புதன், டிசம்பர் 28, 2011

rashyaavum bhagavan krishnaleelaiyum

உலகம் போற்றும் உத்தமமான தெய்வீக நூல் பகவத் கீதை.  உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும் எடுத்துக்காட்டியது.
உலகிற்கு சகோதர  பாசத்தையும், நேசத்தையும்   ,மனித   நேயத்தையும் எடுத்துக்காட்டி  "வையகம்  வாழ்க ";வையகம் ஒரு குடும்பம்" "விருந்தினர்கள் தெய்வம் ",ஒருமைப்பாடு,அஹிம்சை,அமைதி,என்ற ஆதர்ஷங்களை நிதர்ஷ்ணப்படுதியது பாரதம்.
கிடைத்ததைக் கொண்டு  வாழ்,அதிகம் ஆசைப்படாதே,கடமையைச் செய்,பலனை எதிர்பாராதே ,நாம் எதையும் எடுத்துவரவில்லை,எதையும் எடுத்துச்செல்வதில்லை,உலகம் நிலையற்றது.என்றெல்லாம் வாழும் நெறி காட்டுவது.
இன்று ரஷ்யாவில் கீதை பற்றிய விவாதம் நீதி மன்றம் சென்றுள்ளது.அதற்கு ரஷ்யரே கூறியுள்ளார்.பகவத் கீதை அறநெறி காட்டுவது.இருபத்தைந்து ஆண்டுகளாக அப்புத்தகம் இந்த நாட்டில் உள்ளது.அதனால் எந்த பாதிப்பும் இல்லைஎன்று.
என் சிறிய அறிவில் தோன்றியது இதுதான்.இதுவும் இறைவனின் லீலை தான்.
இதுவரை கீதையைப்பற்றி கேள்விப்படாத மேலும் கீதை படிக்காத வெளிநாட்டினரும் கீதை படிக்கத் தூண்டுகோலாய் இந்த வழக்கு அமைகிறது.
அதில் அப்படி என்ன விசேஷம் என்று படிக்காதவர்களும் படித்து கிருஷ்ணா பரந்தாமன் புகழ் பாடத்தான் போகிறார்கள்.இறைவன் ஸ்ரீ கிருஷ்ண லீலை எப்படி இருக்கு.

கருத்துகள் இல்லை: