ஹிந்தி பற்றி சிந்திப்போம்.
பாரத நாட்டின் பல மொழிகளின் இலக்கியங்களின் மையக்கருத்து
ஒன்றோடொன்று தொடர்பு உடையதாகவே இருக்கும்.
தென் பாரத மொழிகள்
தமிழ் மொழியிலிருந்து தோன்றின.
வட பாரதத்தில் அபபிரம்சம்,பாலி,சம்ஸ்க்ருதம் ,ப்ராக்ருதம்
போன்ற பல மிகப்பழமையான மொழிகள்.
இந்த பல மொழிகளில் சமஸ்கிருதம் அடிப்படையாக விளங்கியது.
இவைகள் தவிர பேச்சு மொழிகள் எண்ணிக்கையில் அடங்கா.
ஹிந்தி மொழி என்பது கடி போலி என்ற பேச்சு மொழியிலிருந்து
வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றது .
முகலாயர்கள் வணிகத்தொடர்பு கொண்டபின்னரும் அவர்கள் ஆட்சியிலும்.
சத்தீஷ் கடி,போஜ்புரி,அவதி,மார்வாடி,வ்ரஜபாஷை, மைதிலி,போன்ற
மொழிகளும் குறிப்பிடத்தக்கவை.
இம்முறையில் ஹிந்தி இலக்கிய வரலாறு என்பது 1900 கி.பி.யில் ஆங்கில
ஆட்சியில் வளர ஆரம்பித்ததுதான்.
துளசிதாசரின் ராமாயணம் ஹிந்தி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றாலும்
அது அவதி மொழியில் எழுதப்பட்டது.
சூர்தசரின் சூர் சாகர் விரஜ பாஷையில் எழுதப்பட்டது.
மீரா பஜனும் கிருஷ்ண பக்திப்பாடலும் இதே மொழியில் தான்.
இம்மொழிகள் இன்றைய ஹிந்தி மொழியின் பாலம்.
1900 கி.பி. பாரதேந்து ஹரிச்சந்திரன் தான் இன்றைய கடிபோலி அதாவது
இணைப்புமொழி அல்லது தொடர்பு மொழி என்ற
சர்ச்சைக்கு ஆளான ஹிந்தி மொழி.
தொடர்பு மொழி என்பது பலர் அறிந்துகொண்டு புரிந்து
கொண்டு வாணிகம் தொடர்பு கொள்ள எளிதாக இருக்கவேண்டும்.
அதற்காகத்தான் உலகம் போற்றும் உத்தமர் தேசபிதா மகாத் மா
ஹிந்தி மொழியைத் தேர்ந்து எடுத்தார்.
காரணம் வடமொழி தொடர்பு மொழியாக இருந்த போது
ராமாயணம் ,மகாபாரதம் போன்ற காவியங்கள் பாரத மொழிகளில்
எழுதப்பட்டன. ராமேஸ்வரம் , காசி, மதுரா ,மதுரை, காஞ்சி போன்ற
புண்ணிய ஸ்தலங்கள் சமஸ்கிருதம் தமிழ் இணைந்தன.
உண்மையான இன்றைய ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி
எழுத்தாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்..
அயோத்யா சிங் உபத்யாய,மகாவீர் பிரசாத் திவிவேதி,மைதிலி சரண்
குப்தா,ஜெயசங்கர் பிரசாத்,சுமித்திரானந்த் பந்த்,சூர்யா காந்த
திரிபாடி நிராலா, மகாதேவி வர்மா, போன்ற கவிஞர்கள்.
பிரேம்சந்த், போன்ற நாவலாசிரியர்கள்.
இந்த ஹிந்தி இலக்கிய வரலாறு இளம் தலை முறையினர்கள்
சிந்தனைக்காக.
கவிப்பேரரசு கண்ணதாசன் தன் கவிதையில் ஹிந்தி பற்றி குறிப்பிடும் போது,
ஹிந்தி மயிலே ஆடு,
தாயகம் உன்னைத்தாங்கும் என்றார்.
திராவிடக்கட்சிகள் மத்திய அரசு அமைச்சராக பதவி ஏற்ற பின்
அவர்கள் மொழிக்கொள்கை சற்றே தளர்ந்திருக்கும்.
வட பாரதத்திலும் ஆங்கிலமோகம் அதிகரித்து விட்டது.
வட பாரத தொழிலாளர்கள் தமிழகம் வரத்தொடங்கி விட்டனர்.
அண்ணாச்சி கடையில்
ஹிந்தி பேசி தமிழர்கள்
காய்கறி சென்னையில் வாங்கு கின்றனர்.
சிந்திப்பீர். செயல்படுவீர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக