சனி, அக்டோபர் 29, 2011

vinaippayan chinthanaikal.

அனந்த சக்தி
 ஆண்டவன் என்பர்.
அச்சக்தி
 கண்டோர் இல்லை.
உணர்ந்தோர் உண்டு.
நல்லோர் உருவில்
உலக நலம் காக்கும்,
உத்தமர்கள் நானிலத்தில் உண்டு.--இருப்பினும்
ஊழல் புரிந்தோரும்,உலகை அழிப்போரும்,
உன்னத வாழ்க்கை யும்,
உண்மை தாசர்கள்,
உடமை இழந்து,
உரிமை இழந்து,
உறவை இழந்து,
துன்பத்தில் சுழன்று,
உணரவைப்பதே
 நேர்மை  என்ற,
இதிகாச புராண
 வரலாற்று
 உண்மைகள்,
இந்நில உலகில்,
 பொருளே பெரிதென்று,
பொருளற்ற
 வாழ்க்கை
 வாழும் எத்தர்கள்,
ஏசுவையும் விடவில்லை,
முஹம்மத்வையும் விடவில்லை.
தர்மரையும் விடவில்லை
.ராமரையும் விடவில்லை.
இந்த தர்ம தத்துவம்
 புரிய வில்லை.
கர்ம வினை
 ,சாபம் ,
முன்வினை
 முன்ஜென்ம வினை,
என்பதே விடையானால்
,இப்பிறவி வாழ்பவர்கள்
 புரிவதெப்படி?
அப்பிறவி ,
 கண்டோரும்
அவ்வுலகம்
கண்டோரும்,
இவ்வுலக இன்றைய.
வாழ்வு!!!!??
,இன்பமுற
இறைவனே ,
இறங்கி வா.
இனிய  வரம் தா.



கருத்துகள் இல்லை: