செவ்வாய், டிசம்பர் 06, 2011

old plot in new capsule.palaiya karukkal puthiya uraiyil.

நம் இலக்கியத்திலும் பழங்கதைகளிலும் இல்லா கதைக்கரு,
இன்றைய சமுதாயத்தில் உள்ளதா/?
என்றால்...இல்லை என்றே கூறலாம்.
பழமையை படிக்காதவர்களுக்கு
அனைத்தும் புதுமையே.
காதல்  என்ற கரு,
பங்காளிப்பகை,
அரண்மனையில் புக
கையூட்டு.
,
சகோதரி சகோதரி கணவனை
சிறையில் அடைப்பது,
மாற்றான் மனைவியை
கவர்ந்து செல்வது,
தம்பி  மனைவியை
தன் மனைவி  ஆக்கிக்கொள்வது ,
அதற்கு  விலங்கினம்  என
சப்பைகட்டுவது.
அதே இன ஆஞ்சநேயனை
இறைவனாக்குவது,
இனத்துரோகம்
கணவனிடம் தப்பிக்க
கணவனை  கொன்ற காரிகை,
சக்களத்திப்போராட்டம்
கலப்பு மணம்,
கட்டாயமணம்,
மாற்றாந்தாய் கொடுமை,,
மாறுவேட வாழ்க்கை,
சூழ்ச்சி,தப்பித்தல்,
மேல்ஜாதி கீழ்ஜாதி ஒற்றுமை,
கீழ் ஜாதியில் பிறந்தவன்
மேல்ஜாதித்தந்தையால்
ஒதுக்கிவைத்த விதுரன்
தொட்டி குழந்தை கர்ணன்,
ஐந்து தேவர்களுக்கு
மந்திர மகிமை அறிய,
பிறந்த பாண்டவர்கள்,
தந்தை யாரென்றே தெரியா,
முனி ஆசியால் பார்வையால்,
கலச பாணத்தால் பிறந்த
குழந்தைகள்
சோதனைக் குழாயா//?
வாடகைத்தாயா?
அரசனின் வாரிசுக்காக,
முனிவர்களுடன் சேர்ந்து
பெற்ற குழந்தைகள்.
இந்த அனைத்துக்  கதைக்கருக்களும்
இன்றைய சின்னத்திரை.பெரிய திரைகளில்.
இவை அனைத்தும்
மிகப்பழைய கருக்கள்.
எப்படி என்றால்,
பழைய கசப்பான மருந்துகளை,
கேப்சூல்களும்,ஸ்வீட் கோட்டின்காலும்.
வண்ணப்பூச்சாலும்.
புதுமை வடிவம்,புது சுவை,
தருவது , பெறுவதுபோல்.

அனைத்துமே இராமாயண மகாபாரதக்கதைகள்.
ஆழ்ந்து படித்தவர்களுக்கு பழமை..
புதிய தலைமுறையினருக்குப் புதுமை.

,


s

கருத்துகள் இல்லை: