வெள்ளி, டிசம்பர் 09, 2011

theivasankalpam.

அரசியலும்  ஆன்மீகமும்  சேரும்போது  மக்களுக்கு நன்மைகள் நடந்தன.இன்றும் தெய்வநம்பிக்கை உள்ள அரசியல் தலைவர்கள் நல்லன செய்கின்றனர்.
அசோகர் அரசியல் மட்டும் நடத்திய போது மக்களால் வெறுக்கும் அளவிற்கு  கொலைகாரனாக இருந்தான்.
புத்த மதத்தைப்  பின்பற்றிய பின்
அவன் செய்த நன்மைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன
.மக்கள் விரும்பும் சக்கரவர்த்தியாக மாறியது மட்டுமல்ல
நம் நாட்டு புத்த மதம்  அயல்நாடுகளில் வேருன்றி
அஹிம்சை அன்பு தொண்டு  உண்மை என்ற மனித நேய நெறிகளைப்பரப்பிவருகின்றன

மன்னர்களை தெய்வமாக தெய்வத்தின் பிரதிநிதியாகப்போற்றினர்..

ஆலயங்கள் கலைகள் வளர்க்கும் மையங்களாக இருந்தன.
மக்களிடம் தியாகம் என்ற ஒரே எண்ணத்தையும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்வுடன் வாழவேண்டும் எதையும்
விதிப்பயன்   பாவிகளின் போக வாழ்க்கையும்
 புண்ணியவான்களின் சோக வாழ்க்கையும்
 பூர்வஜன்ம பாவபுண்ணியம் என்று மக்களை   நம்பவைத்து
 நேர்மை  தியாக  வாழ்க்கை  என்றும்
 தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும்
பணம் படைத்தவன் தவறுகளை மன்னிப்பதும் நடக்கிறது.

ஒரு ஏழையின் நிலத்தில் பணக்காரன் பங்களா கட்டினால்
 ஏழை நீதிமன்றம் சென்றாலும் கட்டும் வரை என்னசெய்தாய் என்று
அவன் வழக்குமன்றம் சென்றாலும் தீர்ப்பு அவனுக்கு
சாதகமாக  பல  ஆண்டுகள்  ஆகும்.
.நமது அரசாங்க  சட்டதிட்டங்கள். அப்படி
.நில ஊழல் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
  கையூட்டு பெறுதல் , படுகொலைகள்  .
அனைத்துமே பூர்வ ஜன்ம புண்ணியங்கள்.
அவர்களுக்கு ஆண்டவன் அளிக்கும் கருணை.

நேர்மை கையூட்டு தரமாட்டேன் என்று
 வாழ்ந்து நேர்மை தவறாமல்
வறுமையில் வாடுபவர்கள்
அவர்கள் செய்த பூஜா பலன்கள்.
அவர்கள் கஷ்டங்கள்
பூர்வ ஜன்ம பாவங்கள்.
ஆகையால் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது தெய்வ சங்கல்பம்.

சத்தியவான்கள் அடுத்த பிறவியில்
 அரசியல் தலைவர்களாகவும்.

அரசாங்க அதிகாரிகளாகவும் அலுவலக எழுத்தர்களாகவும் பிறந்து
பூர்வ ஜன்ம புண்ணிய பலன்களை   அனுபவிப்பர் .
இந்த ஜன்ம ஊழல் வாதிகள் சத்யவான் களாக அடுத்த ஜன்மத்தில்  பிறந்து பூர்வ ஜன்ம சத்தியவாதிகளால் தண்டனை பெறுவார். கஷ்டங்களை அனுபவிப்பர்.

இது தான் தெய்வ சங்கல்பம்.பவ புண்யங்கள் தொடரும். தேவ சக்தி அசுரசக்திப்போராட்டம்   இருக்கும். ஆஸ்திக நாத்திக வாதம் நடக்கும்.
வாழ்க ஆ..ன்மீகம்.பூர்வ ஜன்ம பாவபுண்ணியங்கள்.

கருத்துகள் இல்லை: