங்கள் வரை சென்று  பரவுகிறது. பாய்கிறது.
இது சொத்துக்குவிப்புக்கு எதிரான ஒரு வலுவான கண்டனமாகும்.

கருத்துகள் இல்லை: