வியாழன், டிசம்பர் 15, 2011

todays education .

நாட்டில்  தமிழ் நாட்டில் சமச் சீர் கல்வி என்று ஆரம்பித்து வெற்றி என்று கூறினாலும் அனைத்து மாநில தனியார் பள்ளிகள் சி.பீ.எஸ். ஈ பள்ளிகள் துவக்கவும் பெற்றோர்களும் அவ்வகையான கல்விக்கூடங்களை விரும்புவதும்
அங்கு கல்விக்கட்டணம்  பற்றி பொதுமக்கள் எதுவும் குறை கூறாமல் இருப்பதும்,மெட்ரிக் குலேசன் பள்ளிக்கட்டணம் பற்றி மட்டும் எதிர்ப்பதும்
அடிப்பதுபோல் அடிக்கிறேன் அழுவது போல் அழு என்று அரசு அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதும் மூடுவதும்
ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவதும் அரசுக்கு கல்வித்துறை சிலவுகள் குறைவதும் தமிழாசிரியர்கள் வேலைப்பளு அதிகரிப்பதும் மம்மி   டாடி கலாசாரம் வளர்வதும் உண்மை நிலை.அரசு நினைத்தாலும் பொதுமக்கள் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர்.
ஒரே குழந்தை பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் கல்வித்தரத்தையே  விரும்புவர்.அரசு கட்டணம் என்பது கட்டுபடியாகுமா/?
மனம் என்று ஒன்று இருந்து சாட்சியாக இருப்பவர்கள் கட்டண நிர்ணயம் நியாய மில்லை என்று அறிந்தவர்கள்.
ஒரு இட்லி ஒரு ரூபாயிக்கும் விற்கிறது.இருபது ரூபாயிக்கும் விற்கிறது.
காரணம் வசதிகள்.அவ்வாறு தான் பள்ளிகளும்.கட்டடம்,மைதானம்,குளிர்சாதனம்,ஆயாக்கள்,ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை  சிந்திப்பீர்.
சமச்சீர் கல்வி கொண்டுவந்தவர்கள் நடத்தும் பள்ளிகள் மத்திய அரசுப்பள்ளிகள்.கல்வி மாநில அரசு உரிமை.
மக்கள் அச்சத்தால் அமைதி காக்கின்றனர்.உண்மை நிலை உணருங்கள்.
கல்வி பெறுவது மக்களுக்கு சுதந்திரமாக இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை: